சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 11 ஜூலை, 2012

என் சிப்பிக்குள் முத்தாய் நீ !வர்ணக் கலவைகளாய்
வந்துபோகும் வானவில்லே.என்
முற்றத்து மல்லிகைக்கு
முழுநிலவை ஏன் மறைத்தாய்....!


******
விண்மீன்கள் இகழ்ந்தாலும்
விழி கலங்கா மின்மினியே
தெருவிளக்கின் பழி கேட்டு
தேன் நிலவை ஏன் வெறுத்தாய்.....!
******
தவறுவிட்ட விரல்களுக்கு
தங்கமுலாம் பூசிவிட்டு
எழுதி விட்ட பேனாவை
எரித்துவிட ஏன் நினைத்தாய்....!
*******
பிரிந்து விட துணிந்த பின்பு
ப்ரியங்கள் இல்லைஎன்று
காதலுக்கு பழி சொல்லி
கண்ணீரை சாகடித்தாய்.....!
ஆனாலும்......நான்..!
******
ஒளிர்கின்ற திரியினிலே
அழுகின்ற மெழுகாக
ஆழ்மனத் தீக்குழம்பில்
அழிந்தாலும் நாள் தோறும்...!
******
சிப்பிக்குள் முத்தாய்
சிதையாமல் என் நெஞ்சில்
வித்தாக நீ முளைத்து
வேர்விடுவாய் எப்போதும்...!
================
ப்ரியமுடன்.....சீராளன்..

2 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

வித்தெல்ல◌ாம் முளைத்து அன்பாய் அகிலமால வாழ்த்துகிறேன். வரிக்கு வரி ரசிக்கும்படி அருமை.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா...