சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Sunday, 30 December 2012

ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


பிறக்கும் இந்த வருடத்தை 
பீதியுற வைத்த மாயன் 
இறக்கும் நிலை என்றெண்ணி 
இன்பமற்றோர் மனம்குளிர 
வந்துவிட்ட நன்னாளில் 
வலியறுந்து அகமகிழ 
வாஞ்சை யோடும்மை 
வாழ்த்தி நிற்கின்றேன் 
இனியில்லை அழிவென்று 
இன்புற்று வாழுங்கால் 
அகம்பாவம்,ஆணவங்கள் 
அடிபணியா கர்வங்கள் 
அனைத்தையும் அழித்திங்கே 
அகிலத்தை செழிப்பாக்கி 
அன்புநெறி தளைத்தோங்க 
இறைதூதர் தந்தளித்த 
மறைநூலை மனதேந்தி 
நிறைசெல்வ செழிப்போடு 
வாழ்கவென வாழ்த்துகிறேன்...!

பிரியமுடன் வாழ்த்தும் சீராளன்  

Sunday, 23 December 2012

இதயத்தில் ஜீவனில்லை ...!


இறந்துபோன சிறகுகளாய் 
உள்ளம் உதிராமல் பாரமாய் 
நடக்கையில் தடுக்கிறது 
வழுக்கிவிழும் வரம்தந்து....!

Thursday, 20 December 2012

நிழல் படா நிலங்கள்...!


நாணக்குடம்  தளம்பி 
நளினம் முத்துதிர்த்த உன் 
வெள்ளிக்குரல் அசைவில் 
வீழ்ந்துவிட்ட ரசிகன் நான்...!

Thursday, 13 December 2012

நிஜமில்லா நிஜங்கள்! ..!



சினைமுட்டை சிதைந்தன்று 
செத்திருந்தால்  கருவறையில் 
என்னை நான் தேடுகின்ற 
வினை வாழ்வு அகன்றிருக்கும்...!

Sunday, 9 December 2012

தூக்கத்தில் சில துயரங்கள் ...!

ரகசியமான சில்மிசங்களுக்குள் 
முன்னும் பின்னுமாய் 
வேர் விட்டுக்கொண்டிருந்தன 
மூச்சின் நிழல்கள்...!

Sunday, 2 December 2012

நீ அவளிலில்லை ...!


நீ அவளிலில்லை
அவளைப்போல் இருக்கலாம்
ஆனால் அவளாகிடமுடியாது ..!

Saturday, 1 December 2012

புதிரானவள்......!



நிறம் பிரித்த வானவில்லின் 
நிழல் படிந்த மேகத்தில் 
நீ சாய்ந்த பொழுதுகளில் 
நித்திரைகள் சுவர்க்கமடி...!

Monday, 12 November 2012

வேற்றுக்கிரகம் எல்லாம் வெவ்வேறு கிரகணங்கள்....!



மொட்டுக்கனி ஈனும் 
சொட்டுத் தேன் துளிகள் 
உன் பட்டுக் கன்னத்தில் 
தினம் எழுதும் மோகனங்கள்
தித்திக்கும் என் வாழ்வில்  ...!

Monday, 5 November 2012

இன்னொரு யுகம் வேண்டுகிறேன் ..!


ஒரு போதும் விடியாத 
உலகத்தில் பிறந்ததுபோல் 
வாழ்வில் ராத்திரிகள் மட்டும் 
விடியலுக்காய் ஏங்கியவாறே ....!

Thursday, 1 November 2012

மாற்றுவழி தேடுகின்றேன்...!



இறந்த பின்பும் இதயம் திருட
இரக்கம் எங்கே இறங்கியதோ
பிறக்கமுன்னே அறிந்து கொள்ள
உறக்கம் கொண்டேன் சாபமோ.....!

Saturday, 20 October 2012

பிரியாவிடை ...!


எதிரும்,புதிருமாய் பேசுகிறாய்
மௌனமாய் கேட்க்கிறேன்
நீ அறிவாளி என்றோ
நான் மடையனோ என்று அல்ல...!

ஏழைக்கவி...!





என்னோடு முடிந்துபோகும்
எனக்கான தேவைகளுக்குள்
எந்நாளும் தேடல்கள்
இருப்பதும் இல்லாததுமாய்...!

மழைக்கால கனவுகள்..!


மழைக்கால குடைக்குள்ளே
பனித்துளிகள் மின்மினுக்க
இதழோர நடுக்கத்தில் 
என்னவளின் வீதி உலா...!

Sunday, 30 September 2012

விலையற்ற விம்பம் நீ...!



பிடிக்கும் என்று பிரியப்பட்டே 
முடித்துக்கொண்ட முள்வேலி 
துடிக்கும் வரை ரசித்தே
கடித்துக் கொன்றது  காதலை..!

Tuesday, 25 September 2012

தலையணைகள் சுடுகிறது...!


ஏங்கித் தவித்திங்கே   
எந்நாளும் அழுகின்றேன்-தினம் 
தாங்கிக் கொள்கின்ற
தலையணைகள் சுடுகிறது...!

Monday, 24 September 2012

ஒரு காதலின் சாட்சியங்கள்..!


அன்றும் 
வழமைபோல் 
ஆலய தரிசனம்
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
வீணாக்கிய  நேரங்கள்
காற்றோடு இன்றும் 
காந்த படிமங்களாய்...!

காதலை விட அது சுகமானது...!



இயற்கையின் மறுபக்கத்தில்
எனக்கும் இடம் கொடுங்கள்
சுவாசங்கள் இல்லாமல் வாழ்கிறேன்
காதலைவிட அது சுகமானது....!

Thursday, 13 September 2012

கற்கமுன் பிறந்ததனால் ..!



காற்றுபடாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே -நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க....!

Monday, 10 September 2012

காதலின் கடைசி நாள்...!



இளமையின்  இரத்தக்கசிவு
இன்று தொடக்கம் 
இதயத்தில் இறங்கிவிடும் ..!

Friday, 7 September 2012

அமிழ்தெம் மொழியெனப்பாடு ...!


                                


பேசும்போதும் வாசனைகள் -எம் 

பேச்சு மொழியினில் தான்

வீழும் வரைக்கும் கற்றுவிடு

வேற்று மொழியைக் கலக்காமல்....!  

Monday, 20 August 2012

இமைகள் எழுதும் நினைவுகள் ......!


நிலவின் நிழலில் உன்  
இமைகளின் அசைவுகள் 
எழுதிச் செல்கிறது 
நம் வசந்த கால நினைவுகளை ....!

Monday, 13 August 2012

திருப்பிவிடு இதயத்தை...!

சொல்லக்கூடிய  
வார்த்தைகளுக்குள்
என் சோகம் 
எழுதப்படவில்லை
எழுதியதெல்லாம் 
உன்னைப்பற்றி என்பதால்
அழுகைகூட ஆனந்தமாகிறது...!

Wednesday, 8 August 2012

வளரும் புன்னகை



புரிதல்கள் .........
புரியாமல் போன உன்
புன்னகையின் மீதங்களை 
உயிருக்குள்ளே ...
நாற்றாக  நட்டுவிட்டு
காற்றினிலே தேடுகிறேன்
கடைசி நாள் கண்ணீரை
ஊற்றி ஊற்றி  அதை வளர்க்க 
அங்கே காய்ந்தாலும் அவை
காதலுடன்தான் இருக்கும் 
வளர்வது  உன் புன்னகை  என்பதால்.....!

ப்ரியமுடன் சீராளன் 





Monday, 6 August 2012

என் உறைவிடம் நோக்கி ...!

நேரங்காலம் தெரியாத 
நள்ளிருள் கனவுக்குள்
வாழ்ந்து மடிந்து போகிறது
நம் வாழாத நினைவுகள்...!

Thursday, 26 July 2012

மண்ணிலும் மலர்வேன்.....!



இதயச்சிதைவின் எச்சங்கள்
என்றும் காதலின் மிச்சங்கள்
விழிகள் சொன்ன சாட்சியங்கள் 
விளைந்திடவில்லை உன்னுதட்டில்...! 

ப்ரியமுடன் சுமக்கின்றேன்



மேகத்தின் விழியொடுங்கி   
விதைக்கின்ற மழைநீரில்
மேனி நனைத்து நிற்க 
விழிநீரேன்  சுடுகிறது....?

Wednesday, 25 July 2012

எப்படி முடியும் ...!







நொடிக்கொரு முறை விடியும்
என் இரவுகளுக்குள்...
தூங்காமல் நானும்...
ஏங்காமல் நீயும்....
எதிரும் ,புதிருமாய்
ஏமாற்றங்கள் எமக்குள்ளே......!

என்னவள் நீ




எரிகின்ற என்னிதயத்தில்
எரியாத உன்நினைவு
எப்போதும் இதமாக 
எனக்குள்ளே உயிர் வாழும் 
ப்ரியமுடன் சீராளன் 

Thursday, 12 July 2012

நிஜமாய்....!



நீ..
போகும்  பாதை எங்கும்
பூங்காவனம்தான் 
அங்கே புதைக்கப்பட்டது
என் காதல் என்பதால்...!

ப்ரியமுடன் சீராளன் 

Wednesday, 11 July 2012

கடைசியாய் நீபார்த்த அதே கண்ணீருடன்.....!


நிலவை தொலைத்தவானில்

விடிவெள்ளியே வெளிச்சமாய்
கண்களை தொலைத்த காதலில் 
இதயமே கண்ணீராய்....!

என் சிப்பிக்குள் முத்தாய் நீ !



வர்ணக் கலவைகளாய்
வந்துபோகும் வானவில்லே.என்
முற்றத்து மல்லிகைக்கு
முழுநிலவை ஏன் மறைத்தாய்....!

இது கதையல்ல ...!


இது கதையல்ல........
கனவுகளின் கருவறையில்
இன்னும் பிரசவிக்கப்படாத
நினைவுகளின் சலனம்.....!

Thursday, 5 July 2012

வலிகள் புதிது....!






ஆயிரம் நாட்கள் அழிந்த மனதில் 
அன்பு சொரிந்து அமிர்தமிட்டாய்...
முதல் துளிர் முளை விடும் போது....
முன்பனியில் விசமிட்டு ஏன் தெளித்தாய்........!

Tuesday, 3 July 2012

அறிவாயா அடுத்தவன் வலி ...!



கண்ணீருக்கே நான் 
சொந்தமாகிப்போனதால்
விழிகளின் நடுவே 
சமாதி கட்டுகிறேன்...
உணர்வுகள் 
மலர் வளையங்களாய்..
தலைகோதி விடுகின்றன...
சுவாசக்காற்றில் கற்பூர வாசனை...!

மேகமாய் நானும் .....!






நீ  அறியாய்
உன்மீது விழுந்த 
மழைத்துளி காயுமுன்னே
மழை தந்த  மேகம்
மலையோடு மோதி
மரணிப்பதைப் போல 
நானும் அன்பு தந்து 
அழிந்து போனவன் என்று ...!



ப்ரியமுடன் சீராளன்  


உனக்கும் காதல் வரும் ...!



உனக்கும் காதல் வரும்
உயிரை குடிக்கும் பொழுதிலும்
உண்மையாய் காதலிப்பாய்...
வேற்றுக்கிரகத்திலும் இடம் தேடுவாய்..
கனவிலே கட்டுவாய் தாஜ்மஹால்
பிரிவுகள் நிரந்தரமாய் போனாலும்...
பிரியாத நினைவுகளோடு...
மீண்டும் சுவாசிப்பாய்....!

அறிந்தும் அறியாமல்....!



மழையில் 
நனைந்தவனைவிட 
பனியில் 
நனைந்தவனுக்கே குளிர் அதிகம்
அப்படித்தான்......
பணத்தில் 
திளைத்தவனை விட 
ஏழ்மையில் 
களைத்தவனுக்கே காதல் அதிகம்...
இதை நீ 
அறிவாயா இல்லை
அறிந்தும் ஆடம்பரத்துக்காய்
அறுத்து விட்டுப் போனாயா....!

ப்ரியமுடன் சீராளன் 

Monday, 2 July 2012

ஒரே நாளில்...!



நீ எங்கே என்று
இதுவரை தேடியதில்லை...
என் உயிருக்குள்ளே...
ஊஞ்சல் கட்டி...
உன்னை தாலாட்டியதால்...
நீ எங்கே என்று 
இதுவரை தேடியதில்லை..!

எது வாழ்க்கை....!



காதலை காதலிப்பதால்
மனிதன் பூரணமடைகிறான்
வாழ்வை காதலிப்பதால் 
புனிதமடைகிறான்
இரண்டையும் காதலிப்பவன்
இதயத்தோடு வாழ்கிறான்....!

ப்ரியமுடன் சீராளன் 



இதயத்தின் இடிபாடுகள்....!




நான் தேடும் கூடுகள்
இன்னும் கட்டப்படவில்லை...
மரங்கள் மண்ணோடு
புதைந்து போனதால்............!

ஷகியே...!



வலமிருந்து இடமாய்
மாறிச்சுழலும்
வாழ்க்கை கடிகாரம் ......!

நிதர்சனம்..!



சாட்சிகள் வைத்து
பூக்கள் பூப்பதில்லை -அது 
வாடகைக்கு வாசம் சேர்ப்பதில்லை....!

ஒரு நதி அழுகிறது




வைகைக் கரைகளிலே
வந்துபோன புன்னகைகள்
வயது வரா காதலுடன்
வழிமாறி போன ..
ஞாபகத் தடயங்கள்...!.

Saturday, 30 June 2012

தாக்கம் ...!



ஓரப்பார்வையால் 
உன்னை பார்த்ததைவிட 
உற்றுப்பார்த்திருக்கலாம் சூரியனை..
கதிர் வீச்சு தாக்கம் 

கண்ணோடு போயிருக்கும் 
இதயம் அழிந்திருக்காது..!



ப்ரியமுடன் சீராளன் 

உயிர் பிரியும் காலம் வரை...!






மான் விழிகள் மலர் கொய்யும்-உன்
பூங்காவன வாசலில்
வலிகளை விதைத்து ஏன்
வடிவு பார்க்கிறாய் ........!

உன்னையே சுவாசிப்பதால்.............!



நினைவுகள் 
தொடும் தூரத்தில் 
நீ இருக்கும் வரைக்கும்...
சுவாசம் தேவை இல்லை...
உன்னையே சுவாசிப்பதால்.............!



ப்ரியமுடன் சீராளன் 


வேண்டாம் ... !



நிஜங்களோடு 
சலனப்படும் நிமிடங்கள்.......!

ஏன் இப்படி.....!



இயற்கையின் எழிலில்
இதயம் காயும் காதலே
நூறாண்டுகள் தவத்தின்
வரங்களாய் போன சாபத்தில்
இன்னுமா இடைவெளிகள் ....!

நிஜமாய்...!



உனக்கும் ...
பொய் பிடிக்கும் என்பதால் 
சிரித்துக்கொண்டிருக்கிறேன் 
காதல் இன்னமும் அழுகிறது
மனதோடு மௌனமாய்....!



ப்ரியமுடன் சீராளன்