உனைத்தேடும் உன்னதம் இங்கே
உயிர்வாழும் உள்ளுக்குள் நெஞ்சே
கவிபாடக் கனவுகள் கண்டேன்
கண்ணுக்குள் நீயில்லை சகியே !
(உனைத்தேடும் உன்னதம் இங்கே )
சிறகுகள் முளைக்கின்ற நொடிகள்
பறத்தலை நினைத்திடும் மனது
உறவுகள் அணைத்திடும் வரையில்
துறவறம் நெஞ்சினில் தொலைவில்
எத்தனை ஊடல்கள் உன்வசம் சுமந்தாய்
அத்தனை சுகங்களும் அழித்து நீ மறைந்தாய்
அழகிய மேடைகள் அவசியம் இல்லையே
ஆடல்கள் அழகென்றால் நாடகம் முல்லையே
(உனைத்தேடும் உன்னதம் இங்கே )
கோடான கோடி பெண்கள் கொட்டிடும் நேசம் எல்லாம்
நாடிநீ தந்தாய் கவியே நானன்று முகிழ்ந்தேன் கனியே
இத்தனை சுகங்கள் சேர்க்கும் இதழினில் தேனோ அறியேன்
நித்தமும் வந்தால் மாறும் நிழலென என்வலி மறையும்
சித்தனாய் மாறும் எண்ணம் சிந்தையில் அறுந்தே போக
எத்தனை இன்பம் தந்தாய் இதயத்தில் இடமே இல்லை
பெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்
தேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்
(உனைத்தேடும் உன்னதம் இங்கே )
பிரியமுடன் சீராளன்
13 கருத்துகள்:
கனவுகள் எழுதிய கவிதை மனக்
கண்களுக்கும் தந்தே இனிமை !
நிலைமை தான் மாறிட வேண்டும்
உன்றன் நினைப்பதே தேறிட வேண்டும் ...
அருமையிலும் அருமையான கவிதை வரிகளுக்கும்
வாழ்த்துக்கள் சகோதரா .
உனைத்தேடும் உன்னதம் இங்கே
உயிர்வாழும் உள்ளுக்குள் நெஞ்சே
கவிபாடக் கனவுகள் கண்டேன்
கண்ணுக்குள் நீயில்லை சகியே !
அருமையான உருக்கும் கவிதை1வழமைபோலவே!
கனவுகள் கலைந்த போதும்
கண்ணுக்குள் வைத்தாய் வாழ்க!
நிலைமைகள் மாறவேண்டும்
நீ நித்திரை கொள்ளவேண்டும்
ஏக்கம் இன்றி நீ அமைதியாய்
வாழ்க இனிமைகள் கூடி என்றும்!
வாழ்க வளமுடன்.....!
#பெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்
தேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்#
முதல் வரி திடுக்கிடச் செய்தது ,இரண்டாவது வரி திருப்தியை தந்தது !
சிறந்த பகிர்வு
வரவேற்கிறேன்.
சிறந்த பகிர்வு
வரவேற்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
இனியாவுன் வார்த்தையிலே
இனிக்கிறது நெஞ்சமெல்லாம்
தணியாத தாகங்கள்
தகர்கிறது அன்பினிலே...!
மிக்க நன்றி சகோ இனியா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Bagavanjee KA
எல்லாம் ஒரு மாற்றம்தான்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Jeevalingam Kasirajalingam
வரவேற்பை மனதார ஏற்கின்றேன்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
வணக்கம்!
கனவுகள் தந்த கவிதையைக் கண்டு
நினைவுகள் ஓங்கும் நெகிழ்ந்து! - மனமெனும்
வானில் வளம்வரும் வஞ்சியைத் தான்எண்ணித்
தேனில் குளித்தாய்த் திளைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
என்னுயிர் பூக்கும் எழில்கவி கண்டேயும்
மென்னுள்ளம் பூக்கின்ற வாழ்த்துக்கள் -என்றென்றும்
நெஞ்சில் நெகிழ்வூட்டும் ! நல்லோனே இவ்வறிவும்
விஞ்சிட நாளும்தா வித்து !
இனிய வணக்கம் கவிஞரே நெஞ்சம் நெகிழ்ந்தேன் உமது கருத்துக் கண்டு
மிக்க நன்றி இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
உண்மை அன்பைதேடும்
உருக்கமான பாடல்!
வாழ்த்துக்கள் சகோ!
மிக்க நன்றி மைதிலி
தங்கள் வரவும் வாழ்த்தும் மன மகிழ்வைத்தந்தது
வாழ்க வளமுடன்
கருத்துரையிடுக