சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 3 ஜூலை, 2012

உனக்கும் காதல் வரும் ...!உனக்கும் காதல் வரும்
உயிரை குடிக்கும் பொழுதிலும்
உண்மையாய் காதலிப்பாய்...
வேற்றுக்கிரகத்திலும் இடம் தேடுவாய்..
கனவிலே கட்டுவாய் தாஜ்மஹால்
பிரிவுகள் நிரந்தரமாய் போனாலும்...
பிரியாத நினைவுகளோடு...
மீண்டும் சுவாசிப்பாய்....!

உனக்கும் காதல் வரும்...
வென்றகாதல் என்றும்
வரலாறாய் போனதில்லை..
அறிந்திருப்பாய்...
சலனம் இல்லாத மனத்தோப்பில்..
உள்ளம் இரண்டும் ஊஞ்சலாட...
கூடுகட்டி குடியிருப்பாய்...
தென்றலை மட்டுமே சுவாசிப்பாய்...
அங்கேயும் புயலடிக்கும்...
ஆடிய ஊஞ்சலிலே தூக்குப்போடுவாய்...!

உனக்கும் காதல் வரும்
மரணத்தின் மீது...
மடிமீதிருந்து மழலை மொழிபகர்ந்த..
மல்லிகையை  தேடுவாய்...
உதிர்ந்திருக்கும் உன்னிலிருந்து..
சுவாசங்கள்மோதிய இடம்
சூரியனாய் சுடும்...
இதயத்தின் அசைவுகள்...
கண்களில் தெரியும் காரணம் ..
கண்ணீரும் சுடும்
மீண்டும் காதலிப்பாய் கனவுகளை..!

உனக்கும் காதல் வரும்....
உன் ஒவ்வொரு புலம்பலும்
கவிதையாகும்
விம்மல்கள் வீணையை 
மிஞ்சிடும் ராகங்களாய்...
நீயும் கலைஞனாவாய் ...
அழுவது நீமட்டும் இல்லை
ரோஜாவும் என்பதை காம்புகள் சொல்லும்..!

மீண்டும் காதலர் தினம்..
காத்திருப்பாய்...
புதிய நட்புகள் வந்துசேரும்..
காதலோடு அல்ல கண்ணீரோடு..
உண்மையாய் அழுவாய்
உனக்கும் காதல் வரும்..
இப்போ....
எதிர்பால் இடத்தில் அல்ல...
ஏழ்மையின் இதயத்தில்...!

ப்ரியமுடன் சீராளன் 

2 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

உன் ஒவ்வொரு புலம்பலும்
கவிதையாகும்
விம்மல்கள் வீணையை
மிஞ்சிடும் ராகங்களாய்...
நீயும் கலைஞனாவாய் ...
அழுவது நீமட்டும் இல்லை
ரோஜாவும் என்பதை காம்புகள் சொல்லும்..!

எல்லோருக்குள்ளும் க◌ாதல் வரும் என்பதை அழகா சொல்லும் வரிகள் அருமை.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா