]
உயிரின் மொழியில் கவிதை
உனக்கென எழுதும் பொழுதில்பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்
குயிலினை மிஞ்சும் குரலில்
குழவியாய் பேசும் எழிலில்
பயின்றிட வாழ்வும் இனிக்கும்
பாவையுன் பார்வை வரைக்கும்
முத்தத்தில் ஈரம் இன்றி
மூச்சினை தந்தாய் நன்றி
ரத்தத்தில் அதுவே கூடி
ரணங்களை அழித்தது கோடி
புத்தியில் என்னை வளர்க்கப்
புன்னகை தினமும் பூத்தாய்
நித்தியம் வருவேன் உந்தன்
நினைவுகள் தேடித் தேடி
மலைகளில் மேகம் மோதி
மழலையாய் சிந்தும் கண்ணீர்
சோலைகள் நழுவும் பூவை
சொந்தமாய் அள்ளிச் சேர்க்கும்
அலைகடல் திலகம் இன்றி
அமைதியாய் வெறுமை காக்க
விலையிலா விண்மீன் நீயேன்
விலகினாய் வானம் விட்டு
மறைபோல் உந்தன் அன்பை
மறந்திடா பாவி எந்தன்
நிறையாத குடமாய் கண்ணை
நீங்கிடும் துளிகள் சொல்லும்
இறையினை தேடும் இவனின்
இதயத்தின் சுவரில் எல்லாம்
பிறைநிலா உனது விம்பம்
பிழையின்றி வரைந்தான் என்று
தேற்றங்கள் இல்லாக் கணிதம்
தேறாத விடையை காட்டும்
சீற்றங்கள் கொள்ளும் ஜோடி
சிதறிடும் பிரிவை தேடி
மாற்றங்கள் தேடும் மனதில்
மானிடர் காதல் தன்னில்
ஊற்றுக்கண் உணர்வே அன்றி
உலகத்தில் ஏதும் இல்லை
பிரியமுடன் சீராளன்
29 comments:
good... (from android)_
மிக்கநன்றி தனபாலன் சார்
முதல் ஆளாகவந்து கருத்திட்டமைக்கு
கைபேசியில் இருந்தாலும்
கண்டிப்பாய் கருத்து சொல்லும் பண்பு பெரியது
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வணக்கம்
கவிதையின் வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
''..உயிரின் மொழியில் கவிதை
உனக்கென எழுதும் பொழுதில்
பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்...''' மிகச் சிறப்பான வரிகள் .இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
mmmm....
suparungo...
காதலின் ஆழத்தைக் கவியென
பொழிந்த மழையே மோதலும்
ஒரு வகை இன்பம் என்றே தொடரட்டும்
முடிவில்லாக் காதல்(கவிதை)நன்றே !!
வாழ்த்துக்கள் சகோதரா .
2008rupan கூறியது...
வணக்கம்
கவிதையின் வரிகள் மிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்
தங்கள்வரவும்
கருத்தும் என்னை மகிழ்வூட்டுகின்றன
மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
kovaikkavi கூறியது...
''..உயிரின் மொழியில் கவிதை
உனக்கென எழுதும் பொழுதில்
பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்...''' மிகச் சிறப்பான வரிகள் .இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாருங்கள் kovaikkavi
தங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும் என்னை மகிழ்வூட்டுகின்றன
மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
அம்பாளடியாள் வலைத்தளம் கூறியது...
காதலின் ஆழத்தைக் கவியென
பொழிந்த மழையே மோதலும்
ஒரு வகை இன்பம் என்றே தொடரட்டும்
முடிவில்லாக் காதல்(கவிதை)நன்றே !!
வாழ்த்துக்கள் சகோதரா .
வாருங்கள் அம்பாளடியாள்
தங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும்கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்
மிக்க நன்றி சகோ
வாழ்கவளமுடன்
Seeni கூறியது...
mmmm....
suparungo...
வணக்கம் சீனி
சரிங்கோ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
இதயத்தின் ஏக்கம் எழுந்ததே பாக்கள்
உதயத்து ராகமென ஓது!
காதல் கனிந்தாலும் கரைந்தாலும் வலியது.
வார்தைகளில் அதன் ஆழம் நன்கே புலப்படுகின்றது.
அருமையான சொற்பிரயோகங்களுடன்
அழகிய கவிதை!
வாழ்த்துக்கள் சகோ!
// இளமதி கூறியது...
இதயத்தின் ஏக்கம் எழுந்ததே பாக்கள்
உதயத்து ராகமென ஓது!
காதல் கனிந்தாலும் கரைந்தாலும் வலியது.
வார்தைகளில் அதன் ஆழம் நன்கே புலப்படுகின்றது.
அருமையான சொற்பிரயோகங்களுடன்
அழகிய கவிதை!
வாழ்த்துக்கள் சகோ!//
வாருங்கள் சகோ
தங்கள் வாழ்த்துகண்டு மகிழ்ச்சி
மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
* என்னுயிர் ஏங்கி எழுதுகின்ற வார்த்தையெல்லாம்
மன்னுயிர்க்கு சொல்லும் மனு *
காதல் கவிதை காதல் கவிதை அருமை சிலிர்க்க வைக்கின்றது சகோ!
வணக்கம்!
மரபின் வடிவில் வடித்திட்ட சொற்கள்
விரவும் திறனின் விளைவு
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தேற்றங்கள் இல்லாக் கணிதம்
தேறாத விடையை காட்டும்
சீற்றங்கள் கொள்ளும் ஜோடி
சிதறிடும் பிரிவ தேடி
தோற்றங்கள் தரும் பிரம்மை
தோல்வியை தழுவி கொள்ளும்
மாசிலாக் காதல் மட்டும்
மனசினில் வாழும் என்றும்
இதயத்தை வாட்டிக் கொல்லும்
தென்றலே வேதனையில் வாட்டும் பிள்ளை நினைவினை வாரிச் செல்லும் விந்தையை வாழ்வில் செய்யும்.
மறைபோல் உந்தன் அன்பை
மறந்திடா பாவி எந்தன்
நிறையாத குடமாய் கண்ணை
நீங்கிடும் துளிகள சொல்லும்
நெஞ்சை உருக்கும் வரிகள். இருந்தும் ரசித்தேன். அருமை அருமை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்....!
//தனிமரம் கூறியது...
காதல் கவிதை காதல் கவிதை அருமை சிலிர்க்க வைக்கின்றது சகோ!//
வாருங்கள் சகோ
ஆமாம் காதல் கவிதையேதான் தனிமரம்
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
//கி. பாரதிதாசன் கவிஞா் கூறியது...
வணக்கம்!
மரபின் வடிவில் வடித்திட்ட சொற்கள்
விரவும் திறனின் விளைவு
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//
வணக்கம் கவிஞரே
தங்கள் வருகைக்கும் குறள் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Iniya கூறியது...
தேற்றங்கள் இல்லாக் கணிதம்
தேறாத விடையை காட்டும்
சீற்றங்கள் கொள்ளும் ஜோடி
சிதறிடும் பிரிவ தேடி
தோற்றங்கள் தரும் பிரம்மை
தோல்வியை தழுவி கொள்ளும்
மாசிலாக் காதல் மட்டும்
மனசினில் வாழும் என்றும்
இதயத்தை வாட்டிக் கொல்லும்
தென்றலே வேதனையில் வாட்டும் பிள்ளை நினைவினை வாரிச் செல்லும் விந்தையை வாழ்வில் செய்யும்.
மறைபோல் உந்தன் அன்பை
மறந்திடா பாவி எந்தன்
நிறையாத குடமாய் கண்ணை
நீங்கிடும் துளிகள சொல்லும்
நெஞ்சை உருக்கும் வரிகள். இருந்தும் ரசித்தேன். அருமை அருமை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்....!
வணக்கம் சகோ
தங்கள் வருகைக்கும் அழகிய கருத்துக்கும்
அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்
அற்புதம் சகோதரரே. மடைதிறந்த வெள்ளமாய் சொற்கள் வந்து பாய்ந்து கவிதைக்கு வளம் சேர்த்திருப்பது அழகு. அருமையான கவிவரிகளில் பார்வையால் நீந்தி மூழ்கி கரையேர மறுக்கிறது என் மனம். பகிர்வுக்கு நன்றி..
//அ. பாண்டியன் கூறியது...
அற்புதம் சகோதரரே. மடைதிறந்த வெள்ளமாய் சொற்கள் வந்து பாய்ந்து கவிதைக்கு வளம் சேர்த்திருப்பது அழகு. அருமையான கவிவரிகளில் பார்வையால் நீந்தி மூழ்கி கரையேர மறுக்கிறது என் மனம். பகிர்வுக்கு நன்றி..//
வணக்கம் அ.பாண்டியன்
சிலைகள் சிற்பியுடன் மட்டுமே பேசும்
உளிகளின் ஓசைகளுக்கு இயைந்து
நானும் ஆசைப்படுகிறேன்
ஓவியமாய் வரையும் ஒவ்வொரு வரியும் என்னோடு பேசும் என்று அவ்வளவே
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
//அலைகடல் திலகம் இன்றி
அமைதியாய் வெறுமை காக்க
விலையிலா விண்மீன் நீயேன்
விலகினாய் வானம் விட்டு// அருமை அண்ணா...
//பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்//
எனக்கு இன்ப அதிர்ச்சி தந்த வரிகள்
வாழ்த்துக்கள்
Priya கூறியது...
//அலைகடல் திலகம் இன்றி
அமைதியாய் வெறுமை காக்க
விலையிலா விண்மீன் நீயேன்
விலகினாய் வானம் விட்டு// அருமை அண்ணா...//
வணக்கம் ப்ரியா தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன்
வாழ்க வளமுடன்
//Mathu S கூறியது...
//பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்//
எனக்கு இன்ப அதிர்ச்சி தந்த வரிகள்
வாழ்த்துக்கள்//
வணக்கம் Mathu S தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன்
வாழ்க வளமுடன்
வணக்கம்!
இனிய சீராளன் அவா்களுக்கு
நலம்! நாடலும் அதுவே!
என் வலையில் எழுதிய மடக்கு அணி வெண்பாவிற்கு நீங்கள் எழுதிய கருத்து வெண்பா கண்டு வியப்புற்றேன்! வளா்க! வாழ்க!
வெண்பா எழுதுவதற்கு முன் மரபுக் கவிதையின் தொடக்க நிலை இலக்கணத்தைக் கற்க வேண்டும்.
வரும் புத்தாண்டிலிருந்து என் வலையில் மரபு இலக்கணத்தை எழுத உள்ளேன், தொடா்ந்து படித்துப் பயிற்சி பெறுக!
அருந்தம்பி சீராளன் அந்தமிழ் உண்ணும்
பெருந்தும்பி எண்ணும் பிறப்பு!
வணக்கம் கவிஞரே
நானும் மிக்க நலம் நன்றி
தங்கள் வழிகாட்டுதல் எல்லாம் எமக்கு வரமாகும் ,ஏ
தோ மடக்கு அணி வெண்பாவும் எழுதிப்பார்த்தேன் அவ்வளவே!
கண்டிப்பாய் வருகிறேன்
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்
வாழ்கவளமுடன்
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
மிக்க நன்றி !
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கவிஞர் அண்ணா வாழ்க வளமுடன்
வணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
Post a Comment