சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 9 December 2015

உன்னால் முடியாதெனில் ...!



நாரும் மணத்திடப் பூக்கள் சிரித்திடும்!
          நன்மண் கரங்கொடுக்கும்!
நாளும் மனிதரைச் சூழும் நன்னெறி
         நன்றே வரங்கொடுக்கும்!
சேரும் கனவினைச்  சிந்தை நிறைந்துளம்
         செய்தல் நலங்கொடுக்கும்!
சேவை சிறந்திடச் சீர்கள் நிறைந்திட
        செய்க புகழ்தொடுக்கும்!
ஊரும் எறும்பென ஒன்றாய் நடந்திட
        உயர்வு நிலையொளிக்கும்!
உள்ளம் துளைத்திடும் எண்ணம்  பகைஅழி
        ஒண்மை படையெடுக்கும்!
தீராக்  குறைகளும் திண்மை மனங்கொளத்
        தீயில் எரிந்திருக்கும்!
தேகச் சுமைகளைத் தேடி அழித்தெறி
        செல்வம் சொரிந்திருக்கும் !



நாடு நலம்பெற நாளும் உழைத்திடு
         நன்றி உயிரணைக்கும்!
நாவை அடக்கியே  நற்சொல் உரைத்திடு
         நாடும்  உனையணைக்கும்!
கோடு போட்டொரு கொள்கை வகுத்திடு
         கொஞ்சிக்  குலமணைக்கும்!
கொள்ளை இழிசெயல் கூட்டும் மனத்தழி
        குன்றாப்  புகழணைக்கும்!
காடு வளம்பெறக் காட்டு வழிகளைக்
         காலம் உனைவளர்க்கும்
கண்ணை இமைகளும் காக்கும் செயலறி
         காலம் புகழ்கொடுக்கும்!
கூடு நிலையிலை! கோபம் பயனிலை!
        கூறும் நெறியுயர்த்தும்!
கூவும் குயிலென கூவி மகிழ்ந்திரு
        கொஞ்சி இறையணைக்கும்!

பிரியமுடன் சீராளன்

22 comments:

KILLERGEE Devakottai said...


வணக்கம் கவிஞரே நம்பிக்கையூட்டிய வரிகள் வழக்கம் போலவே ரசித்தேன் வாழ்த்துகள்.

சீராளன்.வீ said...

வணக்கம் ஜி !

தங்கள் உடனடி வருகைக்கு என் வந்தனங்கள் இனிய கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் !

ஆமா பதிவிட்டு விட்டு தமிழ் மணத்தில் இணைக்கும் நேரத்துக்குள் உங்கள் கருத்து வந்திருக்கிறது எப்படி ஜி இப்படியெல்லாம் உங்களால் மட்டும் முடிகிறது !

மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

KILLERGEE Devakottai said...

//நாங்க அப்படித்தான் உங்களைப்போல் இல்லை// நானும் தமிழ் மண இணைப்பில் குழறுபடியாகி இப்போது மீண்டும் வருகிறேன்
தமிழ் மணம் 2

Nagendra Bharathi said...

அருமை

மீரா செல்வக்குமார் said...

நல்ல கவிதை ..ரசிக்கிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

அருமை நண்பரே! மிகவும் ரசித்தோம்...

அம்பாளடியாள் said...

புலமையால் உச்சம் பெற்ற கவிதை வரிகளைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தது கவிஞர் சகோதரா !வாழ்த்துக்கள் மென் மேலும் வளம் பெறுவீர் .

கரந்தை ஜெயக்குமார் said...

காடு வளம்பெறக் காட்டு வழிகளைக்

உண்மைதான் நண்பரே
அருமை ரசித்தேன் மகிழ்ந்தேன்
நன்றி
தம +1

Unknown said...

கோபம் பயனிலை...உண்மையான வரி :)

Iniya said...

ஆஹா ஆஹா! அருமை அருமை ! பாவலரே

அத்தனையும் பொன்னென பொறித்த வாசகங்கள். எத்தனை உண்மையான வரிகள் பார்த்து என் வசமிழந்தேன் வார்த்தைகளே வரவில்லை ஐயனே. தங்கள் நுண்ணறிவு கண்டு பிரமிக்கிறேன். நினைத்து நினைத்துப் பெருமைப் படுகிறேன் தங்கள் ஆற்றலை எண்ணி. மேலும் கவித்துவம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! வாழ்க நலமுடன்....!

நானெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதுப்பா. wow

balaamagi said...

அருமையான பா வரிகள் பாவலரே,

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

சீராளன்.வீ said...

ஹா ஹா ஹா கில்லர் ஜி நீங்க நல்லவர் வல்லவர் அதுதான் உடனே வருகின்றீர்கள் நாமெல்லாம் அப்படி இல்லையே அதுதான் லேட்டா வருகிறோம் ...ம்ம் நன்றி மீள்வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி நாகேந்திர பாரதி !

என் வலைப்பூவில் தங்கள் முதல் வருகை கண்டு மிக மகிழ்கிறேன் தொடருங்கள் தொடர்கிறேன் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

நான் ஒன்று சொல்வேன் !

ஒன்றுதானே சொல்லிட்டீங்க அதுவும் உயிரில் இருந்து மிக்க நன்றி நண்பரே தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வாருங்கள் ஐயா துளசிதரன் அவர்களே !

தங்கள் ரசனைக்கு என் முதல் வணக்கம் மிக்க நன்றி நண்பரே தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வாருங்கள் சகோ அம்பாள் அடியாள் தங்கள் வரவு கண்டு மகிழ்கிறேன்

ஆமா அதென்ன புலவர் அப்படி ஒன்றும் இல்லை ஏதோ தெரிந்ததை வைத்துக் கிறுக்குகிறேன் அவ்வளவே ! மிக்க நன்றி தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் கரந்தை மைந்தா !

மிக்க நன்றி தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

அடடே பகவான் ஜி தங்களைக் காண்பதே ஆனந்தமாய் இருக்கிறது என் வலையில்
மிக்க நன்றி தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வந்ததும் என்னால் முடியாது அப்படி இப்படி என்றெல்லாம் பொய் சொல்லக் கூடாது இனியாம்மா தங்கள் வலையில் அற்புதமான கவிதைகளை எல்லாம் கண்டு இருக்கிறேன் ஆதலால் என் கவிதைகளை அற்புதம் என்று சொல்லாதீங்க நான் சொல்லணும் தங்கள் கவிதைகளைப் பார்த்து ! மிக்க நன்றி தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வாருங்கள் பேராசிரியரே மகேஸ்வரி பாலச்சந்திரன் !

தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

Nagendra Bharathi said...

கவிதை அருமை

சாரதா சமையல் said...

கவிதை மிக அருமை.