சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 2 ஜூலை, 2012

நிதர்சனம்..!சாட்சிகள் வைத்து
பூக்கள் பூப்பதில்லை -அது 
வாடகைக்கு வாசம் சேர்ப்பதில்லை....!வாழ்வும் புதையலாய் 
மறைந்திருக்கும்-வலி
மேகத்துளிபோல் ஒளிந்திருக்கும்....!

தேடிப்பெறுவதே 
நிலைத்திருக்கும்-விழி 
தேடாவிடியல் இருட்டிருக்கும்....!

ஓரப்பார்வைகள் 
அர்த்தமில்லை -காதல்
உள்ளத்தீயில் எரிவதில்லை......!

ஊமை மொழியில்
உயிர்ப்பிருக்கும் -இமை
தாழும் பெண்ணிலே பயிர்ப்பிருக்கும்....!

வானும் மண்மடி
காதலிக்கும்-அது
மழைத்துளியூடே பூஜிக்கும்...!

சொல்புதிது சேர்க்கும்
புதுகவிதைகள் -அவை
சுருங்கக்கூறின் சுவையாகும்....!

எல்லாக்கனவும்
பலிப்பதில்லை-உயிர்
இல்லாநினைவுகள் நிலைப்பதில்லை....!

வல்லோன் புகழை
மறந்துவிடில்-உயிர்
வாழ்தலில் என்றும் பயனில்லை.....!ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: