சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 1 November 2012

மாற்றுவழி தேடுகின்றேன்...!



இறந்த பின்பும் இதயம் திருட
இரக்கம் எங்கே இறங்கியதோ
பிறக்கமுன்னே அறிந்து கொள்ள
உறக்கம் கொண்டேன் சாபமோ.....!

பாலைக்கு பால்வற்ற 
எருக்கலைக்கு எகத்தாளம்
இருக்குதென்ற இறுமாப்பில்
எருமைக்கு உணவாச்சே...!

மலையும் மடுவும் இங்கே
மனங்களுக்குள் மணம் பேச
மத்தாப்பு வெடிபோல
மழைக்காற்று அணையுடைப்பு...!

வில்லுக்கு நாண் இல்லை
விற்பன்னர் துணையில்லை
விதியென்று விழிமூட
வீரனுக்கு ஆசையில்லை...!

பசையற்ற கைகளுக்கு
பசியறிய உணர்வுண்டு
பகுத்தறிய ஆளில்லா
பார்பற்றி என்சொல்வேன் ...!

மொழிகள்  விழுங்கி என்றும் 
விழிகள் மரிப்பதில்லை 
சுழியம் அகன்றுவிட்டால் கணித
வழிகள் புரிவதில்லை...!


பொய்கைகைக்குள் பூப்பதனால்
புற்களல்ல தாமரைகள்
மண்ணுக்குள் மின்வதனால்
பொன்னல்ல வெண்கற்கள்.....!


தாகத்தில் நீந்துகின்றேன்
தண்ணீரில் தவமிருந்தே என்
மோகத்தை தேடுகின்றேன்
மௌனத்தின் ராத்திரியில்...!

ஊழ்வினைக்கு தாழ்ப்பாள்
உருக்கித்தர கொல்லனில்லை
வாழ்மனைக்கு வடிகால்
வந்துவெட்ட யாருமில்லை...!
சேற்றோடு புதைந்த
சிறு நாற்று ஆனதனால்
மாற்றுவழி தேடுகின்றேன்
மறு ஜென்மம் பெற்றிடவே...!

ப்ரியமுடன் சீராளன் 

2 comments:

சசிகலா said...

சேற்றோடு புதைந்த
சிறு நாற்று ஆனதனால்
மாற்றுவழி தேடுகின்றேன்
மறு ஜென்மம் பெற்றிடவே...!
அற்புதமான வரிகள் அருமைங்க.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சசிகலா