அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!
கொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்
மெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே -பட்டுடுத்தி
மொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்
வட்டக் குடைபோல் வளைந்து !
பொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்
என்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்
வெந்துனிதம் மேனி வியர்க்கையிலே ! உன்நினைவும்
கந்தமாய் வீசும் கமழ்ந்து !
நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்தே
நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
அமிழும் உயிருக்குள் அன்பு !
வெந்தழியும் வேளையிலும் வேகாதே உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும் தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !
கன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும்
என்பாவுக் கென்றும் எழில்!
பிரியமுடன் சீராளன்
31 comments:
வணக்கம்!
சொல்லுருகிப் பாடும் சுடா்கவி சீராளன்
உள்ளுருகிப் பாடும் உணா்வுடையோன்! - உள்ளத்துள்
கொஞ்சுதமிழ் மின்னக் கொடுத்துள்ள வெண்பாக்கள்
நெஞ்சிதழில் மின்னும் நிலைத்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
சுகமான வரிகள்...
வாழ்த்துக்கள்...
உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...
வணக்கம்!
தம்பி சீராளா!
என்வலைப் பூவைப் படிக்க இணைத்துள்ளாய்
உன்வலையில் உள்ளம் உவந்தினிதே! - நன்றிபல!
ஓங்குதமிழ் வாழும் உயா்ந்த பணியாற்றித்
தேங்குபுகழ் காண்க தெளிந்து!
என்றன் வலையின் எழிலைச் சுவைத்திடவே
உன்றன் வலையில் உருகொடுத்தாய்! - நன்றி
உரைத்து மகிழ்கின்றேன்! ஒண்டமிழ்ச் சீரள்ளி
நிரைத்து மகிழ்கின்றேன் நெஞ்சு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அழகு தமிழ் துள்ளி விளையாடக் கவிதை தொகுத்திருக்கிறீங்க.. மிக நன்று.
அண்ணா மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் தெவிட்டாத அமுதமாய் என்னுள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது வரிகள் அனைத்தும்.... வார்த்தைகளே இல்லை அண்ணா என்னிடத்தில் விமர்சிக்க...
வெந்தழியும் வேளையிலும் வேகாதே உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும் தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !
உள்ளுக்குள் உறைந்து உயிரை வாட்டும் உன் வரிகள் எம் நெஞ்சையும் உருக்கிடும் நின்று..!
கற்பனையும் சொற்திறனும் கண்டு ஆச்சரியம் உச்சம் கொள்கிறது.
நன்றி....!வாழ்க வளமுடன்.....!
அருமையான கவிதை காதல் ரசம் ரசித்தேன்.
ஆகா...
வணக்கம்
சிறப்பான காதல் சுவை மிக்க கவிதை...ஒவ்வொரு வரியிலும் காதலின் அழுத்தம் தெரிகிறது. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரா ..
வாயார வாழ்த்தி மனதார
வணங்குகின்றேன்
சீராளன் புகழை ஈட்ட
சேர்ந்தாடு செந்தமிழே போற்றி !
நெஞ்சிதழில் மின்னும் நிலைத்தென்றே சொன்னவரி
விஞ்சியதே என்றன் விழிமடலில் - கொஞ்சும்
தமிழினிக்கும் சொற்சுவையில் தந்தகவி! சேர்க்கும்
அமிழ்தெம் மொழிக்கே அழகு !
இனிய வணக்கம் கவிஞர் கி. பாரதிதாசன் அண்ணா
தங்கள் வரவும் கருத்து வெண்பாக்களும் கண்டு இன்புற்றேன்
என்றும் உங்கள் வழிகாட்டலில் தொடரும் என் கவிப்பயணம்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
இனிய வணக்கம் தனபாலன் சார் !
தங்கள் கருத்தும் அக்கறையோடு என் வலையில் தமிழ்மணம் வாக்களிக்கும் பதிவு பட்டையினை இணைத்தமைக்கும் என்றென்றும் நன்றிகள்
வாழ்கவளமுடன்
asha bhosle athira கூறியது...
அழகு தமிழ் துள்ளி விளையாடக் கவிதை தொகுத்திருக்கிறீங்க.. மிக நன்று.
இனிய வணக்கம் அதிரா !
தாங்கள் பெயர் மாற்றிவிட்டீங்களோ தெரியலையே
ம்ம் நல்லது தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா !
வாழ்கவளமுடன்
இனிய வணக்கம் தங்கையே ப்ரியா !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா !
வாழ்கவளமுடன்
இனிய வணக்கம் சகோ இனியா !
உள்ளுக்குள் உறையும் ஒற்றை நிலவதற்கே
அள்ளிச் சொரிகிறேன் ஆத்மாவை
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
இனிய வணக்கம் தனிமரம் !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
இனிய வணக்கம் சீனி !
ஆஹா போட்டாலும் அழகுதான்
ஆயிரம் அர்த்தம் அதனோடு சேர்வதால்
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
இனிய வணக்கம் ரூபன் !
தேடிவந்து வாழ்த்துகின்ற
தெய்வீக குணம்கொண்டீர்
நாடிவருவேன் நானும்
நன்றிகள் சுமந்துகொண்டு !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
இனிய வணக்கம் சகோ அம்பாளடியாள் !
நல்லோர் வாழ்த்தில்
நலம்பெற்றால் நாள்தோறும்
வல்லோன் வாழ்த்தாகும் - நல்
வரமெந்தன் சொத்தாகும்
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ
வாழ்கவளமுடன்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் ரூபன் & தனபாலன் சார்
தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
அருமையான கவிதை...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!
சிறந்த பகிர்வு
இனி
அடிக்கடி வருவேன்
இனிய வணக்கம் ஜெயசரஸ்வதி.தி
தங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தருகின்றது
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
இனிய வணக்கம் Jeevalingam Kasirajalingam
தங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தருகின்றது
தொடருங்கள் கண்டிப்பாய்
வாழ்த்திற்கு மிக்க நன்றி
காணக்கண்கோடி வேண்டும்!
தளம் மிளிர்கின்றது, மனதை
வலிக்கச்செயும் சுகமான வரிகள்!
ஒருகுழந்தையை கொண்டுபோய்
பொம்மை கடையில் விட்டு
கை நிறைய ஐஸ்கிரீம் கொடுத்தா
அந்த குழந்தையின்நிலை தான்
என்நிலையும்.ஒரு கவிதை மட்டுமே
வாசித்தேன் அனைத்தையும் படிக்கவேண்டும்.நன்றி சகோ.
மொழிதெரியும் கொண்ட வலிபுரியும் உங்கள்
விழிதிறந்த அவ்வழகு வாழ்க!-எழிற்றமிழுக்[கு]
அவ்வளவும் பேரழகு ஆனமையால் உம்மனப்பெண்
எவ்வளவும் போற்றத் தகும்!
மிக்க நன்றி மாலதி தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன் நேரம் போதாமையால் உடன் நன்றி சொல்ல தவறியமைக்கு வருந்துகிறேன்
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஜோசப் தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன் நேரம் போதாமையால் உடன் நன்றி சொல்ல தவறியமைக்கு வருந்துகிறேன்
வாழ்க வளமுடன்
Post a Comment