சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 20 அக்டோபர், 2012

மழைக்கால கனவுகள்..!


மழைக்கால குடைக்குள்ளே
பனித்துளிகள் மின்மினுக்க
இதழோர நடுக்கத்தில் 
என்னவளின் வீதி உலா...!

தெருவோர நீரோட்டம்
கொலுசுகளை கழுவிவிட
ஆங்காங்கே மேடுபள்ளம்
அவள் பாதம் தேடி வைக்க..!

கடதாசித்  தோணியுடன்
காத்திருக்கும் சிறுவரெல்லாம்
நடைபாதை விட்டு வழி
விழி விரிய பார்த்து நிற்க..!

காற்றோடு சாரல்கள் 
காதுமடல் ஊடுபுக
கண்ணிறைந்த கனவுகளை
கட்டியணைத்த வாறே..! 

கார்குழலின் நீர்த்துளிகள்
மார்போடு கவிஎழுத
சிலை  போல வந்தவளின்
தலை துவட்ட துடித்தெழுந்தேன்...!

சுவரோடு தலைமுட்ட
விழி திறந்தேன் அந்தோ..!
மழைக்கால கனவொன்று
மனம்கொத்தி போகிறதே....!
 
ப்ரியமுடன் சீராளன் 


கருத்துகள் இல்லை: