சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 30 ஜூன், 2012

ஆசைகள்...!எனக்கும் ஆசைதான்.....
முன்பனித்துளியில்
மலராய் பிறக்க
அருவியின் இசையில்
இலைகளாய் ஆட...!***
அரும்பும் பூவில்
அமிர்தம் சேர்க்கும்
செந்தேன் கூட்டில்
சித்திரம் வரைய....!
***
இலையுதிர் கால
நிர்வாண மரமாய்
வேர்கள் தோறும்
வெட்கம் கொள்ள
***
மின்னலின் ஒளியில்
விண்மீன் ரசிக்கும்
செந்தாமரைக்கு
செவ்விதழ் ஆக ...!
***
மூங்கில் காட்டில்
முத்தம் கொள்ளும்
சொலைக் கிளியின்
சொர்ப்பனமாக.....!
***
பால்வெளி தோறும்
பயணம் செய்யும்
விண்கல் சுமக்கும்
வெப்பக்காற்றில்
தென்றல் சேர்த்து
திசைகள் மாற்ற...!
***
ஆனால்...
மனிதனாய் பிறந்து
மனவலி கொண்டு
வேர்கள் அரிக்கும்
வெண் புழு நடுவே
பட்ட மரமாய்
பச்சையம் இழந்து
பாடைகள் சுமக்கும்
பல்லக்காகி..........
தேரோடும் மண்ணில்
தெருப்புல் ஆனேன்.....!

ப்ரியமுடன் சீராளன்  

கருத்துகள் இல்லை: