சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 30 ஜூன், 2012

ஏன் இப்படி.....!இயற்கையின் எழிலில்
இதயம் காயும் காதலே
நூறாண்டுகள் தவத்தின்
வரங்களாய் போன சாபத்தில்
இன்னுமா இடைவெளிகள் ....!


அறிவின் நுண்ணியம்
அழகின் ஈர்ப்பு
அறியாத உணர்ச்சியா நீ...!

உயிரில் உருகும் உன்னதம்
காதலில் மட்டுமென்றால்
தற்கொலை இல்லையே பறவைக்கு....!

இதய துடிப்பு
இரவு தூக்கம்
மூச்சுக்காற்று
வாய்வழி உணவு
எல்லா உயிர்க்கும்
உண்டென்றால்....
மனிதனுக்கு மட்டுமேன்
மனதோடு மரணம் ....!ப்ரியமுடன் சீராளன் 


கருத்துகள் இல்லை: