சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 30 June 2012

தாக்கம் ...!ஓரப்பார்வையால் 
உன்னை பார்த்ததைவிட 
உற்றுப்பார்த்திருக்கலாம் சூரியனை..
கதிர் வீச்சு தாக்கம் 

கண்ணோடு போயிருக்கும் 
இதயம் அழிந்திருக்காது..!ப்ரியமுடன் சீராளன் 

உயிர் பிரியும் காலம் வரை...!


மான் விழிகள் மலர் கொய்யும்-உன்
பூங்காவன வாசலில்
வலிகளை விதைத்து ஏன்
வடிவு பார்க்கிறாய் ........!

உன்னையே சுவாசிப்பதால்.............!நினைவுகள் 
தொடும் தூரத்தில் 
நீ இருக்கும் வரைக்கும்...
சுவாசம் தேவை இல்லை...
உன்னையே சுவாசிப்பதால்.............!ப்ரியமுடன் சீராளன் 


வேண்டாம் ... !நிஜங்களோடு 
சலனப்படும் நிமிடங்கள்.......!

ஏன் இப்படி.....!இயற்கையின் எழிலில்
இதயம் காயும் காதலே
நூறாண்டுகள் தவத்தின்
வரங்களாய் போன சாபத்தில்
இன்னுமா இடைவெளிகள் ....!

நிஜமாய்...!உனக்கும் ...
பொய் பிடிக்கும் என்பதால் 
சிரித்துக்கொண்டிருக்கிறேன் 
காதல் இன்னமும் அழுகிறது
மனதோடு மௌனமாய்....!ப்ரியமுடன் சீராளன் 

ஆசைகள்...!எனக்கும் ஆசைதான்.....
முன்பனித்துளியில்
மலராய் பிறக்க
அருவியின் இசையில்
இலைகளாய் ஆட...!

Friday 29 June 2012

விழி திறந்து அழுகின்றேன்...!விழி திறந்து 
அழுகின்றேன்
வெட்கத்தில் அல்ல...
இமைகளாய் இருக்கும் நீ
நனைந்திடுவாய் என்பதற்காய்...

..............seer..............

Thursday 28 June 2012

வாசமோடிருப்பாய்....!மூன்றாம் பிறையெனினும்
முழு நிலவாய் ரசித்த என்னை 
வேண்டாம் என்பதற்கு 
வேதமென்ன நீ படித்தாய்....!

இதுவும் பாடம்தான்....!


தியானம் செய் என்று
நீ சொன்ன வார்த்தை 
தேனாய் த்தான் இருந்தது அன்று...
ஆனால் 
என்னை மறக்க 
கற்றுக்கொள் என்ற 
மறைமுகப்பொருளும் இருந்ததை 
அறிந்தேனடி இன்றுதான்.....!

ப்ரியமுடன் சீராளன் 

தலையணையிடம் கேட்டுப்பார்...!உன்னால் எரிக்கப்பட்ட
மூங்கில் காட்டின் 
சாம்பல் மேடுகள்
இன்றும் சங்கீதம் இசைக்கின்றன....!

ஏன் கண்மூடிச் செல்கின்றாய்...?

நேற்று முளைத்த காளானும்
உனக்காய் குடைவிரிக்கும்
ஒருதடவை நீயும் 
ஒதுங்கி நிற்க...!
உனக்கேனோ முடியவில்லை...ஓ
காளானுக்கடியில்
கண்ணீர் விடுவது -என்
கல்லறை என்பதாலோ
கண்மூடிச்செல்கின்றாய்...!
ப்ரியமுடன் சீராளன் 
இரவலுக்கு வாழ்வதனால்...!
பூக்கள் பேசும் மொழிகளிலே -உன் 
புன்னகையே உயிரெழுத்து 
பொன்வான நிழலுக்கும்
பொட்டுவைத்த என் சிட்டே.....!

பூக்களில் எழுதுதிய புன்னகைகள் ..!

விழிகளின் தேடல்....!வானவெளி நிலவில்
வரிக்கோல முகில் இடுக்கில் 
நீரோடு மறைத்திருக்கும்
நீலவண்ண பனித்துளியே ...!

உனக்கென...!

உன்.....! 
எழில்நுதல் வியர்த்திட 
தளிர் உளம் தடவிடும் 
வழி கொடு உயிரே.....!
உன் .....!
விழிநிழல் பதிந்தொரு
வலிதணல் எரியினும்
மொழி இதழ் திறவேன் ..!
ஒரு...!
யுகமது முடியினும்
அகமது உனக்கென
முகவுரை இடுவேன்...!
=================

ப்ரியமுடன் சீராளன்.

வந்து விடு நிலவாக..!மலர்கள் தழுவிய 
பனித்துளியின்
மகரந்த வாசனையில் ..லயித்திருக்கும் 
வண்ணத்து பூச்சியாய் -உன்
நினைவுகள் மெழுகிய

விழித்திரையில் 
யாசகம் செய்கிறேன் 
நீ வருவாயென ..........!

என்முன்னே....!உண்மைகள் 
துகிலுரியப்பட்ட 
வார்த்தைகளின் கதிர்வீச்சு
நிசப்த அலைவரிசைகளாய்
என்னிதயத்தை
ஊடறுத்த நேரம்-நீ
மழலையாய் சிரித்தாய்
உன் விரல்களின் நடுவே
கசந்கிக்கொண்டிருந்த
சிவப்பு ரோஜா
செந்நீர் வடித்தது 
என் இதயம் போன்று....!


ப்ரியமுடன் சீராளன் 


Wednesday 27 June 2012

அழிந்து போகின்றேன் ...!

மொழி பெயர்க்கப்பட்ட 
உன் மௌனத்தின் 
இடைவெளிகளில் நீ
கண்ணால் பேசிய காயங்கள்...
அடைப்புக்குறிக்குள்ளே 

அழுகின்றன.....!

மனதோடு..!

காதல் கண்ணாடியின் 
முன் பல முறை தோற்கிறது 
மனதோடு ஒரு முறைதான் தோற்கிறது...
ஆனால் காலம் முழுக்க 
அதே மனதோடு வாழ்கிறது......!     ப்ரியமுடன் சீராளன் 

என் பயணம்....!அதிகாலையில் 
அழுது கொண்டே விரியும் 
நிலவின் அறிவுரை
கேட்காத மொட்டுக்களாய் 
உன் மௌனம் .......!

காதல்..!காதல் என்பது வாழ்க்கையல்ல
அது ஒரு வசந்த காலம்
வாழ்ந்து வந்த
வாழ்க்கையை கூட 
மறந்து போகலாம்
ஆனால்.........!
வந்து போன காதலை
என்றுமே மறக்க முடியாது
ஏனெனில்........!
காதல் என்பது வாழ்க்கையல்ல...!            ப்ரியமுடன் சீராளன் 

ஞாபகப்படுத்திக்கொள்..!வாழ்வியல் சொல்லும்
கீதையின் பரிமாணமாய்
ஈரம் காயாத நினைவுகளை
எனக்குள்ளே புதைத்தவளே
நீ அறிவாயா..........?

நிஜமெனில் ...!மரணத்தின் பின் 
பேர் சொல்லும்
வாழ்க்கையை -நீ
வாழ்ந்தாலும் .......
பிரிவின் பின்னும் 
நேசிக்கும் காதலை
சுமந்து பார் ........
இதயம் உள்ள ஜீவன்
பிறக்கும் வரைக்கும்
உன் பேர் சொல்லும்.......!priyamudan seeralan 

உயிர் தீபம்...!சிவந்த விழி தூங்கையிலே 
சிதைந்து போன சொர்ப்பனத்தில்
வந்து போன நினைவுகளை
வழிதோறும் தேடுகின்றேன்............!

கலங்கரையாய் நீ இருப்பாய்....!


ஓயாத நினைவுகளில் 
உழலுகின்ற வாழ்வுதனில் 
சிலையாக நீ சிரிக்க 
சிற்பி நான் அழுகின்றேன்....!

ஏன் எரித்தாய்...?


வெண்ணிடை கொண்ட மேகம்
பெண்ணிடை சிநேகம் கொள்ள
கண்ணிடை கசிந்த நீரும்
மண்ணிடை தழுவிக்கொள்ள....!
காற்றிடை கலைந்த கேசக்
கண்கவர் ரோஜா தாள
மேற்கோளி நிறத்தில் தேகம்
மின்மினி போல மின்ன .....!

தேரொன்று அசைவதுபோல்
திசையெங்கும் ஒளிபரவ
தேவதை நீ வந்தாய்
திகைத்து நின்றேன் உனைநோக்கி....!

நினைவெல்லாம் நீயென்று
நித்தமும் நீ சொன்னதெல்லாம்
நிலையாத கனவென்று
நிரூபிக்க வந்தாயோ...!

உன் எழில் நுதலில் மின்னுகின்ற
ஏகாந்த பொன் திலகம்
எனையன்றி யாரிட்டார்
என்னவளே சொல்லிவிடு....!

ஒருதலை காதல் இல்லை
உள்ளத்தில் எரிந்து போக
இருதலை காதலடி
இருந்துமேன் எனை எரித்தாய்....!

======================

ப்ரியமுடன் சீராளன்....

என்னோடு நிழலாடும்...!

ஊமைவிழி சிந்துகின்ற 
உவர்துளிகள் நீயாக...
பேதை மன வாசலிலே
பெருக்கெடுக்கும் ஞாபகங்கள்...!