சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 28 June 2012

விழிகளின் தேடல்....!வானவெளி நிலவில்
வரிக்கோல முகில் இடுக்கில் 
நீரோடு மறைத்திருக்கும்
நீலவண்ண பனித்துளியே ...!

வாடைக்காற்றோடு
வம்பிழுக்கும் பூச்சரத்தில்
ஒருசொட்டு விழுவாயோ
உவகைகொள்ளும் என் ரோஜா....!

நாவோடு நடனமிடும்
நன்னெறி மொழி நடையாய்
விழி நுதல் நெருக்கத்தில்
வியர்க்கின்ற திலகத்தில்
என்னவள் புன்னகை
என்றென்றும் ஒளியாகும்....!

சொல்லற்ற சொர்ப்பனத்தில்
சொக்குகின்ற சோகங்கள்
மெல்லக் குறைந்துவரும்
மேதினியில் அவள் அசைவில்....!

கல்நெஞ்சக் காமுகனும்
கைதொளுவும் தெரேசாபோல்
பசுந்தோகை இளமையிலாய்
பலவர்ண கோலமவள் ....!

எப்பிறப்பும் அணையாத
எழிலான ஒளிமுதலாய்
இப்பிறப்பின் இசையாக
எனைச்சேர வருவாளோ..!
==================

ப்ரியமுடன் சீராளன்

No comments: