சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 28 ஜூன், 2012

இரவலுக்கு வாழ்வதனால்...!
பூக்கள் பேசும் மொழிகளிலே -உன் 
புன்னகையே உயிரெழுத்து 
பொன்வான நிழலுக்கும்
பொட்டுவைத்த என் சிட்டே.....!வெண்பனி குடைபோலே 
மின்னுகின்ற பேரழகில்
வெப்பக் காற்றுனக்கு
வீசுவது ஏன் தோழி.....!

உன்னைக் காண்பதற்கு 
என்னை கொளுத்துகிறாய்
உரிமம் தந்தது யார்
உயிரின் நீயா,பிரிவின் தீயா...!

அணுக்கள் பிரிந்தும்
அழிக்காத வரம் காதல்
உனக்குள் பிரிந்ததனால்
உயிருக்குள் தினம் மோதல்.....!

நிழலாடும் சோலைகளில்
நிலாப் பூக்கும் ஒளிபோலே
நெஞ்சிற்குள் புகுந்துவிட்டு 
நெருஞ்சி விதை நடுகின்றாய்.....!

வித்தகன் பாடினால்
வில்லிசைகள் அழுவதில்லை 
விம்மல்கள் ஒன்று சேர்ந்தால்
விழிகளுக்கு நாணமில்லை ...!

ஆதலினால் 
இறப்பினில் சுகமிருப்பின்
இறக்கின்றேன் இன்றேனும்
இரவலுக்கு வாழ்வதனால்
இயற்கைக்கும் நான் தோஷம்.....!
========================
ப்ரியமுடன் சீராளன் கருத்துகள் இல்லை: