சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 11 ஜூலை, 2012

கடைசியாய் நீபார்த்த அதே கண்ணீருடன்.....!


நிலவை தொலைத்தவானில்

விடிவெள்ளியே வெளிச்சமாய்
கண்களை தொலைத்த காதலில் 
இதயமே கண்ணீராய்....!


இடுகுறி இடப்படாத -என்
இலக்கண வாழ்வில்
விடையறியா வினாக்குறியாய்
விழுப்புண் இட்டேன் 
விடை பெற்றாய்.....!

ஐம்பொருளில் அறியாத
அறிவுசார் சிலையாக
அவதரித்த உன் விம்பம்
அழிக்கிறதே ஆன்மாவை....!

நாதஸ்வரங்களில் நாட்டிய மாடி
நல்லிசை கொட்டிய உன் விரல்கள்
வில்லிசைக்கு வேட மிட்டு
விதிமாறி போனதுபோல்
சொல் மறைத்து ,சுதியழித்து
கல்லறைக்கு வழி விட்டாய்.....!

தாகம் தீரா மோகம் கொண்டு
தேகம் தேடும் மானிடத்தில்
தாயின் நிழலாய் தவம் காத்தேன்
குருத்திப்பால் ஊட்டியது
 
குறை என்றாய்....!

வாழ்வியல் பாடமென்று
வகுத்ததொரு பதில் சொல்லி
உளவியலை ஊமை யாக்கி
ஒளிந்துகொண்டாய்...!

ஆனாலும் ...
நிழலுருவில் நீ பேசும்
நினைவுகள் எனதாக
நித்தியம் சுவாசிப்பேன்
கடைசியாய் நீ பார்த்த
அதே கண்ணீருடன்......!
ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: