சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பிரியங்கள் தொடர்கதை ..!கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !

ஒவ்வொரு  இறப்பிலும் உன்னதம் படரும்
ஒவ்வொரு பிறப்பிலும்  உயிரினில் தொடரும்
ஒவ்வொரு  நினைப்பிலும்  உயிரணு சுடரும்
அவ்வொரு பொழுதிலும் அகவிழி அதிரும் !


அன்னையும்  ஊட்டிய அமுதத்தில் காதல்
அருங்கவி ஊட்டிய  தமிழிலும்  காதல்
இன்னுயிர் எரித்திடும்  ஏ..காந்தமும் காதல்
என்னவள் என்பதால்  இறு,,மாப்பிலும்  காதல் !

சிந்தை நிறைந்துயிர் செழித்திடும்   காதல்
முந்தை வினைகளும் அறுத்திடும் காதல்
எந்தையின் தோழிலும் இருந்திடும் காதல்
எத்தாய்  மடியிலும் இனித்திடும்  காதல்

சேடல் பூத்தமண் சுடுவதைப் போலவும்
செந்நெறி  காத்தமண் சிதைவதைப் போலவும்
ஊடல் பூத்தவுன் உயிரணு எங்கிலும்
உறைந்திடும் என்னுயிர் ஓலத்தின் எச்சம் !

பூவகம் கொண்டவள் பொன்னெழில் நினைவும்
புன்னகை உண்டவள் புரிதலின் நினைவும்
சேவகம் செய்திடும் சிந்தையை வளர்க்கும்
சேரா நிலைவரின் செந்தணல் வளர்க்கும் !

செல்லிடப் பேசியில் சிணுங்கிய வார்த்தையும்
செம்மொழி போலிதழ் சிந்திய வார்த்தையும்
பிள்ளை மொழியினில் பேசிய வார்த்தையும்
பிறப்புக்கள் தொடர்கையில் பிரியங்கள் கூறும் !

பிரியமுடன் சீராளன்

30 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

முடியாதுப்பா இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இப்படி எழுத முடியாது அப்படியே
அருவி கொட்டுவது போல் உணர்வுகளை உரசிக்கொண்டு ஓடும் வார்த்தை ஜாலங்கள் அற்புதம் ! சோகமாய் இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி அந்தந்தப் பாத்திரத்திற்கு ஏற்றது போல் எழுதும் வல்லமை படைத்தவர் எங்கள் சகோதரன் கவிஞர் சீராளன் ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா .

Unknown சொன்னது…

Super sir..vazhga valamudan..

Unknown சொன்னது…

Super sir..vazhga valamudan..

Unknown சொன்னது…

Super sir..vazhga valamudan..

இளமதி சொன்னது…

காதலைப் பாவில் கரைய விடுகின்றாய்!
தூதனாய் நான்வரவா சொல்!

காதலைப் போலவே உங்கள் கவிதையும்
அத்தனை அழகாக இருக்கிறது!.
சொற்களின் சுவை எங்கோ எம்மை
இழுத்துச் செல்லுகிறது சகோ!

அற்புதக் கவிஞன் நீங்கள்!
வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் சொன்னது…

//நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !//
உண்மைதான்
அருமையான கவிதை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
அருமை நண்பரே
போற்றிட வார்த்தைகள் இல்லை
அருமை
நன்றி
தம+1

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சீர்
சொல்லிய வார்த்தைகள் அற்புதம்... படிக்கும் போது நானும் என்னை மறந்து விட்டேன்... வாழ்த்துக்கள் சீர் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் சொன்னது…

அருமையான காதல்ப்பா.வாழ்த்துக்கள் பாவலரே.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சகோ அம்பாள் !

உங்களைவிடவா நல்லா எழுதுகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகி !

தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள் !
தொடர்ந்து வர வேண்டுகிறேன் தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ இளமதி !

நூதனமாய் நான்வரவா சொல் !
ஆஹா ஆஹா என்னைப் பற்றி எல்லாம் அறிந்த நீங்கள்
இப்படிக் கலாய்க்கிறீங்களே நெஞ்சம் நெகிழ்கின்றேன் மிக்க நன்றி சகோ அன்பான வாழ்த்துக்கும் அருமையான குறள் வெண்பாவுக்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !

கண்டிப்பாய் எல்லோருக்கும் எழுதும் ஐயா !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நெஞ்சம்
நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கரந்தை மைந்தா !

போற்றிடும் கரங்கள் தேடிப்
...புகழ்ந்திடும் கரந்தை மைந்தா
ஏற்றிய காதல் தீபம்
...இதயத்தில் ஒளிர்வ தாலே
சாற்றிடும் கவிகள் எல்லாம்
...சந்தண வாசம் கொள்ளும்
மாற்றியே இதயம் வைத்தும்
...மறப்பது கடினம் ஆகும் !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிக்க ஐயா
வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ரூபன் !

என்னைநான் மறந்தே இங்கு
....எழுதிய கவியில் நீயும்
தன்னிலை மறந்த சேதி
....தவித்திட வைக்கு தையா
சென்னியில் காதல் மோதி
....சீரழிந் துலவும் என்னைக்
பொன்னெழில் கவிக ளாலே
....புத்தெழில் ஆக்கின் றேனே !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிக்க ரூபன்
வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி தனிமரம் !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிக்க
வாழ்க வளமுடன் !

Iniya சொன்னது…

காதலில் கரைந்து கனவுகளில் உறைந்துநீ
கண்ணீரில் வாழுமுன் காலங்கள் மாறட்டும்
வாதங்கள் செய்து வருங்காலம் யாவையும்
வதைக்காமல் வாழ வழிகண்டு நலம்காணு!

ஆஹா! அருமை பாவலரே என்ன ஒரு சொல்லாடல். நெஞ்சை பிழியும் படியாக வந்து விழுகிறது வார்த்தைகள்.அருமை அருமை ! நலம் பல பெற என் வாழ்த்துக்கள் ...!

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ இனியா !

நெஞ்சைப் பிழியும் வார்த்தைகளில்
...நெடுநாள் கவிகள் தரமாட்டேன் !
எஞ்சும் காலம் என்றாலும்
...எழிலாய் மாறும் என்பதற்காய்
விஞ்சும் கனவின் வலியெல்லாம்
...விதைக்கும் இந்தச் சொல்லாடல்
கொஞ்சம் கொஞ்சம் மாறிவரும்
....கோதாய் மகிழ்வைக் கொண்டிருப்பாய் !

தங்கள் வருகைக்கும் இனிய கவிக்கும் மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன்

balaamagi சொன்னது…இங்கும் உயிரின் ஒலம் கண்டேன்
எங்கும் ஆட்சியே அதன் பலம்
காலம் மாறும் எல்லாம் மாறும்
காதலின் வலி மட்டும் என்றும்,,,,,,,,
அப்பப்பா ,,,,, அருமை, வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

Thankyou sir..

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
KILLERGEE Devakottai சொன்னது…


தாமத வருகைக்கு வருந்துகிறேன் பாவலரே... கவிதையை மிகவும் ரசித்தேன் நேர்த்தியான வார்த்தைகள்.
தமிழ் மணம் 8

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் பேராசிரியரே !

உயிரின் ஓலம் எங்கும் கேட்க்கும் எல்லோருக்கும் ஹி ஹி ஹி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகி !

என்றன் கவியில் உருகித்தான்
...எத்தனை நன்றி சொல்கின்றாய்
உன்றன் அன்பில் மகிழ்கின்றேன்
...உயிரில் நிறைந்தே நெகிழ்கின்றேன்
இன்னும் இன்னும் ஆயிரமாய்
...எழுதும் கவிகள் உலகாளும்
அன்றும் வந்தே என்வலையில்
...அழகாய்க் கருத்தும் இட்டிடுவாய் !
தங்கள் மீழ் வருகைக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சகி
வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கில்லர் ஜி !

நேரம் என்றும் தவறாமல்
....நேர்த்தியாய் கருத்தை இடுகின்றாய்
வாரம் தோறும் பதிவுகளை
....வாகாய் அடுக்கித் தருகின்றாய்
தூரம் இருந்தும் பேசிடவே
....துடிக்கும் என்றன் நெஞ்சத்தில்
பாரம் அதிகம் என்பதனால்
....பைந்தமி ழாலே இறக்குகின்றேன் !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்
வாக்கிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஜி
வாழ்க வளமுடன் !

Unknown சொன்னது…

அழகிய உணர்வுச் சிதறல்கள்...அருமையான கவிதை சகோதரா...

Unknown சொன்னது…

விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

பணம் அறம் இணையதளம்

ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

உதவிக்கு பயன்படுத்து லிங்க்

Unknown சொன்னது…

விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

பணம் அறம் இணையதளம்

ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

உதவிக்கு பயன்படுத்து லிங்க்

ADMIN சொன்னது…

அம்ம்மா...அப்ப்பப்பா...
திக்கி திணறி போகிறேன்...
உங்கள் தங்க தமிழ்
தனி திறன் கண்டு...!
கோர்வை வார்தைகளை
கொட்டி கொட்டி
குன்றென வளர்ந்து
குதூகலம் தரும்
உமது கவிதையை கண்டு
வியக்கின்றேன்.. !

இனிய கவிதையாளருக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றி பாராட்டுகள்...!

ஊமைக்கனவுகள் சொன்னது…

பொங்கும் கவிக்குறளி போக இடமின்றித்
தங்கிக் கிடக்கும் தமிழ்மனது! - செங்கதிரைப்
பிட்டுவிழி யூட்டும் பெருமிதத்தில் சீராள
சுட்டினிக்கு மும்மினிமைச் சொல்.

தாமதத்திற்குப் பொறுத்தாற்றுக பாவலரே!

தொடர்கிறேன்.

நன்றி