சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 28 ஜூன், 2012

வந்து விடு நிலவாக..!மலர்கள் தழுவிய 
பனித்துளியின்
மகரந்த வாசனையில் ..லயித்திருக்கும் 
வண்ணத்து பூச்சியாய் -உன்
நினைவுகள் மெழுகிய

விழித்திரையில் 
யாசகம் செய்கிறேன் 
நீ வருவாயென ..........!ஒரு பூங்காவனம்

இன்னும்
கன்னிமலர்களோடு காத்திருக்கிறது...
உன் வரவுக்காய்...
வந்து விடு நிலவாக..
வண்ணமலர்கள் இதழ் விரிக்க ..!


அங்கேயும் 

ஒற்றை ரோஜா ஒன்றின்...
ஒப்பாரி உன் பேர் சொல்கிறது...
உயிரியல் வட்டத்தின் 

தொடக்கமா நீ...?

பருகு நீரா இல்லை பாவநீரா
ஆணிவேர் கூட அழுகிறதே..
உன்னை தீண்ட முடியாமல்..
மாலை வரை மலரின் வாசம்-பின்
மறைந்துவிடும் மண்ணோடு...!


ஆனால் இறந்தும் இறவாத காதலை
எனக்குள்ளே விதைத்தவளே
கண்ணோடு நீ பகிர்ந்த ...
கனவுகள் நிஜமாக காத்திருப்பேன்...
காலமெல்லாம் ...உனை காக்க..
வாழ்ந்து விடு வலிகளின்றி
வையகத்தின் எல்லைவரை....
!        ப்ரியமுடன்  சீராளன் 

கருத்துகள் இல்லை: