சிந்தையி லூறிய செந்தமி ழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்க ளே !
பொன்னைநி கர்த்திடும் பூவிழி யா - ளவள்
புன்னகை சிந்திடும் நாளினி லே
என்னுயி ரோசையு மேழிசை யே - தரும்
ஏக்கங்க ளைந்தக மின்புற வே !
கண்ணைக்க வர்ந்திடுங் காரிகை யா - ளவள்
காட்டிய அன்பிலும் பேரெழி லே
வண்ணக்க னாக்களும் வாய்மொழி யா - குமே
வஞ்சிப்பெ யர்சொல்லித் தூங்கையி லே !
உன்னைநி னைத்திடும் போதினி லே - நெஞ்சில்
ஊர்மண்ணின் வாசனை வீசிடு தே
தன்னந்த னிமையைப் போக்கிட வே - நீயும்
தந்தாய்நி னைவுகள் ஆயிர மே !
கொஞ்சுங்கு ழந்தையைப் போலிருந் தே - மனங்
கொள்ளைய டிப்பவள் கூந்தலி லே
விஞ்சும்ம ணந்தரும் விந்தையு மே - மலர்
விண்டுவ ழிந்திடுந் தாதுக ளே !
மந்தாரச் சோலையின் மாங்குயி லோ - வஞ்சி
மார்கழித் திங்களின் தண்ணொளி யோ
செந்தூரப் பூவிதழ்த் தேன்துளி யோ - பாரி
சேவகஞ் செய்தமுல் லைக்கொடி யோ !
ஊடலைப் பூக்குமு தட்டழ கே - காதல்
ஊறுமி ராகத்தின் மோகன மே
சேடலைப் போலிரு கன்னங்க ளே - அவள்
சீதைப்பி றப்பெனச் செப்பிடு மே !
ஆன்மாநி றைந்தவ ளேகிட வே - மின்னும்
ஆகாயத் தாரகை தோன்றலை யே
தேன்மாந றுஞ்சோலை பூக்கலை யே - வீசும்
தென்றல்த வழ்ந்திடக் காணலை யே !
.....................கும்மிச் சிந்து தொடரும் ...!
பிரியமுடன் சீராளன்
16 கருத்துகள்:
அருமையான கவிச்சிந்துதொடருங்கள்!
அருமை
அருமை
கவிதையை ரசித்தேன். அருமை.
பாவலரே கவிதை மிகவும் அழகு ரசித்தே. செந்தூரப்பூ என்று இருக்கின்றதா ? கவிஞரே இருப்பினும் அந்த
// செந்தூரப் பூவிதழ்த் தேன்துளி யோ - பாரி //
என்ற வரிகள் அழகினும் அழகு வாழ்த்துகள் சொல்ல பக்குவம் இல்லை ரசித்தேன் அவ்வளவே...
தமிழ் மணம் 3
மிக்க நன்றி நேசன் தங்கள் முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும்
மிக்க நன்றி கரந்தை மைந்தரே தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும்
மிக்க நன்றி முனைவர் திரு.ஜம்புலிங்கம் ஐயா...தங்கள் வருகையும் கருத்தும் எனை வளர்க்கின்றன நன்றி
மிக்க நன்றி நேசன் தங்கள் முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும்
வரிகள் அனைத்தும் வார்த்தைத் தேன் துளிகள் கவிஞரே,,,,
அருமை அருமை,,
வணக்கம் ஜி !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
ஆம் செந்தூரப் பூவென்று உலகில் இல்லை என்றுதான்
பலரும் சொல்லக் கேட்டு இருக்கிறேன் முதன்முதலாக
கங்கை அமரன் தான் தன்னுடைய செந்தூரப்பூவே என்னும் பாடலில் எழுதி உள்ளார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன் .......நமக்கு ஒசைக்கேற்ற பூவாக இருக்குதே அதுபோதும் இல்லையா !
வணக்கம் பேராசிரியரே !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளத்துடன்
அருமை. வாழ்க வளமுடன்.
சீராளன் தாமதமாக வருவதற்கு முதலில் மன்னிக்கவும்..
அருமையான இனிமையான கவிதை. ரசித்தோம் தமிழ்த்தேனை!!
வணக்கம் சகி !
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் !
வாழ்க வளத்துடன்
வணக்கம் ஐயா துளசிதரன் !
எதற்கு இந்த மன்னிப்பு எல்லாம்
அவரவர்க்கு ஆயிரம் பணிகள்
அதற்குள் எத்தனை பதிவுகளைத்தான்
பார்க்க முடியும் எல்லாம் அறிவேன்
வருத்தம் வேண்டாம் !
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் !
வாழ்க வளத்துடன்
புலமையால் உச்சம் பெற்ற பாடல் வரிகள்!!!!!
தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ வாழ்க வளமுடன் வண்டமிழ் போல்.
கருத்துரையிடுக