சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 2 July 2012

ஷகியே...!வலமிருந்து இடமாய்
மாறிச்சுழலும்
வாழ்க்கை கடிகாரம் ......!


நிழலை தொலைத்த நிலமாய்
கானல் நீரோடு கட்டிப்புரளும்
மனதின் ஓரம்......!

இமைகளை நனைத்தபடியே
ஞாபகங்கள் விழிகளோடு
நாட்டியமாடும் .......!

பூவாய் நீ சொரிந்த
புன்னகை எந்நாளும்
தென்றலோடு தவழும் ........!

ஆனால்.....
நீ விட்டுப்பிரிந்த நேரம் மட்டும்
விம்மியழுதே வியர்க்கிறது
உயிரோடு ஒவ்வொருநாளும் .....!

ஷகியே...!
சரணம் இல்லா கவிபாட
சத்தியமாய் முடியவில்லை...
மூன்றாம் விழியில்
முகம் புதைத்தால்
உண்மை காதல் இல்லை..!

எனவேதான்....
இழைகளை அறுத்து
இறந்து போகின்றேன்
காதல் மீதங்களுடன்..
இருந்தும் இதயம் உனக்காய்
என்றும் துடிக்கும் ....!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: