சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 6 February 2016

கவிதை மொழி !


பாடும் கானம் பௌர்ணமி நிலவு 
பைந்தமிழ் போற்றும்  காவியம் - நீ  
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த 
ஒப்பிலாத் தாரகை ஓவியம்

கனவோ நினைவோ கம்பன் கவியோ 
காரிகை  உன்விழி  அறியேன் -தினம் 
எனையே இழந்து  இதயம் எரித்தும் 
என்னவள் உன்னைப் பிரியேன் !


மீண்டும் மீண்டும்  ஓயாத் தென்றல் 
மெட்டிகள் போடும் சத்தம் -அவை 
தீண்டத் தீண்டத் தினமும் ரசித்தேன் 
தேனாய்  ஏறுது பித்தம் !

எல்லைகள் இல்லா வானம் போலே  
எதுகை தந்தாய் கவிக்கும் - விழி 
வில்லைகள் தன்னால் வெறுப்பைத் தந்தால் 
விழி..நீர் கொட்டித்  தவிக்கும் !

காலையில் உன்றன் கனவுகள் சுமக்கக் 
காத்துக் கிடப்பேன் தினமும் - மலர்ச் 
சோலையில் வீசும் சுகந்தம் உன்னால்ச்  
சொக்கிப் போகும் மனமும் !

வேதம் நான்கும் விளங்கிக் கொண்டும் 
விடுகதை ஆனவள் உன்னால்   - உயிர் 
சேதம் இன்றிச் சிரச்சே தத்தைச் 
செய்யத் துணியுது தன்னால் !

காற்றும் உன்றன் குழலைத் தேடிக் 
கவிதை சொல்லிப் போகும் - உயிர் 
போற்றும் அன்பில் புன்னகை தடவிப் 
புல்லாங் குழலில் ஏகும்   !

நாடியில் மெலிதாய் நளினம் காட்டும் 
நங்கை உனக்கும்  மச்சம்  - இசைக் 
கோடியில் பாடும் கொவ்வை இதழாய்க்  
குழைந்தைச் சிரிப்பின் எச்சம் !

கவிதை ரசிக்கும் கயல்விழி  உனக்கும் 
கவிஞன் இவன்மேல் வெறுப்பு  - மனம் 
தவிக்கும் நொடிகள் தடுத்தல் உன்றன் 
தாய்மைக் குணத்தின் பொறுப்பு !

நண்பா என்றே நயமாய்ச் சொன்னாய் 
நானும் உணர்ந்தேன்  அன்பு - நாளை 
வெண்பா எழுதி விடியலில் தருவேன் 
விழி..நீ திறக்கும் முன்பு !

பிரியமுடன் சீராளன் 

17 comments:

balaamagi said...

அருமையான வரிகள் பாவலரே,

தொடருங்கள் நாங்கள் ரசிக்கிறோம்,,

நன்றி,,

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தேன். நன்றி.

KILLERGEE Devakottai said...

கனவோ நினைவோ கம்பன் கவியோ காரிகை உன்விழி அறியேன் -தினம் எனையே இழந்து இதயம் எரித்தும் என்னவள் உன்னைப் பிரியேன் !

நான் மிகவும் ரசித்தேன் பாவலரே வாழ்த்துகள்
தமிழ் மணம் 2

Iniya said...

சத்தம் போட்டு அழுகிற தேயுன்
சாந்த மான இதயம் - அவள்
நித்தம் உன்றன் நினைவினில் கலந்தால்
நிம்மதி இல்லா உதயம் !

அருமை அருமை! தொடர வாழ்த்துக்கள் சீர் !

Thulasidharan V Thillaiakathu said...

அருமை சீராளன். வரிகள் அனைத்தையும் ரசித்தோம்..

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சீர்

அற்புதமான கவிநயம் மிக்க வரிகள்.
ஓசை நயமிக்க வரிகள் படித்து மகிழ்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
ரசித்தேன்நண்பரே

மீரா செல்வக்குமார் said...

மெட்டிகள் போடும் சத்தம் -அவை
தீண்டத் தீண்டத் தினமும் ரசித்தேன்
தேனாய் ஏறுது பித்தம் !//

மெட்டி இன்னுமா சத்தம் போடுகிறது.....?

அருமையான வாசிக்க ருசிக்கும் வரிகள்...

தனிமரம் said...

அருமையான கவிதை பாவலரே! இப்போது எல்லாம் அதிகம் தங்கள் பதிவு வருவது இல்லை காதலில் மூழ்கிவிட்டிரோ[[[[

சிவகுமாரன் said...

மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பேராசிரியரே

சீராளன்.வீ said...

மிக்க நன்றி ஐயா

சீராளன்.வீ said...

மிக்க நன்றி ஐயா

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பேராசிரியரே

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//