சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 5 நவம்பர், 2012

இன்னொரு யுகம் வேண்டுகிறேன் ..!


ஒரு போதும் விடியாத 
உலகத்தில் பிறந்ததுபோல் 
வாழ்வில் ராத்திரிகள் மட்டும் 
விடியலுக்காய் ஏங்கியவாறே ....!

சொல்லாத கவிதைக்காய்  
கண்களின் பதில்கள் 
சொல்லிய வலிகள் 
சொர்ப்பனங்களாய்...!

கல்லா மொழிக்குள் 
கரை அற்ற பொக்கிசத்தை 
மெல்லா இதழ் என்று 
திரைஇட்டது  மௌனம் ...!

ஒற்றை நிலவுக்காய் 
மெத்தை இட்ட மேகத்தை 
வித்தை  வித்தை என்று 
விரட்டியதே விண்மீன்கள்...!

பச்சை கனி என்று 
இச்சையற்ற கிளிபோல 
எச்சிலை என்று எறிந்துவிட்டாய் 
எல்லாமுமாய் இருந்துவிட்டு ...!

அன்றுமுதல் ஜனனம்,மரணம் 
இரண்டு நிலைக்குள்ளும் 
இதயம் இறுக்கப்பட்டது 
இன்னொரு யுகம் வேண்டி...!

ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: