சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 28 ஜூன், 2012

வாசமோடிருப்பாய்....!மூன்றாம் பிறையெனினும்
முழு நிலவாய் ரசித்த என்னை 
வேண்டாம் என்பதற்கு 
வேதமென்ன நீ படித்தாய்....!ஆழ்கடல் முத்தாய்
அகழ்ந்தெடுத்த உன் உறவை
வீண்பழி சொல்லியேன்
வேரறுத்தாய் விதியென்று....!

நீரின் நிறமறிந்து 
நிலமரங்கள் முளைப்பதில்லை
சோலைகள் தவறென்று
கூடுகள் கலைவதில்லை....!

மல்லிகை தண்டுக்குள்
மரம்கொத்தி வாழ்வதில்லை
மெல்லிசை ராகத்தில்
சுரமேறி நிற்ப்பதில்லை...! 

கலைவதற்கு கனவல்ல 
காதலெனும் சிலுவை-அங்கே 
வடிவது குருதியல்ல
வாழ்க்கையின் சரிதம் .....!

கருங்காலி தோட்டத்தில்
சந்தன வாசமாய்
தெருப்புல்லான என்னை
கரும்பாக்கிய காதலே
காயாமரத்துக்கும்
கல்லெறிகள் விலக்கல்ல
கண்கெட்ட பின்னாலும்
ஞாபகங்கள் தடைகளல்ல    ...!

உதிரும் சிறகும் 
ஒருநாள் முளைக்கும்
உதிரா நினைவை
எரித்தாய் என்னில் ....!

என்றோ ஒருநாள் 
உன் வாலிப சிறகுகள்
வலிமை இழக்கும் போது
திரும்பிப் பார்......
உருமாற்றம் அடைந்திருக்கும்
உனைசுமந்த இதயத்தில்
நீ மட்டும் வாடாத ரோஜாவாய்
வாசமோடிருப்பாய்....!
.....................................

ப்ரியமுடன் சீராளன் 

4 கருத்துகள்:

nesamudan aarthy சொன்னது…

wow.............!!
என்றோ ஒருநாள்
உன் வாலிப சிறகுகள்
வலிமை இழக்கும் போது
திரும்பிப் பார்......
உருமாற்றம் அடைந்திருக்கும்
உனைசுமந்த இதயத்தில்
நீ மட்டும் வாடாத ரோஜாவாய்
வாசமோடிருப்பாய்....!
ithayatthai urasi vaitha varigalivai!!

சீராளன்.வீ சொன்னது…

நன்றி ஆர்த்தி

punithavella சொன்னது…

"உதிரும் சிறகும்
ஒருநாள் முளைக்கும்
உதிரா நினைவை
எரித்தாய் என்னில்.." அருமை

சீராளன்.வீ சொன்னது…

மிக்கநன்றி புனிதா