சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 11 ஜூலை, 2012

இது கதையல்ல ...!


இது கதையல்ல........
கனவுகளின் கருவறையில்
இன்னும் பிரசவிக்கப்படாத
நினைவுகளின் சலனம்.....!
ஈருடலை ஊடறுத்த
இன்பக் கதிர்வீச்சின்
காந்தப்படிவுகள்.....!

எளிமையும்,ஏகாந்தமும்
எதிரும் புதிருமாய்
எரித்துவிட்ட எச்சங்கள்....!

சுவாசக் குழாய்களுக்குள்
சுற்றுகின்ற இருமூச்சின்
இணையாத துருவங்கள்.....!

காகிதப்பூவில்
காமம் எழுதிய காவியத்தில்
கரைந்துபோன சுவடுகள்....!

தேடிய ஸ்னேகங்கள்
தீக்குளித்த போதெல்லாம்
அணைத்துவிட்ட மௌனத் தூறல்கள்.....!

ஞாபகத் தோட்டத்தில்
அரும்போடு கருகிய
காதலின் கன்னிகாதானம்....!

மொத்தத்தில் இதுகதையல்ல....!
விதியெனும் நேர்கோட்டின்
தவிர்க்க முடியாத
பருவ வளைவுகள்..
விலகியவர் எவருமில்லை.....!
=================
ப்ரியமுடன் சீராளன்...

கருத்துகள் இல்லை: