சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 3 October 2013

அழகிய தீயே..!
கன்னலொடு மின்னலொன்று
கதைபேசும் நேரம்-மழை
காரிருளில் ஒளிதூவும்
கண்ணிரண்டின் ஈரம்....!

மூச்சினிலே பேசுமிதழ்
முல்லைமொழி சுரக்கும்-அவள்
மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!


வாடுமிடை வலியறுக்க
தேடும்இடம் தென்றல்-குளிர்
சாரல்மழை குழல்கழுவி
கோலமிடும் முன்றல்..!

ஓயாஅலை தேடும்கரை
கூடல் தீர்ந்து  கூவும் -அவள்
ஊரும்தடம் மேவிநுரை
காயும் இடம் நீவும்...!

மேகநிழல் ஓடும் தொலை
தோகைமயில் தேடும்-உளம்
காதல்தழல் கசியவிழி
ஊடல் கொண்டு வாடும்..!

எழில்மலர்கள் விளைகந்தம்
பொழியுமவள் சேலை - தினம்
நெகிழ்கம்மல் ஓசையிலே
முகிழ்வதென்ன காலை ..!

வஞ்சி விரல் நெஞ்சறையில்
அஞ்சலிட ஊரும் - இதழ்
கொஞ்சும்துளி மிஞ்சிவிட
பஞ்சணையில் ஊறும்  ..!

பிரியமுடன் சீராளன் 

அருஞ்சொற்பொருள்:

கன்னலொடு - கரும்போடு , நுதல் - நெற்றி ,

குழல் - தலைமுடி, காதல்தழல் - காதல் நெருப்பு ,
ஊடல்- பொய்கோபம்,  கந்தம் - வாசனை 
நெகிழ்கம்மல் - வளையும்தன்மையுள்ள தோடு ,
முகிழ்தல் - மலர்தல் 

39 comments:

Priya said...

அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை அதி அற்ப்புதம்... படிக்கையிலேயே ஏதோ ஒரு ராகமும் உடன் சேர்ந்து வருகிறது மிகவும் அழகாய்...

சீராளன்.வீ said...

தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக
மகிழ்கிறேன்

மிக்க நன்றி பிரியா வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... பொருள் விளக்கத்தோடு அருமை... பாராட்டுக்கள்...

வாழ்த்துக்கள்...

சீராளன்.வீ said...

வணக்கம் தனபாலன் சார்
ஒருசிலருக்கு புரியவில்லை என்று சொன்னார்கள் அதுதான்
அருஞ்சொர்க்களை சேர்த்தேன்...

தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

திண்டுக்கல் தனபாலன் said...
/// பறவைகள் கொண்டு பாடம் நடத்தும்
பக்குவம் கொண்டான் பாரினில் உண்டோ
திறமைகள் வளர்க்க சின்னம் சிறுவரை
சிந்தனை பாடலால் சீர்செய் பாலனே ..! ///

உங்களின் கருத்துரையாவும் எனக்கு ஊக்கமே... (இந்த பதிவிலும் மட்டுமல்ல)

நன்றி தவிர சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

சீராளன்.வீ said...

வணக்கம் தனபாலன் சார் ..!

ஊக்கம் தருதலில் உயர்ந்தவர் நீங்கள்
ஆக்கம் இடுவோர் அனைவரும் அறிவர்
தேக்கம் அடையும் தெரியா நிலைகளை
நீக்கும் வழிகள் நிறைவாய் சொல்வீர் ...!

நோக்கம் இன்றி நொய்யும் பதிவுகள்
ஏக்கம் கொண்டு எழுதா பதிவுகள்
பாக்கள் தவறி பதுங்கும் பதிவுகள்
யாக்கும் அனைவரும் உம்முளம் அறிவர்...!

ஆதலால் நன்றிகள் எதற்கு நட்பாய் இருப்போம் ,நல்லதை பகிர்வோம்

மீண்டும் அன்புநிறைந்த வாழ்த்துக்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இன்சிந்து கவிகண்டு
என்னெஞ்சம் ஆடும்! - மின்னும்
பொன்சிந்து சீா்கோர்த்துப்
புகழ்மாலை சூடும்!

சீராளன் தந்தகவி
பாராளும் என்பேன்! - வண்ணத்
தேராளும் பேரழகை
ஆரமுதாய் உண்பேன்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Seeni said...

mmm...
vaarthaikakai sethukkitteenga...

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா தமிழ் துள்ளி விளையாடுது... அழகிய கவிதை... நல்லவேளை கீழே தமிழுக்கு ஒத்த சொல்லும் போட்டமையால்ல் நான் தப்பித்தேன்ன்.

கவியாழி said...

மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!//ஆஹா...

Anonymous said...

''..அவள்
மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!..'' நல்ல வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Iniya said...

மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!//ஆஹா...

இது நல்ல யோசனை தான். நிச்சயமாக உங்கள் கவிதைகளுக்கு விளக்கம் அவசியம் தான். நன்றி, அப்பாடா தப்பினேன்.
அருமை அருமை வாழ்த்துக்கள்

Iniya said...

அவள் பரிதி கண்ட பங்கயமோ
பண்பாடும் வெண்ங்கலமோ
விண்கலம் போல் விசையாக
வெளியேறி சென்றாளோ
பௌவியமான காதல்
சௌமியத்தில் தேங்கியதோ
இசை பாடத் தூங்கியதோ

சீராளன்.வீ said...

வணக்கம் கவிஞரே...!

கவிதையிலே கருத்திட்டீர்
கனக்கிறது என்வலைப்பூ
வாசிக்கும் பொழுதுகளில்
இனிக்கும் உதடுகளும்

தங்கள் வரவும் கவியமிர்த கருத்தும் மிக இனிமை தருகின்றன

மிக்க நன்றி கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களே
வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

// Seeni கூறியது...
mmm...
vaarthaikakai sethukkitteenga...//

ஆம் செதுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

மிக்க நன்றி சீனி ..!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வாழ்க வளமுடன்

இளமதி said...

செந்தமிழின் சீரோடு
சேர்த்ததுன் பாடல்
சொல்லிவிட முடியுமோ
சூடும் புகழ் நேர்கள்
வண்ணமகள் வடிவழகை
வார்த்த நற்பண்கள்
வாழ்த்திட நான் தேடுகிறேன்
வாழ்க நீர் வாழ்க!

அழகிய கவிதையில் ஆக்கிரமித்துவிட்டீர்கள் எல்லோரையும்...

வாழ்த்துக்கள் சகோ!

சீராளன்.வீ said...

/// அதிரா கூறியது...
அடடா தமிழ் துள்ளி விளையாடுது... அழகிய கவிதை... நல்லவேளை கீழே தமிழுக்கு ஒத்த சொல்லும் போட்டமையால்ல் நான் தப்பித்தேன்ன்.//

ஹா ஹா அதிரா நீங்க தப்பவே முடியாது...இன்னும் வருமில்ல....இதே போல நிறைய !

தமிழை மழலையாக பார்க்கிறேன் அதுவும் துள்ளி விளையாடுது அதிரா....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்கவளமுடன்...!

சீராளன்.வீ said...

// கவியாழி கண்ணதாசன் கூறியது...
மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!//ஆஹா...//

வணக்கம் சார் ..!

ஆம் கண்டிப்பாய் பெருக்கும் எனக்கு மட்டுமாவது....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...


// OpenID kovaikkavi கூறியது...
''..அவள்
மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!..'' நல்ல வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//

வணக்கம் ..!

ஆம் கண்டிப்பாய் பெருக்கும் எனக்கு மட்டுமாவது....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

// Iniya கூறியது...
மூன்றாம்பிறை நுதல்கூட
முத்தமிழை பெருக்கும்..!//ஆஹா...

இது நல்ல யோசனை தான். நிச்சயமாக உங்கள் கவிதைகளுக்கு விளக்கம் அவசியம் தான். நன்றி, அப்பாடா தப்பினேன்.
அருமை அருமை வாழ்த்துக்கள்//

ஹா ஹா இனியா எங்கேயும் ஓடாதீங்க இன்னும் தப்பிக்க வழி சொல்லவில்லையே

தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக
மகிழ்கிறேன்

மிக்க நன்றி வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

// Iniya கூறியது...
அவள் பரிதி கண்ட பங்கயமோ
பண்பாடும் வெண்ங்கலமோ
விண்கலம் போல் விசையாக
வெளியேறி சென்றாளோ
பௌவியமான காதல்
சௌமியத்தில் தேங்கியதோ
இசை பாடத் தூங்கியதோ..//

வணக்கம் இனியா

அருமை அருமை இனியகவி சொல்லி என்நிலையை அப்படியே சொல்லிவிட்டீர் மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

// இளமதி கூறியது...
செந்தமிழின் சீரோடு
சேர்த்ததுன் பாடல்
சொல்லிவிட முடியுமோ
சூடும் புகழ் நேர்கள்
வண்ணமகள் வடிவழகை
வார்த்த நற்பண்கள்
வாழ்த்திட நான் தேடுகிறேன்
வாழ்க நீர் வாழ்க!

