சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday, 2 September 2017

பச்சை இதழ் இட்ட மது !



சந்தமிகத் தந்தகவிச்  சிந்தனையும்  எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்  
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே  !


அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே  -  விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !

எந்தயிடம்  வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச் 
சிந்தைதனில்  வைத்துமகிழ்ந்  தாடுவேன் - விதி
மந்தகுணந்  தந்துவுடல்  மண்ணறையில் இட்டபினும்   
மஞ்சரியாள்  கொஞ்சுதமிழ்  தேடுவேன் !

பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப்  பார்வைதரப்
பாவலனாய்ப்  பாடிமகிழ்ந் தாடுவேன் - இல்லை
கங்குலெழும் முன்னொளியில் இங்கவளும்  இல்லையெனில்  
கற்பனைகள் ஈன்றமனம்  மூடுவேன் !

பண்பொளிரும்   பைங்கொடியாள் பஞ்சுமொழிப் புன்னகையாள்
பச்சையிதழ்  இட்டமதுக் காரிகை   - வான்
தண்ணொளிரும் வெண்மதியின் தங்கையெனத் தன்னினைவைத்
தந்துயிரைத் தொட்டபுதுத்  தாரகை !


பாவலர் வீ. சீராளன்

23 comments:

KILLERGEE Devakottai said...

படிப்பதற்கு சுகமான வார்த்தைகள் தொடர்ந்து எழுதுங்கள் பாவலரே...

பிலஹரி:) ) அதிரா said...

ஆவ்வ்வ்வ்வ் மேஜரும் இன்று புயுப் போஸ்ட் போட்டிட்டார்ர்ர்..:)..

படத்திலே.. இச்சை அழித்தது/// என ழி போட்டிருக்கிறீங்க.. முதலில் எழுத்துப்பிழை விட்டிட்டார்ர் சீராளன் என நினைச்சு.. றீச்சர் ஓடியாங்கோ என சொல்ல நினைச்ச வேளை.. ஹையோ இல்ல இது இச்சையை இல்லாமல் ஒழிச்சது எனப் பொருள்படும் என எடுத்திட்டேன்ன்.. ஒரு எழுத்தில் எவ்வளவு அர்த்தங்கள்..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
படிக்கப் படிக்க இனிக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள்

பிலஹரி:) ) அதிரா said...

கவிதை நன்றாக இருக்கு.. ஆனா சில தமிழ் எனக்குப் புரிவதில்லை.. அடுத்தமுறை மேஜரே.. பேச்சுத்தமிழில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து:).

Unknown said...

கவிதை அருமை! தொடருங்கள் தொடர்வேன் த ம 2

KILLERGEE Devakottai said...

பலமுறை வந்தும் தமன்னாவை கரைக்ட் பண்ண இயலவில்லை
செல்பேசி வழியாக வருகிறேன்.

தனிமரம் said...

அருமையான சந்தம் சிந்தும் கவி வரிகள் !

நிஷா said...

வாவ் ! ரசித்தேன். நிரம்ப நாட்களுக்கு பின் ரசித்து வாசித்த கவிதை. அருமை

Thulasidharan V Thillaiakathu said...

தமிழ் என்ன இதம்!!! சுகம்! அருமை!!! சீராளன்!! தமிழ் தங்களிடம் விளையாடுகிறது! மிக மிக ரசித்தோம்! ரொம்ப நாள் ஆயிற்றோ நீங்கள் இடுகை இட்டு!!

சீராளன்.வீ said...

வணக்கம் ஜி !

என் கவிதைகளுக்கு எல்லாம் முதல் ஆளாக வந்து கருத்துச் சொல்வதை இட்டு மிக மகிழ்கிறேன் அன்புக்கு நன்றி ஜி

ஆமா ஜி தமன்னா என் கண்ணுக்கும் தெரியல்ல எங்கே ஓடிட்டாளோ பாவி பயபிள்ள சொந்த வாக்குப் போடவும் முடியல்ல .....ஹிர்ர்ர்ரர்ர்ர்ர்

மீண்டும் நன்றிகள் ஜி

சீராளன்.வீ said...

வாங்க பூசாரே வாங்க எங்கடா ஆளைக் காணல்ல என்று பார்த்தேன் இந்தா வந்துட்டீங்க இல்ல ளகரம் ழகரம் விளக்கத்தோடு ...தங்கள் புரிதல் கண்டு மகிழ்கிறேன் மியாவ் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு

சீராளன்.வீ said...

வணக்கம் கரந்தை நண்பரே !

படிக்கப் படிக்கத் தேனூறும் வார்த்தைகள்தான் தேடித் பிடிக்கிறேன் தினமும் எழுதத்தான் முடியல்ல இருந்தும் முயற்சி செய்கிறேன் நன்றி

வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

சீராளன்.வீ said...

ஹலோ மியாவ் !

என்னது பேச்சுத் தமிழில் எழுதவா அப்போ கம்மாக் கரையில என்னும் பாட்டுப் போலத்தான் எழுதணும் சரி தங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் மீண்டும் நன்றிகள் பூசாரே வாழ்க நலம்

சீராளன்.வீ said...

வணக்கம் புலவர் ஐயா !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கண்டிப்பாகத் தொடர்கிறேன் தொடர்வேன்
வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

சீராளன்.வீ said...

வாங்க தனிமரம் !

தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க நலம்

ஆமா இப்போது தனிமரம் இல்லையே நீங்கள் அவ்வ்வ்வ் ......

மிக்க மகிழ்ச்சி சகோதரா

சீராளன்.வீ said...

வாங்க நிஷா வாங்க ஆல்ப்ஸ் தென்றலே வாங்க.......

தங்கள் வருகையும் கருத்தும் உளமினிக்க வைக்கிறது வாழ்த்துகிறேன்
நன்றிகள் பலகொண்டு ...........

வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

சீராளன்.வீ said...

வணக்கம் கீதா !

தில்லையின் செங்காந்தாள் செந்தமிழின் முன்னேந்தல் என்னுடைய எல்லாக் கவிகளுக்கும் கருத்திட்டு செல்லும் உங்கள் வலைப்பூதான் நான் வந்ததில்லை வருந்துகிறேன் இனி வருவேன் கண்டிப்பாக ..............

தங்கள் அன்பின் வரவுக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளத்துடன்

மனோ சாமிநாதன் said...

கவிதை மிக அருமை! தொடர்ந்து எழுதுங்கள்! இனிய வாழ்த்துக்கள்!!

சீராளன்.வீ said...

வணக்கம் !

மனோ சாமிநாதன் கூறியது...

கவிதை மிக அருமை! தொடர்ந்து எழுதுங்கள்! இனிய வாழ்த்துக்கள்!!

இடர்வந் தழிந்தால் அன்றி இதைநான் தொடர்வேன் என்றும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா

வாழ்க நூறாண்டு வளத்துடனும் நலத்துடனும்


பூ விழி said...

உங்க தமிழ் மிக அருமை சாதரண தமிழை பார்த்து செந்தமிழை பார்க்கும் போது வியப்பு வருகிறது கவிதை அருமை

சீராளன்.வீ said...

தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல பூவிழி !

என் தமிழைச் செந்தமிழ் என்று புகழ்ந்தமைக்கு நன்றிகள் கோடி
இருந்தும் தமிழுக்கும் நான் சிறியவன் என்பது மட்டும் உண்மை

வாழ்க நலம்

நெல்லைத் தமிழன் said...

முதலில், சந்தமும், கொஞ்சம் பல்லைப் பதம் பார்க்கும் கவிதையைத் தந்ததைப் பாராட்டுகிறேன். இப்படி எழுதுவது சுலபமல்ல. அதுக்கு, முதலில் நிறைய தமிழ் வார்த்தைகள் (ஒரு வார்த்தை, பல அர்த்தம்), அதுவும் இலக்கிய வார்த்தைகளின் பரிச்சயம் இருக்கணும். ரொம்ப நல்லா முயற்சித்திருக்கீங்க. வெறும் பெண்ணை ரசித்தா இந்தக் கவிதை என என் மனத்தில் தோன்றினாலும், குறிப்பிட்ட வார்த்தைகளைப் பாராட்டத் தோன்றுகிறது.

கந்தம்- மணம். அந்தி - மாலை சூரியன் மறையும்போது, தந்தி-பெண்ணை யாழ் என்று சொல்வது பொருத்தம். குந்திமகன்-அர்ச்சுனனின் அம்பு-சரி.

கோதை மகன் அன்பு-யார்? கோதையை பெண் எனக்கொண்டால் குழப்புகிறது. வேறு பொருள் ஆண்டாள், பெண்ணின் தலைமுடி, பூமாலை-எதுவும் சரியான பொருளைத் தரவில்லை.

அவள் கண்கள் தாமரைபோன்றது (பங்கயமாய்)

பஞ்சு மொழி-மென்மையான குரல் என்பதைச் சொல்கிறீர்களா? கங்குல்-சூரியன். அவள் இல்லையென்றால், என் மனது கற்பனையில் சஞ்சரிக்காமல் மூடிக்கொண்டுவிடும் என்று சொல்கிறீர்களா?

மந்த குணம் தந்து-வயதாவதா? மண்ணறை-கல்லறையைக் குறிக்கிறீர்களா? இறந்தபின்னும் எப்படி அவளுடைய மொழியைத் தேடமுடியும்?

பச்சை இதழ்-இதில் செயற்கைப் பூச்சு இல்லாத இயற்கையான உதடுகள் என்று சொல்கிறீர்களா? பொதுவா நிறத்தைப் பொருத்திப்பார்க்கும் இயல்பு இருப்பதால் கொஞ்சம் குழப்புகிறது.

சிந்தனையும் உயிரும், அவளை நினைத்து மணக்குமா? (சார்ந்து மணம் வீசுதே)
தென்றல் எதை உந்தி எழத் தருகிறது, தமிழ் பேச வைக்கிறது?

இந்தக் கவிதை, காதலியைக் குறித்தா அல்லது மனைவியைக் குறித்தா என்பதில் சந்தேகம் எழுகிறது.

ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க (சந்தம்). ஆனால் பொருள் தெரிய கொஞ்சம் முயற்சி தேவையா இருக்கு. அதுவே உங்கள் சிறந்த தமிழ் அறிவைக் காட்டுகிறது. ஆனால், கொஞ்சம் பொருள் மயக்கம் இருக்கின்ற மாதிரி தோன்றுகிறது.

காலம் கடந்து பின்னூட்டமிட்டாலும், உங்களின் திறமையைப் பாராட்டத் தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil US
www.tamilus.com