சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 30 ஜூன், 2012

உயிர் பிரியும் காலம் வரை...!


மான் விழிகள் மலர் கொய்யும்-உன்
பூங்காவன வாசலில்
வலிகளை விதைத்து ஏன்
வடிவு பார்க்கிறாய் ........!

இருதயம் இழந்த ஆன்மாவின்
அழுகையை ஏனோ மறைக்கிறாய்
புன்னகை வாசமிட்டு...!

உன் யன்னலின் வழியே
ஓரப்பார்வை வீசியே
உயிரை குடித்தாய்.
விலகிவிட நினைத்தேன்
விழிகள் அறியா விம்பமாய்
உள் நுழைந்து உறங்க வைத்தாய்...
உயிரோடு மண்ணறையில்...

வாழ நினைக்கும் வாலிபங்கள்
வழியறியா வனாந்தரத்தில்
சிதைகளுக்குள் சிரிக்க வைத்தாய் ஆனபோதும்  

நாணலாய் நானிருந்து
நதியோரம் அழிந்தாலும்
வீணைபோல் நீ இருந்து
மீட்டிடுவாய் சங்கீதம்

ஓடும் மேகத்தில்
உலவுகின்ற மழை நீராய்
உன் நினைவில் அலைந்திடுவேன்
உயிர் பிரியும் காலம் வரை...!

ப்ரியமுடன் சீராளன் 


1 கருத்து:

Priya சொன்னது…

நாணலாய் நானிருந்து
நதியோரம் அழிந்தாலும்
வீணைபோல் நீ இருந்து
மீட்டிடுவாய் சங்கீதம்// ...........வரிகள் அற்புதம்