கனியிதழில் கசியும்துளி
கண்டுமனம் வாடும் - தினம்
கருங்குழலாய் ஆடும் - விழி
கண்டகனா பாடும் - உயிர்க்
கவிதையிலே எழுதிவிடக்
கற்பனைகள் தேடும் !
பனிமலராய்ப் பருவவெழில்
பளிச்செனவே மின்னும் - அதில்
பதிந்தவிழி பின்னும் -உனைப்
பார்த்திருந்தால் இன்னும் - மனம்
பறிகொடுத்துப் பறந்துவிடும்
பருவங்களைத் தன்னும் !
அணியழகுத் தமிழ்மொழிபோல்
அணங்கவளின் பார்வை - இதழ்
அரும்புகளின் கோர்வை - இதம்
அளித்தமூச்சுப் போர்வை - அலை
அடித்துமனம் அறுக்கவரும்
அன்பிலாத தீர்வை !
துணிமணிகள் போல்கிழித்தாய்
தொங்குதடி நெஞ்சு - நீ
துவைத்தமனம் பிஞ்சு - நீள்
துயில்கொடுக்கும் நஞ்சு -இது
தொடர்கதையாய் ஆகுமுன்னே
தொட்டணைத்துக் கொஞ்சு !
உறங்குநிலை கண்டதடி
உள்ளிருக்கும் மூச்சு - உடல்
உணர்விழந்து போச்சு - இது
உறவுகளின் பேச்சு - மனம்
உருக்குலைந்தும் குறையவில்லை
உன்னினைவின் வீச்சு !
துறந்திடவே எண்ணுகிறேன்
துதிபலவும் பாடி - விதி
துரத்துதடி தேடி - இனித்
துளிர்விடுமோ தாடி - உடல்
துண்டுதுண்டாய் வெட்டிப்போட்டும்
துடிக்குதடி நாடி !
************
25 கருத்துகள்:
வணக்கம் பாவலரே
நீண்ட இடைவெளிக்க பிறகு அற்புதமான கவிதை தந்தீர்கள் இரசித்து படித்தேன் தொடர்ந்து எழுதுங்கள்
நேரம் இல்லையெனில் வேலையில் கட் அடித்து எழுதுங்கள் ஸ்கூலில் கட் அடித்த அனுபவம் உண்டல்லோ....
நான்காவது கவிதை வரிகள் மிகவும் பிடித்தது...
பலமுறை முயன்றும் தமனா இணைய மறுக்கின்றாள்.
#துயில்கொடுக்கும் நஞ்சு#
துயில் கெடுக்கும் நஞ்சுகூட :)
நீண்டநாட்களுக்குப் பிறகு, வலையில் தங்களின் வருகை
மகிழ்வைத் தருகின்றது
தொடர்ந்து வாருங்கள் நண்பரே
ஆவ்வ்வ்வ் மீதான் ரொம்ப லேட்டுப்போல இங்கு. இன்னும் தமனா க்கு கவிதை எழுதுவதை நிறுத்தவில்லைப்போலும்...
///துறந்திடவே எண்ணுகிறேன்
துதிபலவும் பாடி - விதி
துரத்துதடி தேடி //
புளொக் ஓபின் ஆனாலே சூப்பர் பாட்டு பாடத் தொடங்கிவிடுகிறதே...
அழகிய கவிதை.. இனித் தொடர்ந்து பல கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.
வணக்கம் ஜி !
தங்கள் முதல் வருகைகண்டு மிக மகிழ்கிறேன்
நேரம் கிடைத்தும் எழுத முடியவில்லை வருந்துகிறேன் இனி முயற்சிக்கிறேன் தொடர்ந்து எழுதுவதற்கு மிக்க நன்றி
இந்த தமன்னா பெரிய தொல்லை பண்ணுது சிலருக்கு
என்ன ஏதுன்னு பார்க்கிறேன் மீண்டும் நன்றிகள்
வணக்கம் தனபாலன் சார் !
தங்கள் வருகையும் என்னை மகிழ்விக்கிறது நன்றி
எல்லோருக்கும் எல்லா வரிகளும் பிடிக்கும்படி எழுத முயல்கிறேன்
வாழ்க நலம்
வணக்கம் வாங்க பகவானே !
துயில் கொடுப்பதும் துயில் கெடுப்பதும் அந்த மயிலுக்கு வேலையா போச்சு
என்ன செய்யலாம் ஜி நான் எழுதிய வரியில் முன் உள்ள தனிச்சொல்லையும் சேர்த்து படிக்கணும் (நீள்)
நன்றி ஜி வாழ்க நலம்
வணக்கம் கரந்தை மைந்தரே !
தாங்கள் சொல்லியும் வராமல் இருக்க முடியுமா
இனி அடிக்கடி வருகிறேன் கவிதைகளோடு சரிதானே
மீண்டும் நன்றிகள்
வாழ்க நலம் !
வணக்கம் பூசாரே !
தாங்களின் வருகை தாமதம் ஆனாலும் தடாலடியா இருக்கும் இல்லையா
ம்ம்ம் வருகைக்கு நன்றி ! ஆமா தமனாவ மறக்க முடியுமா அவ தங்கமல்லோ ஆங்.....
கவிதை நல்லா இருக்கோ இல்லையோ பாட்டாவது நல்லா இருக்கட்டும் என்றுதான் போட்டேன் யாரும் தப்பு என்று சொல்லவில்லை சொன்னாள் பாடலைத் தூக்கி விடுகிறேன் சரிதானே !
தங்கள் எதிர்பார்க்கைகள் இனி நிறைவேறும் அடிக்கடி கவிதைகளோடு வருகிறேன் மியாவ்
மீண்டும் நன்றிகள்
வாழ்க நலம் !
அருமையான எண்ணங்கள்
தங்கள் பாவண்ணங்களில்
நாங்கள் காண முடிகிறதே!
ஆவ்வ்வ் மிக்க நன்றி மேஜர்.. உங்கள் பக்கம் ஏனோ கொஞ்சம் ஸ்லோவாகவே இருக்குது ஓபின் ஆக.. மிக அழகாக வடிவமைச்சிருக்கிறீங்க.. இன்னொன்று கொமெண்ட் போடுவதும் ஒரே பொக்ஸில் ஓபின் ஆனால் நன்றாக இருக்கும்போல இருக்கு.. சரி அது உங்கள் விருப்பம்.
ஆஹா..மிக்க அழகான சொல்லாடல்
அழகு அழகு கவியே
தமன்னா 4
அருமையான வரிகள் .ரசித்தேன் .
வணக்கம் ஜீவலிங்கம் ஐயா !
தங்கள் வரவில் மன நிறைவு காண்கிறேன்
எல்லோரும் இரசிக்கும் படிதான் எழுத முயல்கிறேன் தங்களைப் போன்றோரின் வாழ்த்து அந்த எண்ணத்தை வளர்ந்திடச் செய்யும் வாழ்த்துகள் மீண்டும் நன்றிகள் !
வணக்கம் பூசாரே !
தங்கள் மீள்வருகைக்கு நன்றிகள் ! என்னவோ தெரியல்ல எல்லோரும் உங்களைப்போலத்தான் சொல்கிறார்கள் அனிமேசன் இருப்பதாலா அப்படி என்று தெரியவில்லை முடிந்தவரை மாற்றம் செய்கிறேன் அடுத்து கருத்திட அதே பெட்டியில் வசதி செய்ய முடியவில்லை எதுக்கும் நம்ம வலைச்சித்தரை அணுகிப் பார்க்கிறேன் நன்றிகள் மீண்டும் !
வணக்கம் லோஜி !
தங்கள் வருகை வலைப்பூவிலும் கண்டு மிக மகிழ்வு கொள்கிறேன் அடிக்கடி வாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றிகள் கோடி லோஜி !
வாழ்க நலம்
வாங்க வாங்க கில்லர் ஜி !
மீண்டும் தமனாவுக்காய் வந்தமைக்கு தமனாவோடு வந்தமைக்கு நன்றிகள் !
வணக்கம் நேசன் !
தங்கள் வரவும் கருத்தும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன நன்றிகள்
வாழ்க நலம் அடிக்கடி வாருங்கள் ஆதரவு தாருங்கள் !
சீராளன் - உங்கள் கவிதையை ரசிப்பதற்காகவே வந்தேன்.
இதழில் கசியும் துளி-இதை நினைத்து மனம் ஏன் வாடவேண்டும்? கண்ணில் நீர் சொரிந்தால் வாடலாம்.
பருவவெழில் - இல்லை. பருவயெழில்
பருவங்களைத் தன்னும் - அர்த்தம் புரியலை தன்னும் வார்த்தைக்கு
3+3 வரியுள்ள பாடல். சந்தத்தோடு படிக்கும்போது, கண்ணி குறைவதாக மனசுக்குத் தோன்றுது (4+4 ஆக இருந்தால் அப்படித் தோன்றியிராது).
பாராட்டுக்கள்.
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
கருத்தும் சந்தமும் அருமை . நன்றி
அய்யா....உண்மையாகவே உங்கள் கவிதை அனைத்தும் மிக மிக அருமையாக இருகின்றன...!
கருத்துரையிடுக