சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 30 ஜூன், 2012

வேண்டாம் ... !நிஜங்களோடு 
சலனப்படும் நிமிடங்கள்.......!


* * *
காற்றோடு கரையும்
கண்ணீர் துளிகள்.....!
***
வலிகளுக்கே சொந்தமான
வாழ்க்கை....!
***
போதுமடா சாமீ
உன் பிறப்பின் பயன்.....!
***
விழியை கேட்டு
அழகை நீட்டினாய்.....!
***
வழியை காட்டி
முட்கள் கொட்டினாய்....!
***
ஒளியை கொடுத்து
இருளில் முட்டினாய்....!
***
காதலை மறைத்து
கல்லறை காட்டினாய்...!
***
இத்தனைக்கும் என் செய்தேன்
உன்னால் நான் பிறப்பதற்கு.....!
****
வேண்டாம் ...
நீக்கிவிடு மீள் பிறப்பை
இல்லையேல் நிறுத்திவிடு
என் உயிர் படைப்பை...!ப்ரியமுடன் சீராளன் 

கருத்துகள் இல்லை: