சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தலையணைகள் சுடுகிறது...!


ஏங்கித் தவித்திங்கே   
எந்நாளும் அழுகின்றேன்-தினம் 
தாங்கிக் கொள்கின்ற
தலையணைகள் சுடுகிறது...!

மண்ணில் பிறந்துவிட்டேன் 
மலருக்குள் இறப்பதற்கு
உன்னில் நனைந்துவிட்டேன்
உயிருக்குள் எரிவதற்கு...!

என்னை சுமப்பதற்கு
இதயத்தில் ஜீவன் இல்லை
உன்னை சுமப்பதனால்
உயிருக்குள்  வலி இல்லை...!

இளவயது ஞாபகங்கள்
இலையுதிர் காலமாய் 
விழிகளை உழுதுவிட்டு 
வெறுமைகளை விதைக்கிறது ...!

சிரிக்காத சிலைபோலே
செதுக்கிவிட்டேன் என் வாழ்வை
மரித்தாலும் மறக்காது 
உன் மனம் சொன்ன மௌனங்கள்...!

என் வாழ்வு நாடகத்தின்
ஏகாந்த ராத்திரிகள்
எழுதிய கவிதைகள்தான்
ஏளனமாய் சிரிக்கிறது......!

முளைத்தாலும் வேர்விடாத
உயிர் அற்ற வித்தானேன்
வலித்தாலும் ரசித்திங்கே
வாழுகின்றேன் உன்னினைவில்....!

ப்ரியமுடன் சீராளன் 


2 கருத்துகள்:

shammi's blog சொன்னது…

நினைவலைகள் .....
நீந்திடும் நேரம் ..
கவிதைகள்
கனவுகளின் சாரம்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி Shammi
தங்கள் கருத்துரைக்கும் என் தேசத்தில் விழி பதித்தமைக்கும்