எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!
எதிர்வீட்டு யன்னலுக்குள்-நீ
எதிர்ப்பட்ட நேரத்தில்
இளங்காலை இலையசைவாய்
இதயத்தில் நிலநடுக்கம்...!
காற்றின் சுகந்தத்தில்
காலைப்பூ மலர்வதுபோல்
காய்ந்த உயிர் மகிழ்ந்திருக்க
காமமற்ற காதல் தந்தாய்...!
ஏனிந்தப் பிறவி என்று
எண்ணி நான் வாடையிலே
என்னிதயம் மகிழ்விக்க
எங்கிருந்து வந்தாயோ...!
காற்றைப் பிழிந்து நீரெடுத்து
காதல்பூ வளர்த்ததனால்
வித்துக்குள் முளைத்த வலி
விழியிரண்டில் தெறிக்குதடி...!
அன்பின் கலசத்தில்
அள்ளிநீ தந்த கனா
அடிமனதில் உறைந்து நிதம்
அதிகாலை வெடிக்குதடி....!
சாட்சியங்கள் மனமென்று
சறுக்கிவிட்ட சத்தியத்தின்
சந்ததி தீயில் என்னை
சாவடித்து எரித்தாலும்
மீண்டுமொரு பிறவி
மீதமாய் இருந்துவிடில்
மாண்ட உயிர் மீள்பிறக்கும்-உன்
மடிமீது நான் வாழ....!
பிரியமுடன் சீராளன்..!
இன்றைய என் கவிதையோடு என் வலைப்பூ சகோதரி இளமதி அறிமுகப்படுத்தும் / பகிரும் ,,,வலைப்பதிவாளர்கள் ஆக்கங்கள் போல
என் முகநூல் தோழி ரோஸ் வினி இன் ......வலைப்பூவையும் இணையத்தளத்தையும் இன்று தங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன் இவரின் எழுத்தாற்றல் திறமைகளை கண்டு நானும் அகமகிழ்ந்து நிற்கும் இத்தருணத்தில் நீங்களும் அவரின் ஆக்கங்களைப்பார்த்து ஊக்கமளிப்பீர்கள் என நம்புகின்றேன்
http://roojakoottam.blogspot.ch/
இந்த ரோஜாக்கூட்டத்தில் காதல் கவிதைகள் கண்களை நனைக்கின்றன
http://www.roojavanam.com/
இது ரோஜாவனம் ...உண்மையில் வனம்தான் ஏனெனில் இங்கே பலதரப்பட்ட பதிவுகள் பயனுள்ளதாய் அமைகின்றன நாவல்., கவிஞர் சோலை, மங்கையர் உலகம், சமையல் குறிப்புக்கள்,ஆரோக்கியம், உறவுகள்,ஜென் கதைகள் , கோலங்கள் குட்டீஸ் பூங்கா , மூலிகை மருத்துவம் ,யாழ் சமையல்.....போன்ற பிரிவுகளில் ஏராளம் பயனுள்ள பதிவுகள் .....அத்தனையும் எல்லோராலும் ரசிக்கப்பட வேண்டும் எனும் நப்பாசையில் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.....
என் தோழியின் எழுத்தாற்றல் வளர தங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
14 கருத்துகள்:
கவிதை மட்டும் அல்ல .உங்கள் தளத்தின் அழகு இதயத்தைக்
கொள்ளையடித்துச் சென்றது !! வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி Ambal adiyal தங்கள் முதல் கருத்தும் வாழ்த்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன
வாழ்கவளமுடன்
அழகான கவிதை அதுக்கேற்ற காட்சிப்படம் ரசித்தேன்.வலை அறிமுகத்துக்கு நன்றி சகோ!
கவிதை வரிகள் அனைத்தும் அறிமுகம் அண்ணா... அறிமுகம் சூப்பர்... வரிகளில குறிப்பாக
//காற்றின் சுகந்தத்தில்
காலைப்பூ மலர்வதுபோல்
காய்ந்த உயிர் மகிழ்ந்திருக்க
காமமற்ற காதல் தந்தாய்...!//
இந்த வரிகள் மிகவும் அருமை
மிக்க நன்றி தனிமரம் தங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை மீண்டும் மீண்டும் எழுத தோன்றவைக்கும்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ப்ரியா....என் முதல் ரசிகன் என்னிதயம் அதனால்தான் இவ்வாறெல்லாம் எழுதுகின்றேன்
தங்கள்வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி மா
வாழ்த்துக்கள்
அன்பு கலசத்தில் அள்ளித்தந்த வரிகள் ரசிக்க வைத்தன... பாராட்டுக்கள்...
அறிமுக இரு தளங்களும் புதியவை... நன்றி... தொடர்க... வாழ்த்துக்கள்...
அருமைப்பாராட்டுக்கள்
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகமகிழ்கிறேன்
வாழ்த்துக்கள்
தங்கள் வருகையும் பாராட்டும் மனமகிழ்வைத்தருகின்றன மிக்க நன்றி
கவியாழி கண்ணதாசன்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வணக்கம்!
ஏன்இந்த வாழ்வென எண்ணி அழும்பொழுது
தேன்ஈந்த தேவதை கண்ணசைத்தாள்! - வான்ஈந்த
நன்மழையில் உள்ளம் நனைந்திட்டாய்! நற்றமிழாம்
பொன்மழையில் உள்ளம் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் கவிஞரே
கவியினிலே கனிந்தவரே
கருத்திட்டீர் மகிழ்கின்றேன்
காற்றும் உன் பேர்சுமக்க
காதலிக்கும் தமிளுன்னை...!
தங்கள் வருகையும் இனிய கவி வாழ்த்தும் என்னை மகிழ்வுற வைக்கின்றன
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இந்தத் தளத்தினை அறிமுகம் செய்துவைக்கத் தவறி விட்டேனே .
மன்னிக்கவும் சகோதரா .என் பணி முடிவதற்குள் வலைச்சரத்தில்
அறிமுகம் செய்து வைக்கின்றேன் .
மிக்க நன்றி அம்பாள் அடியாள் தங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சியானதுதான் வலைச்சரத்தில் ஏற்க்கனவே என்னை அறிமுகம் செய்து இருக்கின்றார்கள்
மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
கருத்துரையிடுக