சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday, 5 November 2020

நாணக் குடை !



ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் 

ஏடும்ம ணத்திடும் வாசனை யோ ?

தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் 

தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில்  !


மின்னல சைத்திடும் மோகவி ழி - உயிர் 

மீட்டியி சைத்திடும் கோதைமொ ழி 

தன்னல மற்றொரு பார்வையி லே - கவி 

தாண்டவ மாடுது   ஓர்மையி லே ! 


பண்ணில டங்கிடாப் பாவின மோ ?  - கம்பன் 

பாடம றந்தொரு பூவின மோ ?

எண்ணில டங்கிடாக்  கற்பனை கள் - அவள்

ஏக்கத்தி லாயிரம் சொப்பனங் கள்!


ஒய்யார மாகவே சாய்ந்திருப் பாள்- வண்ண 

ஒப்பனை  அற்றெழில்  சேர்த்திருப் பாள்!

பொய்யாமொ ழிக்குள்ளே பூத்தம றை - இவள் 

போகுமிட மெங்கும்  பூக்கும்பி றை ! 


ஆயக லைகளில்  ஓவிய மோ? - வஞ்சி 

ஆனந்த யாழிசைக் கீர்த்தனை யோ ?   

தூயம ணந்தரும் ஜாதிமுல் லை -என்றும் 

தூவிடுந் தாதினில்  பேதமில் லை !


நாணக்கு டையவள் கண்ணிமை கள் - வாழும் 

நாகரி கங்களின் வல்லமை கள் 

காணக்கி டைக்குமோ தோணவில் லை  - இவன்

கானல்நீ ராகினான் சாரலில் லை !


பாவலர் சீராளன்.வீ 

2 comments:

பிலஹரி:) ) அதிரா said...

ஆஆஆஆ கவித கவித... மேஜரே எங்கின போயிருந்தீங்க இவ்ளோ காலம்... காணவில்லை எனத் தேடினோம், நெல்லைத் தமிழனும் கேட்டார்...

அதுசரி கவிதையின் ட்றக் மாறியிருக்குதே:)... மணமகள் வந்தாச்சோ?:)...

சீராளன்.வீ said...

வணக்கம் பூஸாரே!

எல்லோரும் நலம்தானே எனக்கு நேரமே இல்லை அதனால் வலைப்பூவை மறந்தாச்சு ஒருநாள் விடுமுறை கிடைத்தது அதுதான் கவிதை எழுதினேன் அதுவும் திருப்தியா இல்லை இருந்தும் கருத்திட்டமைக்கு நன்றிகள் ! நலம் விசாரித்த நெல்லைத்தமிழனுக்கும் நன்றிகள் வாழ்க நலம் !

நமக்கு பாதைகள் என்றும் மாறப்போவது இல்லை கடைசிவரை ஒரே பாதைதான் ஹா ஹாஹா