சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 13 December 2012

நிஜமில்லா நிஜங்கள்! ..!



சினைமுட்டை சிதைந்தன்று 
செத்திருந்தால்  கருவறையில் 
என்னை நான் தேடுகின்ற 
வினை வாழ்வு அகன்றிருக்கும்...!

காற்றினில் மொழிதேடி 
கார்குழல்கள்  கவிஎழுதி 
அகலவிழி  பாடுகையில் 
அணைத்திருந்த பொழுதெங்கே ..!

பட்டீர்  பட்டீர்  என்று 
பட்டினத்தார் சொன்ன கவி 
விட்டகலா வேதனையை 
தொட்டுவிட்டீர் என்பதற்கோ....!

பருத்தி கொடியினிலும் 
நெருந்தி முள் பூத்ததனால் 
உட்கார்ந்து அழுவதற்கும் 
ஒருகிளையும் எனக்கில்லை...!

அக்கினி நாடகத்தில் 
அனல் வார்த்தை ஆனதுபோல் 
வெந்துதான் போகின்றேன் 
வேதனையின்  வேள்வியிலே  ..! 

விற்பனையில்  கொட்டுகின்ற 
விளம்பர போலிகளாய் 
சொர்ப்பனங்கள் காட்டுகின்ற 
அற்புதங்கள் நிஜமில்லை ...!

மழைக்கால மரப்பூவாய் 
மனமின்றி உதிர்ந்தாலும் 
வாழ்வும் செழிப்புதிர்க்கும் 
வண்ணமுள்ள வானவில்தான்..! 

ப்ரியமுடன் சீராளன் 


4 comments:

Anonymous said...

வார்த்தைக்கட்டுகள் ஒவ்வொன்றும் மிக அருமை. மிக நளினமாக உள்ளது. இனிய நல் வாழ்த்து சகோதரா(நண்பா) எதைச் சொல்ல!....
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி வேதா எளிமையும் நளினமுமாய் எழுதுவது எனக்கு பிடிக்கும் ......நீங்கள்,நண்பனாகவோ ,இல்லை சகோதரனாகவோ எப்படியும் அழைக்கலாம் வாழ்க வளமுடன்

சசிகலா said...

மழைக்கால மரப்பூவாய்
மனமின்றி உதிர்ந்தாலும்
வாழ்வும் செழிப்புதிர்க்கும்
வண்ணமுள்ள வானவில்தான்..!

அற்புதமான வார்த்தைக் கோர்வைங்க மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள்.

சீராளன்.வீ said...

மிக நன்றி சசி கலா என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும்