சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Sunday 30 September 2012

விலையற்ற விம்பம் நீ...!பிடிக்கும் என்று பிரியப்பட்டே 
முடித்துக்கொண்ட முள்வேலி 
துடிக்கும் வரை ரசித்தே
கடித்துக் கொன்றது  காதலை..!

திடம் இல்லா காற்றுக்கு
சருகுகளும் பாரம் போல்
முடம் கொண்ட உன் அன்பில்
மருகிவிட்டதென்  மனைமாட்சி...!

திருடப்பட்ட என் வானத்தில்
ஒளிந்துகொண்ட மேகம் நீ
தெளிவற்ற ஒளியைபோல் 
விதிமொழிந்தாய்  புரியவில்லை...!

உறைநிலை அடைந்திட
கானல் நீர் நிஜமில்லை
இறைநிலை எய்திட 
காதலொன்றும் வேதமில்லை.....!

இயல்பான இம்சைகள்
இதயத்தில் பழக்கமானதால்-உன்
அசட்டுப்பார்வைகளால் 
என் திசைகள் என்றும் திரும்பிடாது.....!

அருகில் இருப்பது
ஆண்டவனாய் இருந்தாலும் 
அழும் குழந்தைக்கு 
அம்மாவைத்தான் பிடிக்கும்...!

விலகி நிற்பினும்
பழகி மறப்பினும்
தொலையவில்லை-உன்
விலையற்ற விம்பம் என்னில்...!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: