சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 27 June 2012

ஞாபகப்படுத்திக்கொள்..!வாழ்வியல் சொல்லும்
கீதையின் பரிமாணமாய்
ஈரம் காயாத நினைவுகளை
எனக்குள்ளே புதைத்தவளே
நீ அறிவாயா..........?

ஈரைந்து மாதங்கள்
எனைசுமந்து பெற்ற பின்பு
நிலா சோறூட்டி
நித்திரையில் அழகு பார்த்து
கன்னத்தில் முத்தமிட்டு
கை பிடித்து நடை பழக்கி
பள்ளிக் கடப்படியில்
பக்குவமாய் தூக்கிவந்து
பாடங்கள் முடிந்த பின்பு
பரிவோடு தூக்கியவள்
பாசத்தை மறக்க வைத்து
பெற்ற கடன் தீர்க்கா பாவம்
பேதை இவன் சுமக்க வைத்தாய்...!

என்றோ ஒருநாள்
தாயாகி நீயும்
தவமிருந்து பெற்ற பிள்ளை
தலையணைக்கு முத்தமிட்டால்
ஞாபகப்படுத்திக்கொள்
என் தாயின் இதயம்
இறந்து விட்ட காரணத்தை..........!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: