சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 20 டிசம்பர், 2012

நிழல் படா நிலங்கள்...!


நாணக்குடம்  தளம்பி 
நளினம் முத்துதிர்த்த உன் 
வெள்ளிக்குரல் அசைவில் 
வீழ்ந்துவிட்ட ரசிகன் நான்...!

மொழியுருக்கி மூச்சில் 
செழுமை உருவார்த்து 
எனையுருக வைத்த நாமம் 
எங்கிருந்து பெற்றாய் நீ.....!

அந்தி வெந்தொருநாள் 
அரையிருட்டு எமை மூட 
முந்தி உன் மூச்சு தந்த 
முதல் காதல் மறக்கவில்லை...!

புனலிடை அமிழ்ந்தென் 
உயிர் குமிழி ஓலமிட 
தணலிடை பூவாய் நீ 
தவித்த நொடி  அறிந்தேன் நான் ...!

சிரம் தனில் புது வலி 
செதுக்கிட விழித்துழி 
கரையினில் நுரையோடு 
கரைந்தன நம் தடங்கள்  ..!

நிழல் தடவி நீர் விலகா 
நிஜம் மேவும் நிலை உணர்ந்து 
நீயும் வாழ்ந்திட கற்றுக்கொள் 
நிம்மதித் துளிர்விட்டே,,,,!

பிறிதொரு பிரிவில்லா 
பிறப்புக்குள் பிறந்தங்கே 
பிரியமாய் சேர்ந்திருப்போம் 
பிரம்மனிடம்வரம் வேண்டி...!

ப்ரியமுடன் சீராளன் 3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அந்தி வெந்தொருநாள்
அரையிருட்டு எமை மூட
முந்தி உன் மூச்சு தந்த
முதல் காதல் மறக்கவில்லை////////////

நான் தூக்கத்திலும் சிரிக்கிறேன்
உன் நினைவில்....
பார்பவர்கள் என்னை பயித்திக்காறன்
என்று சொல்லுகிறார்கள்....

பார்ப்போருக்குதான் நான் பயித்தியக்காறன்....
ஆனால் அவர்களும் உனர்வார்கள்
காதலை உள் வாங்கம்
யாரு பயித்திகாறன் என்று...... போதுதான்....மிக அருமையான வரிகள் அண்ணா,,,,

சசிகலா சொன்னது…

பிறிதொரு பிரிவில்லா
பிறப்புக்குள் பிறந்தங்கே
பிரியமாய் சேர்ந்திருப்போம்
பிரம்மனிடம்வரம் வேண்டி...!

பிறியாதொரு வரம் வேண்டி அடடா அழகான வரிகள்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி சசி கலா