சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 24 செப்டம்பர், 2012

காதலை விட அது சுகமானது...!இயற்கையின் மறுபக்கத்தில்
எனக்கும் இடம் கொடுங்கள்
சுவாசங்கள் இல்லாமல் வாழ்கிறேன்
காதலைவிட அது சுகமானது....!

தவிப்புக்களில் தலைகீழாய்
தடம்புரளும் வாழ்வைவிட
நெருப்புக்குள் விடும்
கடைசி மூச்சு இதமானது...!

ஒற்றை சொல்லில் காதல்
ஒவ்வொரு உயிருக்குள்ளும் இதுதான்
இதயத்தில் இடுகாட்டை
நிரப்பிச் செல்கிறது ....!

எழுதும் போது இனித்தமடல்
இறக்கும்வரை கசக்கவில்லை
எழுதியதெல்லாம் எனக்கான
இரங்கல்பா என்பதனால்...! 

இன்னும் புரியவில்லை எனக்கு
வேரில் இருந்து அரும்புவரை
வெயிலில் இருந்து நிழல்கள்வரை
வர்ணனைகள் வரிகளாய் கொட்டுவது....!

காதல் கருவாகவில்லை என்று 
கடைசி நாளிலாவது தெரிந்திருந்தால்
காற்றும் காயமின்றி வாழ்ந்திருக்கும்
கல்லறைகூட கலங்கி இருக்காது...!

ப்ரியமுடன் சீராளன்  

கருத்துகள் இல்லை: