சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 5 ஜூலை, 2012

வலிகள் புதிது....!


ஆயிரம் நாட்கள் அழிந்த மனதில் 
அன்பு சொரிந்து அமிர்தமிட்டாய்...
முதல் துளிர் முளை விடும் போது....
முன்பனியில் விசமிட்டு ஏன் தெளித்தாய்........!


குயிலின் குரலை ரசிக்கும் குருடன்
குயிலை காண்பதில்லை....உந்தன்
குழலில் வாடும் ரோஜா இதழை..
குடைகள் ரசிப்பதில்லை......!

இருந்தும் இல்லா இதயம் நோக
எனக்குள் ஏன் வந்தாய்.-எந்தன்
ஈரம் காய்ந்த விழிகளின் நடுவே
ஓரக்கண்ணால் ஏனோ உயிர் பறித்தாய்....!

உயிரை கசக்கிய நினைவுகள்
விழிகளை நனைக்கிறது...என்றும்
மருவிடா உந்தன் நிழலை
அருவிகள் சுமக்கிறது....!

ஆனால் உன் மனம் மகிழ்கிறது
அதுதான் நிஜமென சிரிக்கிறது.-எனக்கோ
உறவின் வலிகள் சுமப்பதனால்
உள்ளம் என்றும் கல்லறைதான்....!

பொய்மை அகற்றும் மெய்யறிவாக
பெண்மை போற்றிடுவாய் -யாரும்
பேயன் என்போல் வந்தால் அவனை
என்போல் கொன்றிடுவாய்....!ப்ரியமுடன் சீராளன் 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

nalla arthangkal seer ean ivattai eluthum alavittku manathil kayam enna

சீராளன்.வீ சொன்னது…

oru kaayamum illai pa summaa..kaayam maathiri thz