சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 2 ஜூலை, 2012

ஒரே நாளில்...!நீ எங்கே என்று
இதுவரை தேடியதில்லை...
என் உயிருக்குள்ளே...
ஊஞ்சல் கட்டி...
உன்னை தாலாட்டியதால்...
நீ எங்கே என்று 
இதுவரை தேடியதில்லை..!

அன்று மரணவீட்டின் 
மத்தாப்பும்...
திருமணவீட்டின் 
கெட்டிமேளமும்...
எதிரெதிர் திசைகளில்...
கேட்டபின்புதான..
அறிந்து கொண்டேன்....
என்னைப்போல் ஒருவனின்
மரணமும்
உன் மண வாழ்வும்...
ஒரே நாளில் அரங்கேறியதை...!

எத்தனை இதயங்களை...உன்..
வசந்த மாளிகைக்காக 
அத்திவாரம் இட்டாய்...
எத்தனை உயிர்களை...
யாகத்தீயில்...இட்டு...
மணமாலை..சூடிக்கொண்டாய்....!

வேண்டாம்....
மௌனங்களை....
விடைகளாக்கி கொள்வதால் மட்டும்...
வாழ்வியல் பாடம்......
வெற்றி பெறுவதில்லை....
ஓரப்பார்வையால்...
உயிரை கசக்குவதை விட...
உள்ளம் திறந்து 
பொய் உரை தப்பில்லை...
கண்ணீராவது...மீதங்களாகும் ...!

ப்ரியமுடன் சீராளன் 

2 கருத்துகள்:

punithavella சொன்னது…

மனம் கணக்கிறது...

சீராளன்.வீ சொன்னது…

உண்மைய சொன்னால் மனம் கனக்கத்தான் செய்யும் ....நன்றி புனிதா