சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 20 அக்டோபர், 2012

பிரியாவிடை ...!


எதிரும்,புதிருமாய் பேசுகிறாய்
மௌனமாய் கேட்க்கிறேன்
நீ அறிவாளி என்றோ
நான் மடையனோ என்று அல்ல...!

சந்தர்ப்பங்களின் விலங்குக்குள்
மூர்ச்சை அடையும் என்னால்
பவ்வியமாய் பதில் சொல்லி-உன்னை
பக்குவப்படுத்த நேரமில்லை
எல்லை தாண்டி விட்டேன்...!

இது மனச்சிறையின் மயானம் 
சூன்யமாய் போன வாழ்வுக்குள்
வெகுமதி சேர்க்கும் சூரிய கிரகணம்...!

நிழல்களுக்கும் இங்கே
அழைப்பிதழ்  இல்லாத போது
நிஜமான நீ மட்டும்
இறுதிச் சடங்கிற்கு வந்திடாதே...!

இருவரும் சேர்ந்த
இதயத்திற்கு மட்டும்
தெரிந்ததாய் இருக்கட்டும்
நாம் சேர்ந்ததும்,பிரிந்ததும்
நீலிக்கண்ணீர் வடித்து
சேலைக்குள் சிணுங்காதே   
வாழ்வுக்குள் முகம் புதைத்து
வானம் பார்.....!
ஒருவேளை பிரியும் ஆன்மா
பிரியத்தோடு உன்னிடம்
பிரியாவிடை சொல்லிப்போகலாம்...!

அன்றோடு மறந்துவிடு
என்னையும்,எதிர்த்துப் பேசும்
உன் பழக்கங்களையும்
வருங்காலங்களாவது
உனக்கு வசந்தங்களாகட்டும்...! 

ப்ரியமுடன் சீராளன் 


கருத்துகள் இல்லை: