சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 2 July 2012

ஒரு நதி அழுகிறது
வைகைக் கரைகளிலே
வந்துபோன புன்னகைகள்
வயது வரா காதலுடன்
வழிமாறி போன ..
ஞாபகத் தடயங்கள்...!.


பாதச் சுவடுகளில்
பதிந்துவிட்ட மண் துளிகள்
கழுவிய கரைகளில்
காதலும் கரைந்த காவியங்கள்...!

அங்கே......
விரல்கள் பேச
விழிகள் தேட
ஒற்றைக் குடைக்குள்ளே
உல்லாசமாய் போன ..
அந்திப் பொழுதுகள்
வெறுமை காக்கும்....!


பாதக்கொலுசுகளில்
பளபளத்த வெள்ளிகளும்
பெற்றோர் வலியென்று
பிரித்தறியா தாவணிக்கு
நதியோர நாணல்கள்
சாட்சி சொல்லும்......!

எல்லை புரியாத
ஏகாந்த பயணங்கள்
விம்மி விம்மி வேதனை சுமக்க
ஒற்றைச் சுவாசம்
உயிரைப் பிழியும் ....!

அனுபவம் தளிராய்
அறியாப் பருவம்
தவறுகளுக்கு சாட்சியின்றி
தனித்திருக்கும்.....!

தினம் தினம்
தீண்டிய தென்றலில்
கரைந்துபோன நாட்களோடு
காதலர்கள் கண்சிவக்க
நதியோரம் சுயமாய் அழுகிறது....!

=====================

ப்ரியமுடன் சீராளன்...

2 comments:

சசிகலா said...

வரிக்கு வரி பிரிவின் நிமித்தம் தெரிகிறது.

சீராளன்.வீ said...

நன்றி