ஒற்றை நிலவே ஒற்றை நிலவே
உயிரின் ஓசை கேட்கிறதா
சிற்றறை வெடித்தும் சிரிக்கும் இதய
சிதைவுகள் கண்ணில் தெரிகிறதா !
( ஒற்றை நிலவே ஒற்றை நிலவே )
சிப்பியை சிறைக்குள் வைத்தால்
முத்திற்கில்லை பாதிப்பு
முத்தமிட நீ மறுத்தால்
மூச்சிற்கென்ன யாசிப்பு !
நெஞ்சத்தைக் கீறிக் கொண்டால்
நினைவில் குருதி படிந்திடுமா
வெஞ்சத்தை பூவில் சுமந்தால்
வேரில் பாரம் தெரிந்திடுமா !
உருகும் தங்க உணர்வுகள் சேர்ந்தே
உனக்கு நீதி சொல்லுதிங்கே
சருகாய் போன கனவுகள் வந்து
சாட்சி சொல்ல மறுக்கிறதே..!
(ஒற்றை நிலவே ஒற்றை நிலவே)
இதயத்தை மாற்றி வைத்தால்
இரண்டாம் காதல் முளைத்திடுமா
இளமை மாறிப் போனால் கூட
இருக்கும் காதல் மறைந்திடுமா..!
ஆசையின் தூரிகை ஓவியம் வரைந்தால்
ஆன்மா நிறங்கள் தெளித்திடுமா
பாசத்தின் பிரிவு பாடல் எழுதினால்
பல்லவி நாவில் அழுதிடுமா !
வேதனை கண்ணில் விழிநீர் கொடுத்தே
வேள்விகள் பலவும் நடத்துதிங்கே
கருகிப் போன காதல் வந்து
காட்சி தொல்லை தருகிறதே !
(ஒற்றை நிலவே ஒற்றை நிலவே)
பிரியமுடன் சீராளன்
23 comments:
ஆரம்பமே அமர்க்களம் !வலி நிறைந்த வார்த்தை ஜாலம் பேசிக்கொண்டே
அழகிய சந்தம் மனம் முழுவதும் நிறைகிறது .வாழ்த்துக்கள் சகோதரா
அருமையான பாடல் வரிகளுக்கும் இனித் தொடரவிருக்கும் பாக்களுக்கும் .
இனிய வணக்கம் சகோ அம்பாளடியாள்
தங்கள் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்கின்றேன் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம்
தகவலுக்கு நன்றி வருகிறேன் பதிவுகளை இணைக்கிறேன்
வாழ்த்துக்கள்
அழகான பாடல் வரிகள்.
வணக்கம்
மிக்க நன்றி தனி மரம்
வாழ்க வளமுடன்
வலியை தந்து வார்த்தைகளை பிடுங்குகிறான் ஆண்டவன் வையகம் தெரிந்து கொள்ளட்டும் இந்த வார்த்தை ஜாலங்களை என்று இல்லாவிட்டால் எங்கே முளைதிருக்கப் போகிறது, இத்தனை அழகான பாக்கள்.பிரசவ வேதனையை தாங்கிக் கொண்டு பெற்ற பிள்ளைகள் போல உம் பாக்களும் பிறந்து கொண்டே....இருக்கிறது அந்த நிலவும் நோகாமல், எம்மை அதிசயிக்க வைக்கிறது தங்கள் கற்பனை.
இம் முறை தங்கள் வலிக்கே நன்றி!சொல்கிறேன். தொடர வாழ்த்துக்கள்....!
வணக்கம் இனியா !
ஹா ஹா ஹா சிரித்துக் கொண்டே கருத்திடுங்கள் ஏனெனில் எழுதிவிட்டு நானும் சிரித்தேன் என்னையும் எழுதவைத்த அந்த நினைவுகளுக்காய் !
இனிய வாழ்த்துக்களும் மிக்க நன்றிகளும்
வாழ்க வளமுடன்
http://bharathidasanfrance.blogspot.ca/2014/04/28.html
இதை பார்க்கவும்.
வணக்கம்!
அற்றை நிகழ்வை அமுதக் கவியாக்கி
ஒற்றை நிலவாய் உரைத்துள்ளீா்! - இற்றைப்
பொழுதும் புலம்பும்! புதிரவளை எண்ணி
அமுது புலம்பும் அகம்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அற்புதமான கவிதை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 4
மிக்க நன்றி இனியா !
பார்த்தேன் அதற்கு மெயில் பண்ணி விட்டேன் நன்றி
அமுது புலம்பும் அகம்!
வணக்கம் கவிஞரே
அமுது புலம்பும் அகம்! உண்மைதான்
விளுதாகிப்போன நினைவுகள் வேர்விடும் பொழுதெல்லாம்
அழுது புளும்பும் அகம்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் ரமணி சார் !
தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
வாக்கிற்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
முதன் முறையாகத் தங்களின் தளத்திற்கு வருகிறேன் நண்பரே
அருமை
இனி தொடர்வேன்
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார் !
தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
வணக்கம்!
தேனே மணக்கும் செழுங்கவி சீராளா!
ஏனோ பதிவுகள் ஏற்றவிலை! - வானே
இடித்தாலும்! மண்ணே இருண்டாலும்! காதல்
வடித்தாளும் பாக்கள் வழங்கு!
நெஞ்சமெல்லாம் தீய்ந்து நினைவுருகி போனாலும்
அஞ்சாமல் பாவடிப்பேன் ஆன்றோனே - கொஞ்சம்
பணிபூர்த்தி ஆகாமல் போகின்ற நாட்கள்
பிணியேதும் இன்றிய போர் !
வணக்கம் கவிஞர் அண்ணா
தங்கள் அன்புத் தேடல் கண்டு
உளமுருகி நிற்கின்றேன் நன்றி
விரைவில் கவிதை
பதிவேற்றுகின்றேன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images
வணக்கம் சீர் ஆள்பவரே,
படித்தேன், தங்கள்பல பதிவுகள் பதில்நான்
பகர நினைக்கையில் பயம்தான் படிகிறது
மனதில், தங்களைப்போல் வராது எனினும்
சொன்னேன் நனிநன்றி நான்
அப்பா எப்படி இப்படியெல்லாம்,,,,,,,,,,
அருமை அருமை வாழ்த்துக்கள்,,,,,,,,
வணக்கம் பேராசிரியரே !
தங்கள் அன்பான கருத்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
எல்லாம் நன்றாகவே வரும் பேராசிரியரே எழுங்களேன் தொடர்ந்து
வாழ்க வளமுடன்
அருமை அருமை சீராளன்..மிகவும் ரசித்தோம்
Post a Comment