சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 16 June 2014

நெஞ்சோடு பேசும் நினைவுகள் !





புத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்
முத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்
வித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்
இத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி    !

இன்பத்துப் பாலுக்கும் இலக்கணமாய் மௌனங்கள்
கன்னலிடை அசைவினிலே காட்டுகின்ற சில்மிசங்கள்
மின்னலென  மறைகின்ற மிடுக்கான வெட்கங்கள்
இன்னுயிரை வதைக்கின்ற  இதயத்தின் ஸ்வரங்களடி  !


நெஞ்சோடு நிழலாடும் நினைவெல்லாம் உனதாக
வெஞ்சினத்தை அழிக்கின்ற வெண்பார்வை உனதாக
பஞ்சணைகள் கமழ்கின்ற பவளமல்லி உனதாக
அஞ்சலையுன் ஞாபகங்கள் ஆன்மாவில் ஜொலிக்குதடி

எண்ணரிய ஏக்கங்கள் ஏகாந்தம் எரித்தாலும்
நுண்ணறிவு இழையெல்லாம் நோயுற்று  அரித்தாலும்
விண்ணுதிரும் பூமழையும் வெப்பங்கள்  சொரிந்தாலும்
கண்ணுக்குள் நீதந்த கனவென்றும்  அழியாதே !

உள்ளிருக்கும் ஆன்மாவின் உயிரணுவில் துளியெடுத்து
பள்ளியறைக் கனவுகளின் பவ்வியத்தில் மடலெடுத்து
வெள்ளிநிலா வெளிச்சத்தில் விரகத்தின் அணையுடைத்து
அள்ளியின்பக் கவியெழுத ஆருயிரே நீ..வேண்டும் ..!

பிரியமுடன் சீராளன் 

24 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நெஞ்சை அள்ளிச்செல்லும் கவிதை ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது. காதல் உணர்வுகள் சிந்து பாடுகிறது...வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அம்பாளடியாள் said...

அன்பெனும் இன்ப ஊற்று
அகத்திலே பெருக்கெடுக்க
சிந்தையைக் கவர்ந்திழுக்கும் நற்
சீரடி வகுத்தான் அன்பன்
விந்தையாம் வாழ்வியலை
விரும்பியே படிக்க நாமும் !!...

அருமை !அருமை ! அருமை சகோதரா வாழ்த்துக்கள் தேன்சிந்தும் கவிதை வரிகளால் திசை எட்டிலும் புகழே ஓங்குக ...!!

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரர்
ஆழமான உணர்வால் பூத்த அழகிய கவிதைகள். வார்த்தைகளை எப்படி தான் பிடிக்கிறீர்களோ என்று யோசித்து வியக்கிறேன் அவள் வருவாள் எனும் நம்பிக்கையோடு. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே.

Seeni said...

அருமை அருமை.
சகோ..

Priya said...

அண்ணா அருமை அருமை அருமை... அவ்வளவே சொல்ல....

Iniya said...

எண்ணரிய ஏக்கங்கள் ஏகாந்தம் எரித்தாலும்
நுண்ணறிவு இழையெல்லாம் நோயுற்று அரித்தாலும்
விண்ணுதிரும் பூமழையும் வெப்பங்கள் சொரிந்தாலும்
கண்ணுக்குள் நீதந்த கனவென்றும் அழியாதே !
அருமை அருமை சீராளா!
தரும் ஒவ்வொரு வரிகளும் வியப்பையே தந்தாலும் வேதனையையும் மிக செய்கிறது.

கண்ணுக்குள் நீ வைத்த கனவு அழியாமல் நீறாகி போகட்டும் உன் ஆறாத துயரம்.
நன்றி ! வாழ்க நலமுடன்...!

Yarlpavanan said...

"உள்ளிருக்கும் ஆன்மாவின் உயிரணுவில் துளியெடுத்து
பள்ளியறைக் கனவுகளின் பவ்வியத்தில் மடலெடுத்து
வெள்ளிநிலா வெளிச்சத்தில் விரகத்தின் அணையுடைத்து
அள்ளியின்பக் கவியெழுத ஆருயிரே நீ..வேண்டும்..!" என்ற அடிகளில்
உங்கள் கவிதையின் மூச்சுத் தெரிகிறது!
சிறந்த கவிதை!

எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
visit: http://ypvn.0hna.com/

ஊமைக்கனவுகள் said...

அன்புச் சீராள!
உங்களின்
சொற்களின் சிலம்பாட்டத்தில் தோற்றுப் போகிறாள் அவள்!
வென்ற வெட்கத்தில் முகம் சிவக்கிறது காதல்!
பதிவினுக்கு நன்றி!

சீராளன்.வீ said...

வணக்கம் ரூபன்..!

தங்கள் முதல் வருகைக்கும் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றிகள்

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் அம்பாள் அடியாள் !

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் பாண்டியன் !

வார்த்தைகளை தேடவில்லை
வாக்கிலே வருகின்றது எழுதினேன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சீனி !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ப்ரியா !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
எல்லாம் அவன் செயல் !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஜீவலிங்கம் !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கண்டிப்பாக தங்கள் தளத்தையும் பார்க்கிறேன்

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ ஊமைக்கனவுகள் !

காதல் என்றால் இப்படித்தானோ !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

வாழ்க வளமுடன்

இளமதி said...

வணக்கம் சகோதரா!

கண்ணுக்குள் கொண்ட காட்சி மறைந்தாலும்
பெண்ணோடு தான்கொண்ட பிணைப்பது மாறாதே!
மண்ணுக்குள்ளே வேர் மறைந்தே கிடப்பதுபோல
உன்னுள் உறைந்தவைகள் உரைத்த கவியருமை!

கொட்டிக் குவித்த வார்த்தைகள் நெஞ்சைத்
தட்டிக் கொண்டு போனதடா...

மிக மிக அருமை! மேலும் வார்த்தைகள் இல்லை அதிகம் என்னிடம்...

வாழ்த்துக்கள் சகோ!

இளமதி said...

இனிய வணக்கம் சகோ!

உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

முற்றும் அறிந்த அதிரா said...

ஏற்கனவே அங்கு படிச்சிட்டேன் சீராளன்.. இருப்பினும் மீண்டும் படிக்க அலுக்கவில்லை, அருமையாக இருக்கு.

சீராளன்.வீ said...

வணக்கம் இளமதி அக்கா நலமா....!
தங்கள் வரவுக்கும் கருத்து கவிக்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன் !

ஆமா என்னையும் கொழுவி விட்டாச்சா ரொம்ப சந்தோசம் ஹா ஹா ஹா ....! எதுக்கு இந்த கொலைவெறி !

சீராளன்.வீ said...

வணக்கம் அதிரா !
அலட்டல்கள் இன்றி அழகாய் கருத்திடுகின்றீர்கள் ஆச்சரியம் கொள்கிறேன்...அதிலும் மியாவ் இல்லாத கருத்தில் ஏதோ வெறுமை !

மிக்க நன்றி அதிரா தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். கவிதையை ரசித்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

சீராளன்.வீ said...

வணக்கம் ஜம்புலிங்கம் ஐயா !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கண்டிப்பாக வருகிறேன் தங்கள் வலைக்கு

வாழ்க வளமுடன் !