சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 30 June 2015

பொன்விழா நிறைவு மலர் வாழ்த்து ! இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் !



இறைமகன் கந்தன் இனிமை விளைக்க 
முறையுடன் பொன்விழா முந்தும் ! - நிறைவுடன் 
இன்பம் குடிகொள்ளும் ! இன்றேன் மழைசொரியும் 
மன்றம் கமழும் மலர்ந்து !



சீரடி சிறக்கப் பாக்கள் 
          செதுக்கிடும் எங்கள் ஆசான் !
பாரதி தாசன் என்னும் 
           பசுந்தமிழ்ப் பாலின் பிள்ளை !
காரிகை கற்றுத்  தேர்ந்த 
            கனிமனத் தூய   வர்க்குப் 
பாரிசில் நடக்கும் இந்தப் 
            பண்விழாச்  சிறக்க வேண்டும் !

பொன்விழா நிறைவை மேவும் 

            பூந்தமிழ் பாடும் ஆசான் 
இன்பலா வாழை தேமா 
            இணைந்திடும் வாழ்வை ஏற்க !
அன்புலா  நெஞ்சம் என்றும் 
             அளவிலா இன்பம் நெய்க !
மின்னிலாப் பத்து நூறை 
             வியப்புறும் வண்ணம் காண்க !

தன்னிகரே இலாதவொரு தமிழ்த்தாய் பெற்ற 
             தாயகத்துப் பெரும்புலவன் எங்கள் ஆசான் !
என்னுயிரும் கவியெழுதி இன்பம் கொள்ள 
             இலக்கணத்தை இலக்கியத்தை  ஈன்ற வள்ளல் !
நன்மையுறக் கொண்டாடும் பொன்சேர் ஆண்டை 
              நறுமலர்கள் தாம்தூவி உலகம் போற்றும் !
பன்விழாவும் படர்ந்துமணம் பரப்ப வேண்டும் 
               பாட்டரசர் புகழனைத்தும் பெறவும் வேண்டும் !

தன்கையின் எழுத்தாணி தமிழைப் பேசத் 

               தரணியெலாம் பாமணக்கும் ! சோலை எங்கும் 
மென்தென்றல் தழுவிமலர் வீசும் வாசம் 
                விருத்தத்தில் வெண்பாவில் மணக்கும் நன்றே !
கன்னலுடன் கனிச்சாறும் குறளில்  சேர்த்துக் 
                 களிப்புடனே தருகின்ற எங்கள் ஆசான் !
தொன்மையுறும் எம்மொழிபோல் என்றும் வாழத் 
                 தோகைமயில் வாகனனே துணையாய் நிற்பாய் ! 

பிரியமுடன் வாழ்த்தும் சீராளன் 

21 comments:

Yaathoramani.blogspot.com said...

எங்கள் என்ற சொல்லுக்கு
உலகக் கவிஞர்கள் அனைவருக்கும் எனப்
பொருள் கொள்வதே மிகச் சரியாக இருக்கும்
என்னைப் போல் அவருக்கு ஆயிரம் ஏகலைவன்கள்
தொடரட்டும் அவர்தம் தமிழ்த்தொண்டு
அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

சீராளன்.வீ said...

வணக்கம் ரமணி ஐயா !

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

ஆம் ஒன்றல்ல பலநூறு கரங்கள் பாவெழுதக் கற்றுத் தரும் ஆசானுக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய வாழ்த்து நன்றி ஐயா !

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கவிஞர் அவர்களின் தமிழ்ப்பணி சிறக்க இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு நன்றி.

Iniya said...

பொன் விழாக்காணும் ஆசானுக்கு முதற்கண் என் அன்பு கலந்த வணக்கமும் வாழ்த்துக்களும்...!மேன்மேலும் அவர் புகழ் ஓங்கட்டும்!அவரை சிறப்பிக்க பாடிய தங்களுக்கும் என் பாராட்டுக்கள்....!

பொன்விழா காணுமாசான் போற்றிப் புகழ்ந்தொரு
நன்வெண்பா காண நலவெண்பா- இன்பத்தைக்
கொண்டு சிறக்கட்டும் கோபுரங்கள் ஆக்கட்டும்
வண்டுவிழி உண்ணும் வடிவு.

நல்லாசான் நாடி நயம்படக் கற்றவை
எல்லாம் இனிதாய் எழுதுகவே - வல்லகவி
என்றெல்லாக் கண்ணும் எழுத்தெண்ணி வாழ்த்தட்டும்
குன்றின் விளக்காகக் கொண்டு!

நன்றி ! வாழ்க வளமுடன் ...!

சசிகலா said...

பொன்விழா நிறைவுப் பாடலை அழகாக எழுதியுள்ளீர்கள்...
நானும் எழுதியிருந்தேன். வாழ்த்துக்கள் சகோ.
ஐயாவிற்கு எனது வணக்கம்.

சசிகலா said...

பொன்விழா நிறைவுப் பாடலை அழகாக எழுதியுள்ளீர்கள்...
நானும் எழுதியிருந்தேன். வாழ்த்துக்கள் சகோ.
ஐயாவிற்கு எனது வணக்கம்.

UmayalGayathri said...

ஆசானுக்காக. எழுதிய பாடல் அருமையாக இருக்கிறது சகோ.
ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
தம +1

UmayalGayathri said...

ஓட்டுப் பட்டையை காணவில்லையே சகோ..?

அம்பாளடியாள் said...

வணக்கம் !
பொன்விழாக் காணும் எங்கள் குருவுக்கும் பொன்னான வாழ்த்துப் பாவைத் தந்த அன்புச் சகோதரனுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் !

KILLERGEE Devakottai said...

Arumai

தனிமரம் said...

எங்கள் ஆசானுக்கு என்றும் இனிய கவிதை
ஏற்றிப் பாடட்டும் எட்டுத்திசையிலும்
எப்போதும் சிரிக்கும் பாரதி ஐயாவுக்கு
எளிமையான கவிதையில்
எழுதிய வாழ்த்து மாலையில்
என் வாழ்த்தையும் ஏற்றி விடுகின்றேன்
என்றும் ஆசான் எல்லா வளமுடனும்
எப்போதும் வாழட்டும்.

Yarlpavanan said...

பொன் விழாக் காணும் அறிஞருக்கு
எனது வாழ்த்துக்கள்!

Unknown said...

பொன்விழா நாயகருக்கு அருமையன வாழ்த்து! பல்லாண்டு வாழ்க அவர் ! தமிழும் அவரால்
வாழும் வளரும்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சீர்

பாட்டுடைத் தலைவனுக்கு.
பாவரி சாத்தினாய்
வரிகள் என் நெஞ்சில்
ரீங்காரம் செய்து
ஆலோலம் பாட..
பாரில் உள்ள மாந்தர்கள்
போற்றி வாழ்த்திட எம் ஆசான்
நலமுடன் வாழ்கவென வாழ்த்துகிறேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம +1

balaamagi said...

வணக்கம்,
தங்கள் பா வாழ்த்து அருமை,
சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

அன்புமழை யாக அளித்த அருங்கவிகள்
என்றுமுளம் நின்றே இனிப்பனவாம்! - பொன்னன்றிப்
பூக்கள் பொழிந்தேன்! புகழ்த்தமிழ் தந்திட்ட
பாக்கள் அணிந்தேன் பணிந்து

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

இளமதி said...

அன்புச் சகோதரரே!

எங்கள் ஆசானுக்கு அளித்த
அருமையான பொன்விழா மாலை!
மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்!

சகோ!.. இன்று உங்களையும் எங்கள் ஐயா
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆனந்தக் கோலாகலத்தைக் காண வாருங்கள்!

Yarlpavanan said...

சிந்திக்கவேண்டிய கருத்து

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

வலிப்போக்கன் said...

தங்களின் ஆசானின் பொன் விழாவுக்கு கவிதை..பா பாடியது நன்று....