சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 27 June 2012

கலங்கரையாய் நீ இருப்பாய்....!


ஓயாத நினைவுகளில் 
உழலுகின்ற வாழ்வுதனில் 
சிலையாக நீ சிரிக்க 
சிற்பி நான் அழுகின்றேன்....!


தூரிகையில் சிந்துகின்ற
துளி வர்ணம் உன் நுதலாய்
மூன்றாம் பிறைபோல
முன் நின்று கொல்லுதடி...!

முன்பனி துளிசொரிய
பூ வெட்கத்தில் தலைகுனிய
மகரந்தம் மண்ணோடு
மண்ணாகிப் போனதுபோல்
உன்விழிகள் திசைமாற
உணர்வற்றுப்போகின்றேன்....!

மௌனத்தின் இடுக்கண்ணில்
மயக்கங்கள் சலனமிட
வலிகள் கொண்ட வரலாறாய்
வாழ்வெனக்கு சிலேடையடி....!

உச்சந்தலை முடியில்
உன் நினைவு தீச்சொரிய
எச்சக் கலசங்கள்
எனைப்பார்த்து மகிளுதடி...!

கைக்கிளை காதலுக்கு
கடிகாவல் இனிக்கவில்லை
கார்குழலி உன் காதல்
கண்களுக்குள் ஜனிக்கவில்லை....!

ஆனபோதும்-என்
காதலெனும் நீரூற்றில்
கண்ணீரே சுரந்தாலும்
காலச் சுவடுகளில்
கலங்கரையாய் நீ இருப்பாய்....!

================

ப்ரியமுடன் சீராளன் 

No comments: