அன்புமிகு வலையுலக உறவுகளுக்கு வணக்கம் !
என்னைக் கவிஞனாக்கிய என்னருமை ஆசான்
கவிஞர்.கி.பாரதிதாசனிடம் இருந்து கிடைக்கப் பெற்ற
மின்மடல் கண்டு ஆனந்தம் கொள்ளும் இத்தருணங்களை
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகின்றேன் ,
**********
அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!
26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.
கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து,
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில்
பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்
இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு.
அன்புநெறி ஊட்டும் ஆசானுக்கு !
----------------------------------------------
இல்லமெனும் சோலைக்குள் இனிக்கும் தென்றல்
இதமாக உள்நுழைந்து நாதம் மீட்ட!
எல்லையிலாப் பகலவனின் ஒளியை உண்டே
இருள்கலைந்து போகின்ற விடியற் காலை!
வல்லகவி தாசனென வாழும் எங்கள்
வரலாற்றுப் பாவலரின் அழைப்பாம் அஞ்சல்
நல்லதொரு செய்தியினை நானும் கண்டேன்
நாடியதன் துடிப்பின்னும் மாற வில்லை!
சீர்கமழ்ந்து செம்மையுறும் செந்தேன் பாவால்
சீலத்தை ஒளிகொள்ளச் செய்யும் ஆசான்!
நேர்கவிஞன் எனக்களிக்கும் கவிஞர் பட்டம்
நினைத்துள்ளம் மகிழ்ந்துருகி ஆடும்! பாடும்!
ஈரேழாம் ஆண்டுதனில் இனிமை கூட்டும்
இன்றமிழின் கம்பவிழா நடக்கும் போதில்
பார்போற்றும் புகழ்பெற்ற பிரான்சு நாடும்
பைந்தமிழின் பூமழையால் நனையும் என்பேன்!
பெருந்தமிழே பிறப்புற்ற பேறாய் எண்ணும்
பெருந்தகையே! பிதாமகனே! சங்கப் பாவின்
திருமகனே! தீந்தமிழே! தெய்வத் தாயின்
திசையொளியே! தித்திக்கும் தேவே! உன்னைக்
குருவாகக் கொண்டதனால் வையம் போற்றும்
குன்றாத வளம்பெற்றேன்! நன்றே மின்னும்
அருந்தமிழின் திருவருளால் என்றும் என்றன்
அகத்துள்ளே உனைவைத்து நன்றி சொல்வேன் !
அறத்துடனே அந்தமிழைக் காத்துத் தூய
அன்புநெறி ஊட்டுகின்ற அறிஞன்! கம்பன்
சிறப்புடனே வாழ்கின்ற கவிஞன்! ஆசான்
சிந்தைகவர் மாணவரில் நானும் ஒன்றாய்ப்
பொறுப்புடனே கற்றொளிரும் கல்விச் செல்வம்
பொலிகின்ற புகழாரம் இன்பம்! இன்பம்!
பிறப்புக்கள் தொடர்கையிலும் பிரியம் கொள்ளப்
பிஞ்சுமனக் கூட்டுக்குள் யாகம் செய்வேன்!
***********************
சிந்தனையில் முந்திவிழும் செந்தமிழின் சந்தத்தில்
விந்தையென உன்றன்பேர் மந்திரமாய் - வந்துவிழும்!
எந்தமுயிர் வந்தியராய்ச் சொந்தமெனப் பந்தமிகும்
தந்தையெனும் உந்துதலும் தந்து!
இந்த நிலை இன்றுவர எனக்கு ஊக்கம் அளித்து இலக்கண இலக்கிய அறிவினை ஊட்டிய என்னருமைக் கவிஞர் அண்ணா .கி. பாரதிதாசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கும் இவ்வேளையில் என் கவிதைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த என்னுயிரின் மேலான வலையுலக உறவுகளுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் மனமுவந்த நன்றிதனைக் கூறிக் கொண்டு இனிவரும் காலங்களிலும் என்னைச் செம்மைப்படுத்த விளையுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்
- நன்றி -!
என்றும் பிரியமுடன் சீராளன்
34 கருத்துகள்:
அடேங்கப்பா பாவலர் சீராளன் கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. கவியாற்றல் மிக்கவர் அல்லவா.ஆற்றலுக்கும் முயற்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி. சான்றிதழ் கிடைக்க வேண்டிய நேரம் தானே இது. கவித்துவம் நிறைந்தவர்கள் அனைவருக்கும் கிடைக்கின்ற இந்த பட்டமளிப்பு விழாவில் எல்லோரும் பங்கு பற்றினால் மேலும் சிறப்பாக இருக்கும்.இல்லையா ?என்ன செய்வது கடினம் தான்.ம்..ம்..ம்
இருந்தாலும் ஆசானுக்கு ஏற்ற மாணவர்களும் மாணவர்களுக்கு ஏற்ற ஆசானும் என்று ஒருவருக்கொருவர் பெருமையை தேடிக் கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி மேலும் பல பட்டங்களைப் பெற்று கவிகள் பல படைத்து பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்துகிறேன்.
தாங்கள் இனிய விருத்தத்திற்கும். மிக்க நன்றி !
பாவலர் சீராளன் அவர்களுக்கு மனம்நிறை நல் வாழ்த்துக்கள்
மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே ! மென் மேலும் ஓங்கட்டும் உனது புகழ் .
அற்புதமான விருத்தப்பா விருந்துண்ட மயக்கத்தை தருகிறது. மகிழ்வான செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எங்களுக்கும் மகிழ்வே. என் அகமகிழ்ந்த வாழ்த்துகளும்.
அன்புச் சீராளரே!
பாவலர் பட்டமும் பெற்றதே பேறின்று!
நாவலர் உன்னிடம் நண்ணியே! - காவலர்!
செந்தமிழ்ப் பேராளர்! செம்மல் எமதாசான்!
தந்தார் தகையுனக்கே தான்!
பாவலர் பட்டம் என்றோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்!
அற்புதக் கவிஞர் அன்றோ நீங்கள்!
இன்று படைத்த இந்த விருத்தங்களும் சந்தவெண்பாவும் சாற்றுகிறதே
உங்கள் திறமையை!.. மிக மிக அருமை!
மகிழ்ச்சிதரும் தருணங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு
மிக்க நன்றியுடன் உங்கள் புகழும் திறமையும் மேலும் ஓங்கிட
உளமார வாழ்த்துகிறேன்! வாழ்க பல்லாண்டு!
பாவலர் சீராளர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் இன்னும் இது போன்ற உயரத்தை தொடுவதற்க்கும் வாழ்த்துகள்
தமிழ் மணம் எட்டாக்கனி 8ம்
வணக்கம் சகோ இனியா !
தடையில்லாத் தாய்த்தமிழை தந்திட்ட ஆசான்
கொடை'என்று காண்பீர் குளிர்ந்து !
எல்லாம் என் ஆசானின் செதுக்கல்கள் இனியாம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !
விருது பெறுவதறிந்து மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வணக்கம் கரந்தையாரே !
மனம்நிறை வாழ்த்தில் மகிழ்கின்றேன் உய்யத்
தனமென்ன வேண்டும் இனி !
தங்கள் மணம் நிறைந்த வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
வணக்கம் தனபாலன் ஐயா !
மனமுவந்து நல்கும் மகிழ்நிறை வாழ்த்தில்
தினமுயரும் என்றன் திடம் !
தங்கள் அன்பான வாழ்த்திற்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வலைச்சித்தரே !
வாழ்க வளமுடன்
வணக்கம் சகோ அம்பாள் அடியாள் !
ஓங்கும் புகழால் உயர்ந்திருக்க வைத்தவர்க்கு
பாங்காய்ப் படைத்திட்டேன் பா !
தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் !
வணக்கம் சகோ சசிகலா !
முகமலர்ந்து நன்றி முகிழ்கின்றேன் உங்கள்
அகமகிழ்ந்த வாழ்த்தை அணைத்து !
தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் !
வணக்கம் சகோ இளமதி !
நம்மாசான் ஊட்டுகின்ற நற்றமிழ் ஊற்றெடுத்தால்
சும்மா இருப்பேனோ சொல் !
கல்லைச் செதுக்கும் உளிபோலும்
.....கம்பன் காட்டும் தமிழ்போலும்
முல்லைக் கொடிக்கும் மூச்சுதந்த
.....மூத்தோன் பாரி செயல்போலும்
வல்ல கவிஞர் எங்களுக்கு
.....வழங்கும் நல்ல கற்பித்தல்
செல்லும் இடங்கள் சிறப்பாக்கிச்
.....சேர்க்கும் இனிய பட்டங்கள் !
தங்கள் அன்பான வாழ்த்துப் பாவில் அகமகிழ்ந்தேன் சகோ மிக்க நன்றி வாழ்க வளமுடன் !
/// என்னது எனக்குப் பட்டம் எப்பவோ கிடைத்திருக்கணுமா அதை நான் சொல்லணும் உங்களுக்கு ஆகா ஆகா ,,மிக்க நன்றி கா ///
வணக்கம் கில்லர் ஜி !
கில்லரின் வாழ்த்தில் கிளர்ந்தெழும் என்'ஆன்மா
வெல்லச் சுவையில் விழுந்து !
தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !
வணக்கம் முனைவர் ஐயா ஜம்புலிங்கம் அவர்களே !
கனிவோடு வாழ்த்தும் கருணைக்கு என்றும்
நனிநன்றி சொல்லுமென் நெஞ்சு !
தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் !
பரமசந்தோஷம் பாவலர் பட்டம் பெற்றதில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சீராளன்.
தாங்கள் புனைந்த பாக்கள் சான்று
தங்கள் பாப்புனையும் ஆற்றலுக்கு
பாவலர் பட்டம் கிடைப்பதை அறிந்து
என் வாழ்த்துப் பகிர வந்தேன்! ஐயா!
உளங்கனிந்த வாழ்த்துகள்! தக்கவர் தம்மால் தக்கவர்கே கிடைத்தது
வணக்கம்!
கொஞ்சும் தமிழ்மொழியை நெஞ்சுள் பதித்தோங்கி
விஞ்சும் புகழை விளைப்பவர்! - அஞ்சிப்
பகையோடும்! பாவலர் சீராளர் பாவால்
தகைசூடும் தங்கத் தமிழ்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்,
தங்கள் கவிகள் பலகண்டு அதன்கருத்தாழம்
வியந்து நின்றதன் விவரம் அறிந்தேன்
வாழ்த்துக்கள் சீர் ஆள்பவரே,,,,,,
இது தெரியாமல் தான் நான் அங்கும் சொன்னேன் பாவலரே வாழ்க வாழ்க வாழ்க,,,,,
விரைவில் பாவலர் சீராளன் ஆகப்போகும் தாங்கள் மேன்மேலும் இதுபோல் பல பட்டங்களும் பெற்று, பல உயரங்களையும் தொட அன்புடன் வாழ்த்துக்கள் !
நாவினிக்கத் தமிழ் பாடும் சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
என் மதம் தாமதம்! வாழ்த்து எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்!வாழ்த்துகள் சீராளன்
வணக்கம் தனிமரம் !
தங்கள் அன்பான வரவும் இனிய வாழ்த்தும் நெஞ்சம் நிறைகிறது
மிக்க நன்றி வாழ்க வளமுடன் !
வணக்கம் ஜீவலிங்கம் ஐயா !
மிக்க நன்றி தங்கள் இனிய வரவுக்கும் அன்பான வாழ்த்துக்கும் வாழ்க வளமுடன்
இனிய வணக்கம் புலவர் இராமாநுசம் ஐயா !
அவரறிந்தென் ஆற்றல் அளிக்கின்ற பட்டம்
சிவனறித் தாற்றும் செயல் !
மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் திருவாயால் வாழ்த்தியமைக்கு வாழ்க வளமுடன் !
இனிய வணக்கம் கவிஞர் அண்ணா !
தங்கத் தமிழும் தகைசூடும் உம்துணையால்
மங்காப் புகழும் மலர்ந்திருக்கும் - எங்கெங்கும்
சங்கத் தமிழ்முழங்கும் சந்ததிகள் தான்வளர்க்கும்
பொங்கும் புனலாய்ப் பொலிந்து !
மிக்க நன்றி கவிஞர் அண்ணா தங்கள் அன்புக்கும் அகமகிழ்ந்த வாழ்த்துக்கும் வாழ்க வளமுடன்
வணக்கம் பேராசிரியரே !
என்பெயரை இவ்வாறு சிறப்பித்துக் கூறி இனிய வாழ்த்தும் தந்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
வணக்கம் சித்ரா சௌந்தர் !
தங்கள் முதல்வருகைக்கும் இனிய வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
வணக்கம் சகோ கீதா !
நாவினிக்கப் பாடும் இத்திறமை தந்த எங்கள் ஆசானுக்கே எல்லாப் புகழும்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றிகள் வாழ்க வளமுடன்
வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !
காலதாமதம் என்றாலும் கனிவான உங்கள் வாழ்த்தில் நெஞ்சம் நிறைகிறேன்
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
தங்கள் இனிய தமிழிற்கும் பா புனையும் திறமையுடைய தங்களுக்கும் இந்தப் பாவலர் பட்டம் கிடைத்தது பெரு மகிழ்ச்சி. மேலும் பல புனைந்து தமிழ்தாயை அழகூட்டிட வாழ்த்துகள். பட்டம் பெற்றதற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்
தாமதமாக வந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும் சீராளன்...
மிகத் தாமதமாய் வருகிறேன் பொறுத்தாற்றுக கவிஞரே!
பாவலர் பட்டம் பெற்றதறிந்து மிக்க மகிழ்ச்சி.
நன்றி
கருத்துரையிடுக