சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 25 June 2014

கேட்டாளே சில கேள்வி !




ஊர்சுற்றும் இந்த பத்து வினாக்களுக்கும் விடை எழுத வலைப்பூவின் உறவுகள் இளமதி, இனியா இருவரும் என்னையும்  அழைத்தார்கள் அந்த அன்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதி இருக்கிறேன் தங்கள் ஆசீர்வாதங்களுடன் ....நன்றி உறவுகளா..!


கொளுத்திப் போட்டோர்  கொலுவிருக்க 
இழுத்துப் போட்டு எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும் ..! 

வந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட !
ஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள் 
மகராசிகளா  !

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நடவா இடரேகி நாவுளறும் நாள்முன்
அடக்கம் அடைதல் அழகு !

நான் அவனில்லை ! க க மு ......எப்புடி 


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஆசையில் கற்றல் அழகில்லை நாவினிக்க 
பேசிடக் கற்றல் அழகு !

இன்னமும் பேசத்தான் கற்றுக்கொள்கிறேன்  பல லட்சம் 
மனங்களுக்கு ஏற்றர்ப்போல் ! ( விதம் விதமா பேசுராங்கையா  )

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

புறவழகு பூசியே  புன்னகைப்பார் நெஞ்சில் 
இறக்கும் வரைக்கும் இடி !

ஆதலால் அப்பப்போ சிரிப்போம் ( உள்ளே அழுதாலும்)
காரணம் இல்லாம யாரும் சிரிப்பாங்களா ? 
( கேள்விய பார்ரா )

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இருளுக்கும் மந்தி இழக்காதாம் கொப்பு 
அருளுண்டோர்க் கான்மா விளக்கு !

மின்சாரம் எப்பங்கோ வந்திச்சு ? 
கரெண்ட் இல்லாட்டி கண்ணை மூடிக்கிட்டு கவிதை எழுதுவோம்ல..!
( மனதின் நாட்குறிப்பில்    எப்புடி )

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

இல்லாதில் வாழ்வில் இணைதரா மக்களுக்கு   
சொல்லிட ஏதும் இல ! 

இருந்தும்..! ,,இருந்திருந்தால் ?

ஊர்போற்ற வாழ்ந்தாலும் உள்ளத்தில் அன்புருக்கி 
சீர்பெற்று வாழ்வீர் சிறந்து !

இப்படித்தாங்க வாழ்த்துவேன் ( நம்புங்கப்பா )

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

கல்வியோ டன்னம் கருணைநெறி ஊட்டுதற்கு
இல்லாரை ஏற்பேன் இனிது  ! 

ஏழைகளின் இனிய தோழனாய் என்றும் இருப்பேன் 

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

நள்ளிவள்ளல் போலிருந்து நன்னெறி  ஊட்டுவோரின் 
கள்ளமில்லா வார்த்தையென் கண் !

கவிதையில் சந்தேகம் என்றால் கம்பன்வாரிசு கவிஞர் கி.பாரதிதாசனிடம் கேட்பேன் , மற்றெல்லாம் பொருத்தமானவர்களிடம் கேட்பேன் .... (அது என் மாணவனாக கூட இருக்கலாம்.)

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அடக்கும் இடத்தில் அவனிருப்பின் நட்பால் 
முடக்கித் திருத்துவேன் முன் !

கிறுக்குப் பயலுகள் ஏதாவது சொல்லும் நம்பினோர் நமக்கு 
கடவுளா என்ன ?
எல்லாம் விதி என்று இருக்காமல் அதுக்கும் மருந்து தேடுவேன்

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

சொல்லில் சுகமளிக்க சாவொன்றும் சந்தமல்ல 
வல்லோனும் கண்ட வலி ! 

அவரை அழவிட்டு, பிறகுதான் ஆறுதல் சொல்வேன் ( வலியை குறைக்க அழுகை ஓர் மருந்து - அனுபவம்  ) இறப்பும் பிறப்பும் அவன் கையில் அதுவரை இருப்போம் நாளை நமக்கென்று ! 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

மறைநூலும் மாறா இறையன்பும் தேடி 
நிறைவினைக் கொள்வேன் நெகிழ்ந்து !

ஆன்மீகத்தில் மூழ்கிடுவேன்..!
கடைசியில் அதுதானே நிஜம்..!

அப்பாடா ஒருவழியா தப்பியாச்சு ஏதோ மனதில் பட்டத்தை கிறுக்கிவிட்டேன் ..இந்த தொடர் பதிவை தொடர நான் யாரையும் அழைக்கவில்லை ( பலர் சந்தோசம் கொள்வார்கள் ஹி ஹி ஹி ) காரணம் எல்லோரையும் எல்லோரும் அழைத்து இருப்பார்கள் ஆதலால் அவர்கள் வலைக்கே போய்பார்க்கிறேன்

நன்றி உறவுகளா.....! 

பிரியமுடன் சீராளன்

55 comments:

Unknown said...

இரு வரி பதில்கள் இதயத்தை தொட்டன !
த ம 1

சீராளன்.வீ said...

வணக்கம் பகவான்ஜீ !

தங்கள் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் இனிய கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

வாழ்க வளமுடன்

இளமதி said...

அன்புச் சீராளா!

உள்ளத்தின் உள்ளே உறையும் உணர்வுகள்
வெள்ளமாய் ஆனது வே!

இட்ட குறள் அனைத்தும் இதயத்தை தொட்டதுவே!
அத்தனை சிறப்பு!

நல்ல சிந்தனை கலந்த நகைச்சுவை உணர்வு ரசிக்க வைக்கிறது சகோ!

மிக மிக அருமை!

வாழ்க உன் புகழ்!
வளரட்டும் நின் திறமை!

வாழ்த்துக்கள் சகோ!
த ம.3

சீராளன் said...

வணக்கம் சகோ இளமதி !

எல்லாம் தங்களின் வழிகாட்டுதல்கள்
என்னையும் எழுதுவிக்க உதவினீர்கள்
நன்றி ....! தங்கள் வருகையும் தமிழ்மண வாக்கும் இனிய வாழ்த்தும்
அகமகிழ வைக்கின்றன
மீண்டும் நன்றிகள்

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

இளமதி said...

//வந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட !
ஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள்
மகராசிகளா !//

பார்த்திட்டேனே சகோ!..
எங்கே என்ன தவறு உண்டு? யார்கிட்ட யார் கேட்கிறது.... என்கிட்ட நீ..ங்க கேட்க இது உங்களுக்கே ஞாயமா சொல்லுங்க...

கவிதை எழுதுறதில உங்க பக்கத்தில நிற்கக் கூட எனக்கு தகுதி இல்லை சகோ!

அசத்துறீங்க நீங்க... உண்மையைத்தான் சொல்றேன்!

பெருமைப்படுகிறேன் சகோ உங்களைப் பார்த்து!

வாழ்த்துக்கள் மீண்டும்...

சீராளன் said...

இளமதி கூறியது...

// கவிதை எழுதுறதில உங்க பக்கத்தில நிற்கக் கூட எனக்கு தகுதி இல்லை சகோ!//

இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா சகோ !

// அசத்துறீங்க நீங்க... உண்மையைத்தான் சொல்றேன்!

பெருமைப்படுகிறேன் சகோ உங்களைப் பார்த்து!

வாழ்த்துக்கள் மீண்டும்...//

உங்கள் வாழ்த்தே என் எழுதுகோல்
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ !



தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிக அருமை சகோதரரே. ஒவ்வொன்றும் இனிமையாய், சிலவற்றில் சோகம் தெரிந்தாலும். மிகவும் ரசித்தது இவ்வரிகள்..//நடவா இடரேகி நாவுளறும் நாள்முன்//
//இருளுக்கும் மந்தி இழக்காதாம் கொப்பு//

வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு பதிலும் ஏழு சீர்களோடு... சிறப்பான சிந்தனை... பிரமாதம்...

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


இனிய சீராளா வணக்கம்!

தொடுத்த வினாக்கள்! விடுத்த பதில்கள்!
கொடுத்த இனிமைபல கோடி! - எடுத்தோத
எண்ணினேன் வெண்பாவில்! இன்கவிஞர் பட்டத்தைப்
பண்ணினேன் ஏற்பாய் பணிந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா திருக்குறளிலேயே பதில்களா? :).. எனக்கு முதலாவது பதில் புரியவேயில்லை.. நான் அந்த வகுப்பு தமிழ் கிளாஸ் நடக்கும்போது அப்செண்ட் ஆக இருந்துட்டேன்:).

முற்றும் அறிந்த அதிரா said...

3 வது பதில் கலக்கிட்டீங்க.. 4 வது சூப்பர்.

ஏனைய அனைத்தும் சோட் அண்ட் சுவீட் ஆக சொல்லிட்டீங்க...

//ஆன்மீகத்தில் மூழ்கிடுவேன்..!
கடைசியில் அதுதானே நிஜம்..!////

அப்போ இன்னும் மூழ்கல்லியோ ஆன்மீகத்தில்? :).

இளமதி said...

வணக்கம் சீராளன்!

எங்கள் கவிஞரையா உங்களுக்கு ”இன்கவிஞர்” பட்டம் வழங்கியதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!
உவகையில் என்னை மறந்தேன்!..

எங்கள் தம்பி இன்று கிடைத்தற்கரிய பேறாம் இவ் அரிய பட்டத்தினை கவிஞர் ஐயா பாரதிதாசன் அவர்களால் பெற்றமை பெரு மகிழ்வைத் தருகிறது!

வாழ்த்துக்கள் சீராளன்!!!
வாழ்க நின் புகழ்!!!

மிக்க நன்றி ஐயா!

இன்கவிஞர் ஆனார் எமதினிய சீராளன்!
என்சொல்ல இப்பேறை இங்குநான்! - கன்னல்
கவியே! உங்கள் கருத்தில் உயர்ந்தார்!
புவியில் பெறுவார் புகழ்!

இமா க்றிஸ் said...

பதில்கள் அருமை சீராளன். :-) ரசித்தேன்.

அம்பாளடியாள் said...

உதடுகள் சிரிப்பினும் உள்ளத்தின் உணர்வுகள் கண்டு சருகென ஆனதே மனதும் !

Iniya said...

அப்பனே சீராளா வார்த்தையே வரலை என்ன நான் சொல்ல.
சீராளனா கொக்கா அசத்திடீங்கய்யா
அசத்திட்டீங்க

உன் சிந்தையும் செயலும் இனிது
செப்பிய வார்த்தையும் புதிது!

பணிவுடன் பகர்ந்த பதில்கள் யாவும் என் இதயத்தில் அமிழ்ந்தது நிலையாய்!

ஆமா என்கிட்ட மோதாதே நான் சரியான ஆளு இல்ல.

உங்க பக்கம் நிற்க கூட எனக்கு தகுதி இல்லையப்பனே இது உங்களுக்கே தெரியுமே. இளமதி ok தான் சரியான ஆள் தான் போட்டிக்கு. இருந்தாலும் என் பெயரை உங்க லிஸ்டில சேர்த்து உங்கள் இருவர் லெவலுக்கும் பார்த்தது சந்தோஷம் தான்.

\\அப்பாடா ஒருவழியா தப்பியாச்சு ஏதோ மனதில் பட்டத்தை
கிறுக்கிவிட்டேன்.//
ஓகோ இதற்குப் பெயர் தான் கிறுக்கலோ அப்போ நாம எழுதிறதை என்ன பெயர் சொல்லாம். நான் இந்த விளையாட்டுக்கு வரலை நான் கவிதைக்கு முழுக்குப் போட்டுவிட்டு பேசமா உங்கள் அனைவரது பதிவுகளையும் ரசிக்கப் போகிறேன்.

..நடவா இடரேகி நாவுளறும் நாள்முன் அடக்கம் அடைதல்
அழகு ! அருமை அருமை !
வேதனை இழையோடினாலும்,நகைசுவையும் கலந்த பதில்கள் என்னமா அசத்திட்டீங்க திரும்ப திரும்ப வாசித்து மகிழ்ந்தேன் கண்கள் பனிக்க.
நிலையான புகழோடு வளமாக வாழ வாழ்த்துகிறேன் மனமார !
.

கீதமஞ்சரி said...

மனத்தைத் தொட்ட அற்புதமான பதில்கள். நான்காவது கேள்விக்கான விடையாக அமைந்த குறள் அதிகம் மனம் தொட்டது. சரளமாய் ஊற்றெடுத்துப் பொழிகிறது வெண்பாவருவி. பாராட்டுகள் சீராளன்.

Iniya said...

கல்வியோ டன்னம் கருணைநெறி ஊட்டுதற்கு
இல்லாரை ஏற்பேன் இனிது ! இந்தப் பதிலில் எங்கேயோ போய்விட்டீர்கள்.

Priya said...

அண்ணா அருமை அருமை அருமை... வேறு என்ன சொல்ல... இன்கவிஞர் பட்டம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா.... :) மிக மிக சந்தோசம்.... :) :) :)

priyasaki said...

வாழ்த்துக்கள் சீராளன். என்ன சொல்லி
உங்கள் திறமையை பாராட்ட. வார்த்தையில்லை எங்கிட்ட.எல்லா ஜாம்பவான்களும் வாழ்த்திய இடத்தில் என் வாழ்த்துக்களையும் ஏற்க மறுப்பீரோ.
"குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்" கவிஞர் ஐயாவினால் பட்டம் கிடைத்திருக்கு இதைவிட பேறு, வேறேனும் உண்டோ. ரெம்ப மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai said...


பெயருக்கேற்ப சீராககவே இருந்தது பதில்கள் அருமை நண்பரே...

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்

அருணா செல்வம் said...

சீராளன் செய்த சிறப்பான வெண்பாக்கள்
பாராளும் நின்று படர்ந்து!

வாழ்த்துக்கள் சகோ.

கரந்தை ஜெயக்குமார் said...

கவியாய் பதில்கள்
அருமை
அருமை
நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 9

சீராளன்.வீ said...

வணக்கம் கிரேஸ் !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் தனபாலன் சார் !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

இனிய வணக்கம் கவிஞர் ஐயா !

இன்கவிஞர் பட்டம் எனக்கீந்த பாவலனே
கன்னல் தமிழமுதே காவியனே - என்சொல்லி
வாழ்த்திடுவேன் ஏழிசையில் பாவெடுத்து நின்றுசிரம்
தாழ்த்தி வணங்குகிறேன் தாழ் !

நன்றி சொல்ல வார்த்தை நானிலத்தில் இல்லை ஐயா !
தங்கள் வரவுக்கும் இனிய பட்டம் தந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நன்றி ஐயா

வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் அதிரா !

தமிழ் வகுப்புக்கே அல்வா குடுத்தீங்களா நல்லது ஆமா அவ்வளவு கஷ்டமாவா இருக்கும் தமிழ் ஹி ஹி ஹி !

இன்னும் ஆன்மீகத்தில் மூழ்கல்ல மூழ்கிட வச்சிடுவீங்க என்று நினைக்கிறேன் ஹி ஹிஹி

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி அதிரா
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இளமதி !

தங்கள் வாழ்த்தும் ஐயா எனக்களித்த இன்கவிஞர் பட்டமும் தங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் ஆசீர்வாதமே மிக்க நன்றி சகோ !

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் இமா !

முதன்முறையாக என் வலைக்கு வாறீங்க வரவேற்கிறேன் !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் அம்பாள் !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

தங்கள் கருத்தில் சந்தோசம் ஆனாலும்
ஒரு வார்த்தை சொல்லி ஆன்மாவையே உசுப்பிட்டீங்க ! //நான் கவிதைக்கு முழுக்குப் போட்டுவிட்டு பேசமா உங்கள் அனைவரது பதிவுகளையும் ரசிக்கப் போகிறேன்// வை திஸ் கொலை வெறி ... நல்லோர்கள் நாவுதிரும் ஒருவார்த்தை கூட நயம்மிக்க கவிதைதான் ஆதலால் எழுதுங்க நாங்கள் ரசிக்கின்றோம் ஓகே வா !

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ கீதமஞ்சரி !

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நன்றி

வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

//கல்வியோ டன்னம் கருணைநெறி ஊட்டுதற்கு
இல்லாரை ஏற்பேன் இனிது ! இந்தப் பதிலில் எங்கேயோ போய்விட்டீர்கள்.//

எங்கும் போகல்ல உங்களை சுற்றி சுற்றியே இருப்பேன் பாசமுள்ள இடத்தில்தானே பாவவினை போக்கலாம் இல்லையா ! எப்புடி

நன்றி நன்றி

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

//கல்வியோ டன்னம் கருணைநெறி ஊட்டுதற்கு
இல்லாரை ஏற்பேன் இனிது ! இந்தப் பதிலில் எங்கேயோ போய்விட்டீர்கள்.//

எங்கும் போகல்ல உங்களை சுற்றி சுற்றியே இருப்பேன் பாசமுள்ள இடத்தில்தானே பாவவினை போக்கலாம் இல்லையா ! எப்புடி

நன்றி நன்றி

சீராளன்.வீ said...

வணக்கம் பிரியா !



தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தங்கையே

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் பிரியசகி !

முதன்முறையாக என் வலைக்கு வாறீங்க வரவேற்கிறேன் !

வாழ்த்துவதில் உயர்வென்ன தாழ்வென்ன உள்ளம் தெளிவானால்
வாழ்த்துக்கு அதுவே முதல் தகுதி ஓகே வா
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ரமணி சார் !

தங்கள் அன்பான வாழ்த்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் கருத்துக்கும்
தங்கள் வரவுக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஹில்லர்ஜி !

முதன்முறையாக என் வலைக்கு வாறீங்க வரவேற்கிறேன் !

சீரைபெயரில் செதுக்கியதால்தான் இவ்வாறு பாக்கள் சீராய் இருக்கின்றன என்று நம்புறீங்க மிக்க நன்றி

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஹில்லர்ஜி !

முதன்முறையாக என் வலைக்கு வாறீங்க வரவேற்கிறேன் !

சீரைபெயரில் செதுக்கியதால்தான் இவ்வாறு பாக்கள் சீராய் இருக்கின்றன என்று நம்புறீங்க மிக்க நன்றி

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஜீவலிங்கம் !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஜீவலிங்கம் !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ அருணா செல்வம் !

வள்ளுவன் வாய்மொழிந்த பாத்தொடுத்து
கருத்திட்டீர் மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் கரந்தை ஜெயகுமார் !



தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
தமிழ்மண வாக்களித்தமைக்கும்
மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

Iniya said...

பாண்டியன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளார் சீராளா.இல்லை இல்லை இன்கவிஞரே
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....!

http://blogintamil.blogspot.ca/2014/06/blog-post_29.html?showComment=1404066579023#c8959139355180127275

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நானும் 10 கேள்விகளுக்கு மறுமொழி கூறியுள்ளேன். தங்களின் மறுமொழிகளை ரசித்தேன். நன்றி.

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

தங்கள் தகவலுக்கு நன்றி இதோ போய் பார்க்கின்றேன் !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

இதோ வந்திட்டே இருக்கேன் உங்கள்
வலைக்கு நன்றி நன்றி !

வாழ்க வளமுடன்

Anonymous said...

சீராளன் சிறப்பான வெண்பாக்கள்.
இரு வரி பதில்கள்.

இனிய வாழ்த்து.
சீராளன் சிறப்பான வெண்பாக்கள்.
இரு வரி பதில்கள்.

இனிய வாழ்த்து. Vetha.Elanagthilakam

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா எப்படி இப்படி இவ்வளவு அழகான பதிலகள்?!!!! மிகவும் ரசித்தோம்! தொடர்கின்றோம்!

சீராளன் said...

வணக்கம் கோவைக்கவி !

தங்கள் கருத்தில் மிக மகிழ்ந்தேன்
பதில் தாமதமாகிவிட்டது வருந்துகிறேன் கவனிக்கவில்லை

வாழ்க வளமுடன் !

சீராளன் said...

வணக்கம் Thulasidharan V Thillaiakathu

தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள் !

எஞ்சிய வாழ்வின் எழில்நினைவு உள்ளவரை
கொஞ்சும் கவிகள் குவிந்து !

தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

balaamagi said...

கண்கள் பணிக்க கரம்நான் குவித்தேன்
கவியே எழில்தான் இது
அருமை,,அருமை,,,,,, வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

வணக்கம் பேராசிரியரே !

தங்கள் அன்பான ஜருத்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்