சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 27 ஜூன், 2012

அழிந்து போகின்றேன் ...!

மொழி பெயர்க்கப்பட்ட 
உன் மௌனத்தின் 
இடைவெளிகளில் நீ
கண்ணால் பேசிய காயங்கள்...
அடைப்புக்குறிக்குள்ளே 

அழுகின்றன.....!


அங்கே....
புன்னகைக்கும் உன் இதழ்கள்
புதிய மொழி பேசியதால்
வியந்துபோன வித்தகனாய்
விழிமூடி ரசிக்கின்றேன்...!

சிலேடையில் மொழிகின்ற உன்
சில்மிசங்கள் என் நெஞ்சில்
சித்திரம் கீறுதடி .........
இருந்தும் சிரிக்கின்றேன்
வலித்தாலும் வாழ்க்கை
உன்னோடு சேருமென்று ..!

கனவுகளை சுமக்கின்ற
காலங்கள் தந்தவளே
கார்காலம் ஒன்று
காய்ந்து கிடக்கிறது ...!

தென்றலாய் வேண்டாம்
புயலாகவேனும் வந்து போ
தடயங்கள் இன்றி
அழிந்து போகின்றேன்..! 
ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: