சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 27 ஜூன், 2012

என் பயணம்....!அதிகாலையில் 
அழுது கொண்டே விரியும் 
நிலவின் அறிவுரை
கேட்காத மொட்டுக்களாய் 
உன் மௌனம் .......!


தியானம் செய்யும்
மனதில் தீப்பிழம்பாய்
இதயம் எரிக்கும்
உன் நினைவுகள்......!

விழிகளின் விளிம்பில்
விழத்துடிக்கும் கண்ணீராய்
விலகிட நினைக்கின்றேன்
முடியவில்லை.....!

ஆனபோதும்...
மறக்காமல் மகிழ்விக்கும்
ஞாபகங்களை தந்த உன்
சில்மிசங்களுடன்
தொடர்கிறது என் பயணம்....!

    ப்ரியமுடன் சீராளன் 

1 கருத்து:

Priya சொன்னது…

பயணம் தொடரட்டும் நிறைய எதிர்பார்புகளுடன்...........