அழகிய கவிதையில் ஆக்கிரமித்துவிட்டீர்கள் எல்லோரையும்...

வாழ்த்துக்கள் சகோ!//

வணக்கம் இளமதி அக்கா ..!

வாழ்த்தும் உம்கவியில்
வாயடைத்து நிற்கின்றேன்
ஏற்றம் தந்துவிடும்
இதுபோன்ற கருத்துகளால்
ஆற்றலை வளர்ப்பேன்
அனுதினமும் கவி சொல்வேன்

மிக்க நன்றி நன்றி சகோ
வாழ்கவளமுடன்...!

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதை
மீண்டும் மீண்டும் படித்து இன்புற்றேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

// Ramani S கூறியது...
அற்புதமான கவிதை
மீண்டும் மீண்டும் படித்து இன்புற்றேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

வணக்கம் ரமணி சார் ..!

எழுதிய கவிதைகளில் எனக்கும் மிக பிடித்த கவிதை இது ...

தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக
மகிழ்கிறேன்

மிக்க நன்றி வாழ்த்துக்கள்

சசிகலா said...

தங்கள் வலை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் இருப்பின் வருக.

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html?showComment=1381289857959#c6032878679408769451

இராஜராஜேஸ்வரி said...


வஞ்சி விரல் நெஞ்சறையில்
அஞ்சலிட ஊரும் -


கொஞ்சி வரும் அழகுத்தமிழ் கவிதைக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Ranjani Narayanan said...

'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா'
உங்களின் அழகிய தீயே' படித்தவுடன் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.
தீயிலும் எ'அவள்' இருப்பதால் அழகானதோ தீ?
வலைசர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்!

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரே! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். தங்களின் கவிதையில் ஒவ்வொரு வரியும் கதை பேசுகிறது. சிறப்பான ஆக்கத்திற்கு நன்றீங்க.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சசிகலா

வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும்
தகவல் தந்தமைக்கும்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

// இராஜராஜேஸ்வரி கூறியது...

வஞ்சி விரல் நெஞ்சறையில்
அஞ்சலிட ஊரும் -


கொஞ்சி வரும் அழகுத்தமிழ் கவிதைக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!//

வணக்கம்

தங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் தனபாலன் சார்

தங்கள் தகவல் கண்டு மகிழ்கிறேன்
மிக்க நன்றி

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

2008rupan கூறியது...
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

வணக்கம் ரூபன்

தங்கள் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

Ranjani Narayanan கூறியது...
'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா'
உங்களின் அழகிய தீயே' படித்தவுடன் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.
தீயிலும் எ'அவள்' இருப்பதால் அழகானதோ தீ?
வலைசர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்!

வணக்கம் Ranjani Narayanan அம்மா

தங்கள் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும்,ரசனைமிக்க பாடல் ஒப்பீட்டுக்கும் வாழ்த்துக்கும்

மிக்க நன்றி

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் அ .பாண்டியன்

தங்கள் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும்,
மிக்க நன்றி

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

மகேந்திரன் said...

தீந்தமிழ் சொற்களால்
பூந்தென்றல் இன்னிசையை
வாசித்த பாவலனே...
ஆக்கம் மனதில்
நிறைந்ததய்யா....

சீராளன்.வீ said...

மகேந்திரன் கூறியது...
தீந்தமிழ் சொற்களால்
பூந்தென்றல் இன்னிசையை
வாசித்த பாவலனே...
ஆக்கம் மனதில்
நிறைந்ததய்யா....


வணக்கம் மகேந்திரன் ...!

தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக மகிழ்கிறேன்
மிக்க நன்றி

வாழ்கவளமுடன்

அம்பாளடியாள் said...

சொவதற்கு வார்த்தைகள் இல்லை என் அன்புச் சகோதரா முத்தான சொல்லெடுத்துத் தாங்கள் வடித்த கவிதை வரிகளுக்குள் காணாமல் போய் விட்டாள் இந்த அம்பாளடியாளும் !!