சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 8 August 2013

நிலாக் காதலன்...!


காதலித்த நாள் தொடக்கம்
கருமை  உன்னில்  கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி  நீதானோ...!


உன்னெழில் யாக்கை காட்டி
ஊட்டினாள்  சோறு பாட்டி
பொன்னெழில் நிழலைக்கொண்டு
பொய்கைக்கும்  திலகம் இட்டாய்..!

வட்ட முகத்து வான்மகளே
எட்டாக் கனியே இறைபூவே
ஏதிலி போலே  இருந்தேனோ
எனக்குள் வலியை  கொடுக்கின்றாய்...!

கவிஎழுதும் நொடிகளிலே
கண்ணுக்குள் கதை சொல்வாய்
காணாத போது உன்னை
கலங்கித்தான் போகின்றேன்...!

மழைக்கால மேகம் கொண்டு
மறைத்தானே  பகலவனும்
பருவம் அடைந்தோ நீ
பண்பாடு காத்து நின்றாய் ..!

எத்தனை மொழிகள் இவ்வுலகில்
அத்தனை மொழியும் உன்னழகில்
வித்தகச் செருக்கு கவிஞனுக்கும்
புத்திகள் தீட்டி பூக்கச் செய்வாய்...!

சதுப்பு நிலமோ சந்தணக்காடோ
விருப்பு வெறுப்பு வேற்றுமை இன்றி
புதுப்பூ வாசக் குணம்போலே
புத்தொளி தெளிப்பாய் பூமிக்கு...!

துருவக் காதலாய் பிரிந்தாலும்
உன்நிழல் பட்டால் ஒட்டிவிடும்
உயிரும் உயிரும் உருகி நிதம்
உழலும் இன்பக் கனவுகளில்...!

அடுத்தவர் காதலை வளர்த்தாலும்
அடிக்கடி உனக்கும் அரைமுகங்கள்
தடுத்திட நினைப்பேன் முடியவில்லை
துடிக்குது நெஞ்சம் உன்னாலே...!

வானத்து மகளே வளர்பிறை ஒளியே
கானகத்தும் பூக்கும் காய்க்காத தளிரே
தேனகத்து சிலையே நீ தேய்வதுமேனோ
சீதனக் கொடுமையென்று  செப்பிடவா உலகிற்கு...!

பிரியமுடன் சீராளன்


15 comments:

Anonymous said...

உதாரண வரிகளெடுத்துக் காட்டிக் கருத்தெழுத முடியவில்லை. கொப்பி பண்ணுதல் தடை.
நல்ல வரிகள். இனிய வாழ்த்து
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கோவைக்கவியே

தற்போது அந்த தடையினை எடுத்துவிட்டேன்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

இளமதி said...

வானத்து நிலவின் வனப்பில் வசமிழந்து
கானம் பாடும் கவிக்குயிலே! நன்றாய்த்
தானே வளர்ந்து தேயுமதைச் சீர்தனந்
தானே சீரழித்த தென்றாயே திகைக்கிறேன்!.

நல்ல கற்பனை சகோ!
நிலவும் சீர்செனத்தி இல்லாமல்
தேய்ந்தழிகிறதென்ற வரிகள் வித்தியாசமான சிந்தனை!

நல்ல கவிதை. அழகு!
வாழ்த்துக்கள் சீராளனே!

சீராளன்.வீ said...

மிக்க நன்றி இளமதி
தங்கள் வருகையும் கருத்தும் என்னை மகிழ்விக்கின்றன

வாழ்த்துக்கள் சகோ வாழ்கவளமுடன்

Priya said...

வானத்து மகளே வளர்பிறை ஒளியே
கானகத்தும் பூக்கும் காய்க்காத தளிரே
தேனகத்து சிலையே நீ தேய்வதுமேனோ
சீதனக் கொடுமையென்று செப்பிடவா உலகிற்கு...! /// அண்ணா அருமை... நிலவிற்கு நிச்சயம் வெட்கம் வரும் அண்ணனின் கவிதை கேட்டு :P

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தேய்பிறை ஏனென்று தீட்டிய சொல்களில்
தாய்தமிழ் ஓங்கும் தழைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தொலைபேசி எண்களை அறிய தரவும்!

சீராளன் said...

மிக்க நன்றி ப்ரியா தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன்

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

சீராளன் said...

வணக்கம் கவிஞரே

தங்கள் வருகையும் குறள் வாழ்த்தும் மிகவும் மகிழ்வைத் தருகின்றன
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன் தொலைபேசி எங்களை நன்றி

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சின்ன குழந்தை செயல்காட்டும் சீராளா
மின்னும் கவிதைகளை மீட்டு!

ஏன் புதிய பதிவு ஏற்றவில்லை?

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு



http://bharathidasanfrance.blogspot.com/ said...


நாளை மாலை இந்த நேரத்தில் உங்களுடன் பேசுகிறேன்

உங்களுடன் பேசுதற்குத் தொலைபேசி எண்களை அளித்துள்ளீா்

அதற்கு முன்போடும் எண்களை
[நாட்டின் எண்களை] அறியத் தரவும்

சீராளன்.வீ said...

வணக்கம் கவிஞரே..!

தங்கள் மீள் வருகைக்கும் கவிக்கும் மிக்க நன்றி புதிய பதிவு விரைவில் போடுகிறேன்.....எனது தொலைபேசி இலக்கத்தை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கின்றேன்

நன்றி வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்

மகேந்திரன் said...

நிலாமகளுக்கு
நீவீர் பாடிய காவியம்
நினைவில் நிற்கிறது...

சீராளன்.வீ said...

வணக்கம் ..!

மிக்க நன்றி மகேந்திரன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

கவிதை அருமை